PDA

View Full Version : தித்திக்கும் தீபாவளி..!



யாழ்_அகத்தியன்
08-11-2007, 11:54 AM
ஒட்டுமொத்த விளக்கையும்
ஒரே நேரத்தில் ஏற்றிவிட்டு
அழகு பார்க்கிறாய்

விளக்குகளோ நீ ஏற்றிய
சந்தோசத்தில் அணையப்போவது
கூடத் தெரியாமல் அழகாய்
எரிந்துகொண்டிருக்கிறது

*

நீ ஏற்றிய விளக்குகளில் எல்லாரும்
குளிர் காய்கிறார்கள் நான் மட்டும்
உன் இருவிழிப்பார்வையால் எரிந்து
கொண்டிருக்கிறேன்

*
பட்டாசே உன்னைக்
கொளுத்தி வீசுவதால்

வெடிக்காமல்
விட்டுவிடாதே

உன் ஒவ்வொரு
விரச்சாவிலும்தான்

என்னவள் என்னை
இறுக்கிப் பிடிக்கிறாள்

*
உன் கையில் இருக்கும்
விளக்கை நான் ஏற்றும்
வரை தெரியாது

சுட்டெரிக்கும் உன் கண்களால்
சுடாமலும் இதமாக பார்க்கத்
தெரியும் என்பதை

*
"தீபாவளி வாழ்த்துக்கள்"
என நீ அனுப்பிய குறுந்தகவலை
பாடமாக்கியபடியே விடியவைத்தேன்
என் தீபாவளியை

*
நீ
விளக்குகளை ஏற்ற
ஆரம்பித்தாய் இரவுகள்
தீபாவளி கொண்டாடத்
தொடங்கிவிட்டது

*
ஒரேயொரு முறை
தலை நிமிர்ந்தபடி
விளக்கேற்று

உன் முகத்தை ஏற்றிய
சந்தோசத்தில் விளக்குகள்
தீபாவளி கொண்டாடட்டுமே

-யாழ்_அகத்தியன்

ஓவியன்
19-11-2007, 05:15 AM
தீபாவளி வாழ்த்துக்கள்"
என நீ அனுப்பிய குறுந்தகவலை
பாடமாக்கியபடியே விடியவைத்தேன்
என் தீபாவளியை

தீபாவளியுடன் காதலையும் காதலியையும்
நினைத்துருகும் உங்கள் வரிகள் அழகு அகத்தியன்..!!

அடுத்த தீபாவளி தலைத் தீபாவளியாக அமைய என் வாழ்த்துக்கள்..!! :)