PDA

View Full Version : சொல் வாழ் நாள் முடிவுக்குள்



நிரன்
08-11-2007, 11:33 AM
Click ஒலி வடிவில் (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=1047299&T=3555)

நினைக்கின்ற நிமிடங்களை
உனதாக்கினாய் எனக்கென்று
ஒரு செக்கனில் கூட
என்னை காதலிக்க வில்லையா

பார்க்கின்ற பார்வையால்
நீயானாய் உன் கண்களின்
வெளிச்சத்தில் நான் மட்டும்
இருளா

பேச்சுக்கிளில் உன் பெயர்களை
உச்சரிக்க வைத்தாய்
என் அருகில் உன் பெயர்
எழுத ஒரு தடவையேனும்
விரல்கள் முனையவில்லையா

நீ வரும் நேரங்களுக்கு முன்
என்னை வரவளைத்தாய்
ஏன் எனக்காய் நீ
ஒரு தடவையேனும் காத்திருக்க
வில்லையா

வேண்டாம் நான்
ஒன்றும் உன்னிடம் கேட்டு
உன்னை துன்புறுத்தவில்லை

மனதை தொட்டு சொல்
உனக்கு என்மேல்
காதல் வரவில்லையா

இந்த கிறுக்கனின்
கிறுக்கல்கள் கூட
உன் இதயத்தில்
என் பெயரை
கிறுக்கவில்லையா

சொல்
என் வாழ் நாள்
முடிவுக்குள்

ஓவியன்
15-11-2007, 06:52 AM
உங்கள் வரிகளும்
வரிகளை உச்சரிக்கும்
வார்த்தைகளும்....
அப்படியே கவிதை
இயம்பும்
உணர்ச்சிக் குவியலில்
என்னையும்
தவிக்க வைத்தது சகோதரனே...!!

நல்ல உணர்ச்சி செறிவுடன் கையாண்ட வார்த்தைப் பிரயோகங்களுக்கு என் பாராட்டுக்கள்....

நல்லதை நினைத்தால்
நல்லதே நடக்கும்
உங்கள் காதலும்
நன்றே ஈடேற
என் வாழ்த்துக்கள்...!!

பூமகள்
15-11-2007, 07:20 AM
பின்னில் தவிப்பான குரல் குயிலாய்..! (ஆண்குயிலும் அழகாய் கூவுமோ? ஆண்-பெண் இரு குயிலும் கூவுமோ? குயிலில் இல்லை பேதமோ?)

முன்னில் அழகான கவி வரிகள் காதலின் குவியலாய்..!!

மெல்லிய பின் குரலுக்கு பின்னும் ஒரு மெல்லிய இசை..!
என்றுமே பிடிக்கும் பிடிப்பிக்கப்படும் ஹரிஹரனின் குரலினிதா வரிகள் இனிதா?

மொத்தத்தில் கவியோடு கலந்து வந்த பாடல்... பாடலுக்கு முன் வந்த கவி..!

எவை இனிது என்று பட்டிமன்றம் நடந்தது என்னுள்...!

இரண்டும் வென்றது... இறுதியில்...! பாராட்டுகள் அன்பரே...!!

சின்ன சந்தேகம்.. மற்றும் அன்பு வேண்டுகோள்: இந்த ஒலி வடிவத்தை எப்படிச் செய்தீர்கள் என்று சொன்னால்... என் போல் பலர் பயனடைவர்... பாடல் பின்னிசை எப்படிச் செய்தீர்கள் என்றும் கூற முடியுமா?

அமரன்
15-11-2007, 07:25 AM
பின்னில் தவிப்பான குரல் குயிலாய்..! (ஆண்குயிலும் அழகாய் கூவுமோ? குயிலில் இல்லை பேதமோ?)

:confused::confused::confused::confused::confused:

ஆதி
15-11-2007, 09:31 AM
பிரிவுத்துயரின் ஆற்றாமையை வாரி வார்த்திருக்கீர் கவிதையாய்..
குறுந்தொகை

பாலை

முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,
"ஆஅ! ஒல்" எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.

- ஔவையார்

இப்பாதான் ஞாபகம் வந்தது எனக்கு.. வாழ்த்துகள்

ஓவியன்
19-11-2007, 05:48 AM
குறுந்தொகை

பாலை

முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,
"ஆஅ! ஒல்" எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.

