PDA

View Full Version : உதவுங்கள் (டிவிடி பிரச்சனை)



yaarokartik
07-11-2007, 06:20 PM
விண்டோஸ் விஸ்டாவில் நேரோ7 உபயோகித்து வருகிறேன். சிடி ரைட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் டிவிடி ரைட் செய்யும் போது பாதியிலேயே 'பர்ன் ப்ராஸஸ் பெயில்' என்ற எச்சரிக்கையுடன் நின்றுவிடுகிறது,, சரி செய்ய வழிதெரிந்தவர்கள் உதவுங்களேன்...

அன்புரசிகன்
07-11-2007, 08:24 PM
விண்டோஸ் விஸ்டாவில் நேரோ7 உபயோகித்து வருகிறேன். சிடி ரைட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் டிவிடி ரைட் செய்யும் போது பாதியிலேயே 'பர்ன் ப்ராஸஸ் பெயில்' என்ற எச்சரிக்கையுடன் நின்றுவிடுகிறது,, சரி செய்ய வழிதெரிந்தவர்கள் உதவுங்களேன்...

தடித்த எழுத்திலுள்ளதை சற்று ஆங்கிலத்தில் தாருங்கள்... புரியவில்லை....

மனோஜ்
08-11-2007, 06:35 AM
அன்பு நண்பரே தாங்கள் nero உபபோகித்து செய்து பாருங்கள் வந்துவிடும்

பாரதி
08-11-2007, 12:43 PM
நண்பர்களே,
கார்த்திக் குறிப்பிட்டிருப்பது − அவர் உபயோகிக்கும் மென்பொருள் நீரோ − 7. அவர் பெறும் பிழைச்செய்தி − burn process failed என்பதாகும்.

அன்புரசிகன்
08-11-2007, 01:08 PM
இறுதியில் பிழைச்செய்தி வருவதால் அது அந்த DVD WRITING ல் finalise செய்யும் போது தான் வரும்பிரச்சனை... சில சாத்தியக்கூறு உண்டு. உங்கள் DVDயில் ஏறத்தாள 75% அளவிலும் கூடுடுதலான கோப்புக்களை இணைத்துவிட்டு தொடர்ச்சி பதிவுமுறையை தெரிவுசெய்திருந்தாலும் இதே பிரச்சனை வரும். (Multisession)

உங்கள் கணிணியின் நினைவகம் (RAM) செயலிழப்பிற்கு அருகில் இருந்தாலும் இவ்வகை செய்தி வரும். அல்லது கணிணி restart அகும்... அல்லது நீலத்திரையில் வந்து பிழைசெய்தி சொல்லும்.... அல்லது நீங்கள் அனுமதி அற்ற நீரோவைப்பாவித்தால் software update செய்திருந்தீர்களேயானால் இவ்வகையான பிழைசெய்திகளை கொடுக்கும்.... ஆனால் முதலில் கூறியவைதான் சாத்தியம் அதிகம். மீதி மன்ற கணிணி ஜாம்பவான்கள் வந்து உதவுவர்.

மனோஜ்
08-11-2007, 01:27 PM
முதலில் டிவீடி சிடி ரிடாகிறதா என்று சொல்லுங்கள் ரிடானால்
அந்த மோக் என்ன என்று கூறுங்கள் அல்லது ஒரு பயாசில் dvd rw என்று வருகிறதா என்று செக்பன்னுங்க அதில் எல்லாம் சரி என்றால் ஒரு முறை சிஸ்டம் பார்மட் செய்துபாருங்கள்

பாரதி
08-11-2007, 05:25 PM
அன்பு நண்பரே,

இந்தப்பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கலாம். நீண்ட பதிவாக எழுதுவது சிரமம் என்பதால் சில குறிப்புகளை மட்டும் தருகிறேன்.

1. உங்கள் கணினியில் Direct Memory Accessment - DMA இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா..?

