PDA

View Full Version : அழகானவளே..!



யாழ்_அகத்தியன்
08-11-2007, 12:03 PM
இனி வெக்கப்படும்போது
என்னை உன் கைகளில்
ஏந்திக்கொள்

நீ
முகத்தை பொத்திய
பின் வெக்கப் படுவதையும்
நான் ரசிக்க வேண்டும்

*
பேசாமல் நான் சிவப்பு நிறத்தில்
பிறந்திருக்கலாம் இப்படி நீ முத்தம்
கொடுத்த (கடித்த) இடத்தை கஸ்ரப்பட்டு
மறைக்காமல் இருந்திருப்பேன்

*
ஒன்றை இழந்தால்தான்
ஒன்றை பெறமுடியும்
என்பது உண்மைதான்

எப்படி...
உன்னிடம் முத்தம்
பெறவேண்டும் என்பதற்காய்

என்னை நானே கிள்ளிவிட்டு
நீ கிள்ளியதாய் பொய் சொல்கிறேனே

*
என்னைக் காதலிக்க எங்கும்
போகாதே உன் நிழலிடமே
கற்றுக்கொள்

நீ
பார்க்காமல் போனபோதெல்லாம்
என்னை தடவிச்சென்றது அதுதானே

*
நீ
தாமதமாய் வருபதைக்கூட
என்னால் திட்ட முடிவதில்லை
திட்டினால் அவசரமாய்
போய்விடுவாயோ என்று

-யாழ்_அகத்தியன்

அமரன்
08-11-2007, 01:03 PM
இனி வெக்கப்படும்போது
என்னை உன் கைகளில்
ஏந்திக்கொள்
நீ
முகத்தை பொத்திய
பின் வெக்கப் படுவதையும்
நான் ரசிக்க வேண்டும்


மூச்சு முட்ட முட்ட
காதல் செய்வது என்பது இதுதானோ...!

மனோஜ்
08-11-2007, 01:16 PM
ஒன்றை இழந்தால்தான்
ஒன்றை பெறமுடியும்
என்பது உண்மைதான்
இது உண்மையிலும் உண்மை அகத்தியன்

ஓவியன்
22-11-2007, 10:25 PM
இனி வெக்கப்படும்போது
என்னை உன் கைகளில்
ஏந்திக்கொள்

நீ
முகத்தை பொத்திய
பின் வெக்கப் படுவதையும்
நான் ரசிக்க வேண்டும்

எல்லைகள் தாண்டாமலிருப்பதே
அழகு பல இடங்களில்,
இங்கேயும் அப்படித்தானோ...!!
இருந்தாலும் உரிமையுடன்
கை விலக்கிப் பார்ப்பதுதானே..!!

நன்றாக இருக்கிறது அகத்தியன்...!! :icon_b:

யாழ்_அகத்தியன்
30-11-2007, 03:03 PM
மூச்சு முட்ட முட்ட
காதல் செய்வது என்பது இதுதானோ...!


ஓ அப்படியும் காதலிப்பாங்களா..?
உங்க வாழ்த்துக்கு
மிக்க நன்றி

யாழ்_அகத்தியன்
30-11-2007, 03:04 PM
இது உண்மையிலும் உண்மை அகத்தியன்


ம்ம்ம் உங்க வாழ்த்துக்கு
மிக்க நன்றி

யாழ்_அகத்தியன்
30-11-2007, 03:06 PM
எல்லைகள் தாண்டாமலிருப்பதே
அழகு பல இடங்களில்,
இங்கேயும் அப்படித்தானோ...!!
இருந்தாலும் உரிமையுடன்
கை விலக்கிப் பார்ப்பதுதானே..!!

நன்றாக இருக்கிறது அகத்தியன்...!! :icon_b:


இனி கைவிலக்கிப் பார்கிறேன்
யார் சொல்லி தந்தங்க என்று கேட்ட
உங்க பெயர் சொல்லுறேன் சரியா

மிக்க நன்றி உங்க அருமையான
வாழ்த்துக்கு