PDA

View Full Version : இன்பம் பொங்கும் தீபாவளி



கஜினி
08-11-2007, 07:04 AM
இல்லத்து மகிழ்ச்சி
வெள்ளமாய் பொங்கிடும்
உள்ளத்து சூரியன்
துள்ளியே உதித்திடும்

சொந்தங்கள் வரவால்
சந்தோஷம் பிறந்திடும்
பந்தங்கள் விரிவால்
இன்பங்கள் பெருகிடும்

அம்மாவின் அன்பால்
உள்ளம் மகிழ்ந்திடும்
அப்பாவின் பாசத்தால்
கொண்டாட்டம் துளிர்விடும்

அக்காவின் அக்கறையால்
எக்காலமும் சிறந்திடும்
அண்ணனின் அரவணைப்பால்
புன்னகை தவழ்ந்திடும்

தம்பியின் சிரிப்பால்
எல்லாமும் மறந்திடும்
தங்கையின் பார்வையில்
உலகமே தெரிந்திடும்

எல்லோரும் ஒன்றாக
கொண்டாடும் தீபாவளி
எப்போதும் என்வீட்டில்
இன்பம் பொங்கும் தீபாவளி

ஷீ-நிசி
08-11-2007, 07:07 AM
தீபாவளியின் குதூகலத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் கஜினி!

இளசு
08-11-2007, 07:07 AM
குடும்ப உறவுகள், நட்பு வட்டங்களை
பலப்படுத்துவதற்காகவே பண்டிகைகளை போற்றலாம்.

கவிதைக்கு வாழ்த்துகள் கஜினி!

கஜினி
08-11-2007, 07:09 AM
ஒரு மாபெரும் கவிஞர், ஒரு மாபெரும் விமர்சகர் இருவரது வருகையும் என் கவிதைக்கு பெருமை சேர்க்கிறது. நன்றி எம்மான்களே.

அமரன்
08-11-2007, 02:18 PM
கூட்டுக்குடும்பமக சுற்றம் இணைந்த களியாட்டம்
கூட்டுக்குள் குடும்பமாக எல்லோரும் களியாட்டம்
கட்டுக்குள் அடங்கா தேனாறு பருகும் கொண்டாட்டம்..
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் கஜினி.

கஜினி
09-11-2007, 06:30 AM
நன்றி அமரரே

யவனிகா
09-11-2007, 11:02 AM
தீபாவளி ஸ்பெசல் கவிதையா?வாழ்த்துக்கள் கஜினி.

கஜினி
12-11-2007, 04:29 AM
நன்றி யவனி அக்கா.

பிச்சி
12-11-2007, 10:13 AM
தீபாவளி கவிதைகள் அனைத்தும் அருமை

அன்புடன்
பிச்சி

ஓவியன்
13-11-2007, 06:38 AM
உறவுகளின் மகிழ்ச்சியில் திளைக்கும் ஒவ்வொரு நாளும் எந்தக் குடும்பத்திற்கும் தீபாவளிதான்...!!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கஜனி!.

கஜினி
13-11-2007, 09:53 AM
மிக்க நன்றி ஓவியரே.

சிவா.ஜி
13-11-2007, 10:06 AM
உறவுகள் உடனிருந்தால் ஓவியன் சொன்னதைப்போல எந்நாளும் தீபாவளிதான்.மிக அழகான கவிதை.வாழ்த்துகள் கஜினி.