2. உங்கள் கணினியில் போதுமான நினைவகம் (RAM) நிறுவப்பட்டிருக்கிறதா..?

3. சில வகை writer-கள் எல்லாவகையான வட்டுகளிலும் எழுதுமாறு வடிவமைக்கப்பட்டதில்லை. ஆகவே உங்கள் டிவிடி ரைட்டர் எந்த மாதிரியான (-R, +R, RW) டிவிடிகளில் எழுதும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து உரிய வட்டை மட்டுமே உபயோகிக்கவும்.

4. டி.வி.டி யின் தரம் நன்றாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5. அதிக வேகத்தில் எழுதுமாறு உங்கள் கட்டளைகள் இருக்கக்கூடும். இயன்ற வரை குறைவான அளவு வேகத்தில் (4x, 8x)எழுதுவது நல்லது.

6. நீரோவில் உள்ள செட்டிங்குகளில் தவறு ஏற்பட்டிருக்கலாம். அப்படியெனில் மென்பொருளை நீக்கிவிட்டு, ரெஜிஸ்ட்ரியை சுத்தம் செய்து விட்டு மீண்டும் மென்பொருளை நிறுவிப்பாருங்கள்.

7. நீரோ மென்பொருளில் கூட சில சமயம் பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே மென்பொருளின் வலைத்தளத்திற்கு சென்று "அப்டேட்" செய்து கொள்ளுங்கள்.
http://www.nero.com/en/nero-up.php

8. அந்த வலைத்தளத்திலேயே இருக்கும் கேள்வி-பதில் பக்கத்தை உபயோகப்படுத்துங்கள்.

உங்கள் பிரச்சினை விரைவில் தீர வாழ்த்துக்கள்.

yaarokartik
09-11-2007, 03:34 AM
உபயோகமான ஆலோசனைகள் தந்த மன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி.. நண்பர் பாரதி அவர்களே தாங்கள் கூறும் DMA என்பது பற்றி கொஞ்சம் தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்...

praveen
09-11-2007, 04:22 AM
உபயோகமான ஆலோசனைகள் தந்த மன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி.. நண்பர் பாரதி அவர்களே தாங்கள் கூறும் DMA என்பது பற்றி கொஞ்சம் தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்...

நண்பர்கள் பதிலுக்கு பின், உங்கள் பிரச்சினை என்ன ஆனது என்று சொல்லுங்கள். DMA (Direct memory Access) பழைகம்ப்யூட்டர்களில் விரவைவாக டேடடா காப்பி (ஒரு டிரைவுக்குள்ளே/ அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நேரடியாக டேட்டா பரிமாற்றம்) செய்து கொள்ள பயன்படுவது. இது தற்போதைய கம்ப்யூட்டரில் இது தானாகவே எக்ஸ்பி/விஸ்டா வில் இறுதி செய்யப்படடம். இதற்கு விண்டோஸில் செட்டிங்க்ஸ் நாம் செய்ய கூட இயலாது.

முந்தைய விண்டோஸ் 2000/98/ME/95 இவைகளில் செய்ய இயலும்.

நீங்கள் DVD சப்போர்ட் செய்யும் குறைந்த அளவு வேகத்தில் பதியுங்கள். நீங்கள் பதியும் போது கம்ப்யூட்டரில் வேறு வேலை செய்யாதிருந்து பாருங்கள். ஸ்கீரீன் சேவர் ஏதாவது இருந்தால் அதை 30 நிமிடத்திற்கு அல்லது நிறுத்தி வைத்து பாருங்கள்.

