PDA

View Full Version : அசத்தலானவளே..!



யாழ்_அகத்தியன்
08-11-2007, 12:00 PM
உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம்
உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன

அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்

*
உன்னைக்
காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும்
இருக்க கற்றுத் தந்த
என் காதல் ஆசிரியை நீ

*
குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ படாதுபாடு
படுவதுதான் என்னை
ரசிக்க வைக்கிறது

*
நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்
பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்

*

நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது நீ
மிகயழகு

அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு


-யாழ்_அகத்தியன்

ஓவியன்
19-11-2007, 05:26 AM
நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது நீ
மிகயழகு

அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு

உன் வெட்க முத்தத்தை
பார்க்க கூடாதென்பதற்காகவா
கண்களில் முத்தமிட்டாய்...!!

இரசனை சொட்டும் வரிகள் பாராட்டுக்கள் அகத்தியன்..!!

kavitha
19-11-2007, 05:44 AM
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்
:) கவிதை அழகு!


கொஞ்சம் இருக்கும்
மிச்ச இறகுகளிலும்
குருதி தெறித்து
குற்றுயிரும்
குலையுயிருமாய்
மீள வருகின்றன
நாம் அனுப்பிய
சமாதானப் புறாக்கள்...
பின் சொற்றொடர் 'வலி'.

ஓவியன்
19-11-2007, 05:52 AM
பின் சொற்றொடர் 'வலி'.

என்ன செய்வது சகோதரி...!!

வலிகளே வாழ்க்கையாகிவிட்டதனால் விளைந்த வரிகளவை..!! :frown:

யாழ்_அகத்தியன்
30-11-2007, 03:11 PM
உன் வெட்க முத்தத்தை
பார்க்க கூடாதென்பதற்காகவா
கண்களில் முத்தமிட்டாய்...!!

இரசனை சொட்டும் வரிகள் பாராட்டுக்கள் அகத்தியன்..!!



உங்க வாழ்த்துக்கு
மிக்க நன்றி

யாழ்_அகத்தியன்
30-11-2007, 03:12 PM
:) கவிதை அழகு!


பின் சொற்றொடர் 'வலி'.

மிக்க நன்றி
உங்க வாழ்த்துக்கு