- ஔவையார்
அன்பான ஆதி!

பல சொற்களுக்கு விளக்கம் தெரியவில்லை நீங்கள் மேற்கோள் காட்டிய தொகையில்...

என் மரமண்டைக்கும் விளங்குமாறு கொஞ்சம் விளக்க முடியுமா..??

ஆதி
19-11-2007, 10:50 AM
பாலை

முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,
"ஆஅ! ஒல்" எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.

- ஔவையார்

தலைவி வரைவிடை ஆற்றாளா தோழிக்கு கூறியது..

வரை-திருமணம்..

தன் காதல் துயரை அறியாமல் தூங்கும் ஊரைப்பார்த்து தலைவி ஆற்றாமையில் கவன்றது..
நான் இங்கு காதற்துயரில் வாட அறியாமல் இவ்வூர் உறங்குகிறது, இதை அறியாது உறங்குவவரை தாக்குவேன், ஆ,ஊ என அலறுவேன் என பொருள்பட பாடியது..

இதற்கும் இக்கவிதைக்கும் உள்ள் ஒரு பொருத்தம், சங்க காலத்தில் தலைவியின் துயர் அறியாமற் ஊர் உறங்கியது, இந்த காலத்தில் தலைவன் துயர் அறியாமல் தலைவி உறங்குகிறாள்..

ஓவியன்
19-11-2007, 12:57 PM
இதற்கும் இக்கவிதைக்கும் உள்ள் ஒரு பொருத்தம், சங்க காலத்தில் தலைவியின் துயர் அறியாமற் ஊர் உறங்கியது, இந்த காலத்தில் தலைவன் துயர் அறியாமல் தலைவி உறங்குகிறாள்..

அடடே அழகான ஒற்றுமை ஆதி!
உங்களது இந்த வகையான விமர்சனப் பின்னூட்டங்கள் மன்றமெல்லாம் பரவ என் வாழ்த்துக்கள்! :) (அதில் ஒரு சுயநலமும் உண்டு; அப்போது தானே இது போன்ற விடயங்களை நாம் கற்க ஏதுவாக அமையும்..!)

நிரன்
23-11-2007, 11:00 AM
கண்டிப்பாக கூறுகிறேன் இக் கவிதை
எனது blogspot ல் போட்டுள்ளேன் .. நான் இதை ஒலி வடிவில் அமைக்க எணும் Audacity பயன் படுத்துகிறேன் http://audacity.sourceforge.net/beta/audacity-win-unicode/audacity-win-unicode-1.3.4.exe இந்த software பயன்படுத்துவது மிகவும் சுலபம்
பின் நீங்கள் செய்த ஒலியை upload செய்த http://www.acidplanet.com பாவிக்கலாம்

அக்னி
23-11-2007, 11:33 AM
உன் வார்த்தைகள் உதிர்ந்தால்,
என் வாழ்நாள் நீளும்...
உன் காதல் என்மேல் சொரிந்தால்,
என் வாழ்க்கை வசந்தமாகும்...

உவகை தரும் கவியிணைப்பு... மிகுந்த பாராட்டுக்கள்...


பேச்சுக்கிளில் உன் பெயர்களை
உச்சரிக்க வைத்தாய்
என் அருகில் உன் பெயர்
எழுத ஒரு தடையேனும்
விரல்கள் முனையவில்லையா

நீ வரும் நேரங்களுக்கு முன்
என்னை வரவளைத்தாய்
ஏன் எனக்காய் நீ
ஒரு தடையேனும் காத்திருக்க
வில்லையா
தடவைகள் தடைகள் ஆவதால், திசை மாறுது கவிதை... கவனிக்க...

பூமகள்
23-11-2007, 01:22 PM
அடடே அழகான ஒற்றுமை ஆதி!
உங்களது இந்த வகையான விமர்சனப் பின்னூட்டங்கள் மன்றமெல்லாம் பரவ என் வாழ்த்துக்கள்! :) (அதில் ஒரு சுயநலமும் உண்டு; அப்போது தானே இது போன்ற விடயங்களை நாம் கற்க ஏதுவாக அமையும்..!)
இது சுயநலம் இல்லை ஓவியன் அண்ணா. பொது நலம்..!:)