பாரதி
09-11-2007, 03:38 PM
பொதுவாக DMA என்பது கணினியில் உள்ள வன் தட்டு(ஹார்ட் டிஸ்க்) மற்றும் டிவிடி/சிடி டிரைவ்-களுக்கிடையேயான பரிமாற்றத்தை விரைவுபடுத்த உதவுகிறது.
1. மை கம்ப்யூட்டரை - சுட்டியின் வலது பொத்தானால் சொடுக்குங்கள்.
2. பிராப்பர்ட்டீஸை தேர்வு செய்யுங்கள்.
3. ஹார்ட்வேர் என்பதை அழுத்துங்கள்.
4. டிவைஸ் மேனேஜர் என்பதை அழுத்துங்கள்.
5. IDE ATA/ATAPI என்பதை இரு முறை சொடுக்குங்கள்.
6. Primary Channel என்பதை இரு முறை சொடுக்குங்கள்.
7. Advanced settings என்பதை தேர்வு செய்து, அதில் DMA if available என்பதை தேர்ந்தெடுங்கள்;மேலும் அதில் Ultra DMA, mode 5 என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
8. அது போல secondary channel க்கும் தேர்வு செய்திடுங்கள். அதில் Ultra DMA, mode 2 என்று இருக்கக்கூடும்.
------
9. ஒரு வேளை உங்களது கணினியில் DMA தேர்வு இல்லையென்றால், குறிப்பிட்ட கண்ட்ரோலரை (எண்-5ல் உள்ளது) பட்டியலில் இருந்து நீக்குங்கள். பின்னர் கணினியை நிறுத்தி, மீள இயக்குங்கள். இப்போது உங்கள் கணினியில் மீண்டும் அது நிறுவப்பட்டு விடும். மறுபடி மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை கையாளுங்கள்.
----
நண்பர் பிரவீண் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். உங்கள் பிரச்சினைகளுக்கு ஏதேனும் தீர்வு கிடைத்ததா என்று தயவு செய்து கூறுங்கள்.

yaarokartik
12-11-2007, 11:29 AM
பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.. சிடி நன்றாக ரைட் ஆகிறது. டிவிடி மட்டும் தான் ரைட் ஆகவில்லை. [01:44:12] NeroVision Existing drivers:
[01:44:12] NeroVision Registry Keys:
[01:44:12] NeroVision HKLM\Software\Microsoft\Windows NT\CurrentVersion\WinLogon
[01:44:12] ExpressUI Burn process failed with status 3
என்று இறுதியில் வருகிறது.

praveen
12-11-2007, 11:56 AM
பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.. சிடி நன்றாக ரைட் ஆகிறது. டிவிடி மட்டும் தான் ரைட் ஆகவில்லை. [01:44:12] NeroVision Existing drivers:
[01:44:12] NeroVision Registry Keys:
[01:44:12] NeroVision HKLM\Software\Microsoft\Windows NT\CurrentVersion\WinLogon
[01:44:12] ExpressUI Burn process failed with status 3
என்று இறுதியில் வருகிறது.

நீங்கள் பயண்படுத்தும் நீரோவிசன் பதிப்பு (2 என்று நினைக்கிறேன்) அது மிகவும் பழையது தற்போது 4 வந்து விட்டது. அவர்கள் இனைய தளம் சென்று 30 நாள் டிரைல் பதிப்பு இறக்கி பதிந்து அதில் உங்கள் வேலையை செய்து பாருங்கள். நன்றாக வரும்.

yaarokartik
12-11-2007, 01:13 PM
நீங்கள் பயண்படுத்தும் நீரோவிசன் பதிப்பு (2 என்று நினைக்கிறேன்) அது மிகவும் பழையது தற்போது 4 வந்து விட்டது. அவர்கள் இனைய தளம் சென்று 30 நாள் டிரைல் பதிப்பு இறக்கி பதிந்து அதில் உங்கள் வேலையை செய்து பாருங்கள். நன்றாக வரும்.
நான் பயன்படுத்துவது nero 7

yaarokartik
13-11-2007, 04:46 PM
பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.. மென்பொருளில்தான் பிரச்சனை.. மாற்றிவிட்டேன் தற்போது நன்றாக இயங்குகிறது,, எனக்காக இவ்வளவு முக்கியத்துவமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சாற்ந்த நன்றி