PDA

View Full Version : அன்பின் வலி



சுகந்தப்ரீதன்
08-11-2007, 07:38 AM
நிராகரிக்கபட்ட
என் அன்பின் வலி!
நிச்சயம் நீயும்
உணர்வாய் − ஓர்
நிராகரிப்பின்போது!

மலர்
08-11-2007, 08:03 AM
சுகு....
இப்படி எல்லாம் சாபம் குடுக்ககூடாது

இளசு
08-11-2007, 08:37 AM
சரியாச் சொன்னீங்க மலர்..

வலிக்கு வலி, குருதிக்குக் குருதி சமாச்சாரம் இல்லை இது..

எங்கிருந்தாலும் வாழ்க மேட்டர்தான் சரி!

வாழ்த்துகள் சுகந்தப்ரீதன்.

மனோஜ்
08-11-2007, 08:45 AM
நிராகரிப்பு என்றும் நிரந்தரம் இல்லை
நின்று நிதானித்து நிஞத்தில் கலந்திட
நிமிர்ந்து நின்றால் வாழ்வு உன்கையில்
அருமை நண்பா

gans5001
08-11-2007, 10:47 AM
காதலிக்கே சாபமா.. இதென்ன கலாட்டா?

அமரன்
08-11-2007, 10:52 AM
உங்களுக்கு யாருங்க இட்டது சாபம்.
பொங்குது பாருங்க இப்படிக் கோபம்...

அன்பு கேட்டால் என்ன பண்ணுவீங்க...!

சுகந்தப்ரீதன்
08-11-2007, 11:31 AM
சுகு....
இப்படி எல்லாம் சாபம் குடுக்ககூடாது

இது சாபம் இல்லீங்கோ..கோபம்.. புரியுதா:mini023:

சுகந்தப்ரீதன்
08-11-2007, 11:33 AM
எங்கிருந்தாலும் வாழ்க மேட்டர்தான் சரி!

வாழ்த்துகள் சுகந்தப்ரீதன்.
நன்றி இளசு அண்ணா.. ஆனா உங்க அளவுக்கு பெரிய மனசு நமக்கில்லீங்கண்ணா..!

சுகந்தப்ரீதன்
08-11-2007, 11:34 AM
நிராகரிப்பு என்றும் நிரந்தரம் இல்லை
நின்று நிதானித்து நிஞத்தில் கலந்திட
நிமிர்ந்து நின்றால் வாழ்வு உன்கையில்
அருமை நண்பா
மிக்க நன்றி நண்பா...!

சுகந்தப்ரீதன்
08-11-2007, 11:41 AM
காதலிக்கே சாபமா.. இதென்ன கலாட்டா?
காதலிச்சாதான காதலி.. இது வேற மாதிரி கலாட்டா..கல்தா கொடுத்ததுக்கு..!

சுகந்தப்ரீதன்
08-11-2007, 11:42 AM
அன்பு கேட்டால் என்ன பண்ணுவீங்க...!

அன்புதான் அண்ணாதான் எழுத சொன்னாரு.. அப்புறம் எப்படி என்ன கேட்பாரு...?:icon_rollout:

மலர்
09-11-2007, 12:19 AM
அன்பு கேட்டால் என்ன பண்ணுவீங்க...!

அமரு..
இதுல ரசிகன் வந்து என்னத்தை கேட்டிற போறாரு...:confused::confused:

ஓவியன்
13-11-2007, 08:26 AM
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்...
நிராகரித்தலின் நிஜ வலி உணரவேண்டின்
வேறு வழியில்லை...
ப்ரீதனின் வழி தான் சரியானது
அது பழிக்கு பழி வழிமுறையாக இருப்பினும்....

ஆனால் நிஜக் காதல் ஒரு போதும்
அதற்கு அனுமதிக்காது
இளசு அண்ணா கூறியபடி
எங்கிருந்தாலும் வாழ்கவென வாழ்த்திவிட்டு பேசாமல் இருந்து விடும்...

ஓவியன்
13-11-2007, 08:27 AM
சுகு....
இப்படி எல்லாம் சாபம் குடுக்ககூடாது

வேறு எப்படி எல்லாம் சாபம் கொடுக்கலாம் சொல்லுங்க...!? :)

அமரன்
13-11-2007, 09:35 AM
வேறு எப்படி எல்லாம் சாபம் கொடுக்கலாம் சொல்லுங்க...!? :)

"பக்கல் கே சம்மந்தம்" பாணியில் கொடுக்கலாமோ..

சிவா.ஜி
13-11-2007, 09:47 AM
சொன்னதெல்லாம் சரிதானப்பு....அவ நிராகரிச்ச சோகத்துல சாபம் குடுத்துட்டு நீ வேற இடத்துல பிக்-அப் பண்ணியிருப்ப..அப்ப பாத்து அந்தபொண்ணுக்கு நீ சொன்னமாதிரியே சோகம் தாக்கி...அடடா....இதுதானா...இதுதானா...அந்தவலின்னு...ஃபீல் பண்ணி திரும்ப உன்கிட்ட வந்தா என்ன பண்ணுவே...என்ன பண்ணுவே.....

பூமகள்
13-11-2007, 11:23 AM
தோல்வியின் வலி உணர்ந்தவன் மற்றவர்க்கு அந்த வலியைத் தரமாட்டான்..!
சுகந்தப்ரீதன்.. நீங்க எப்படி???!!! ;)

ஆதி
14-11-2007, 02:38 AM
இதழ்கள் ஆயிரம் சொல்லலாம், இதயம் அவளுக்கு எந்த துன்பமும் நேரக்கூடாது என்றுதான் பிராதிக்கும்..

உங்கள் கவிதை அமைப்பு வசந்த் செந்தில் கவிதைகள் போல்லுள்ளன..

நேசம்
14-11-2007, 02:52 AM
கோபமான மனநிலையில் அந்த எண்ணம் வரலாம்.கோபம் குறைந்த பிறகு இளசு அண்ணா சொல்வது போல் எங்கேயிருந்தாலும் வாழ்க என்று தான் மனம் சொல்லும்.

யவனிகா
14-11-2007, 04:07 AM
அடடா...எத்தனை அனுதாப அலைகள்...நாலு வரிக் கவிதைக்கு நச்சு நச்சுன்னு பின்னூட்டம் ஸ்கோர் பண்ணிப் பின்னுறுயே சுகந்தா? ஆளை மட்டும் எங்கிட்டக் காமி அப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு!