PDA

View Full Version : இன்பத் தீபாவளி!



ஷீ-நிசி
07-11-2007, 11:02 AM
இன்பத் தீபாவளி!
எண்ணை சொட்டும் குளியல்!
கண்ணை பறிக்கும் புத்தாடை!
விண்ணை மிரட்டும் பட்டாசுகள்!
வண்ண வண்ணத்தில் பலகாரங்கள்!

இது உம் தீபாவளி!

குளியலுக்காகும் எண்ணையை
சமையலுக்காய் எடுத்துவைத்து,

தண்ணீரில் ஒரு குளியல்!

இருப்பதிலேயே கிழியலில்லாத,
நேற்றிரவு துவைத்துவைத்த ஆடை!

கேட்ட சத்தங்களிலேயே
வெடித்து விட்ட திருப்தி!

அரைகிலோ ரவையில்,
அனைவருக்கும் கேசரி!

இதுவும் தீபாவளி!


http://i128.photobucket.com/albums/p163/shenisi/Deepavali1.jpg

பிச்சி
07-11-2007, 11:24 AM
ரென்டுவிதமான தீபாவளியும் ஒப்பிட்டு கொடுத்த அண்ணாவுக்கு பாராட்டுகள்.

நெரயா பேர் தீபாவளியே கொன்டாடாமல் இருக்கிறார்களே. அண்னா

அன்புடன்
பிச்சி

ஷீ-நிசி
07-11-2007, 11:29 AM
ஆமாம்.. பிச்சி! நன்றி!

கையில எதுமே இல்லைன்னாலும், கொண்டாடனும்னு ஆசைப்படறவங்கள நினைச்சி.... எழுதினேன்.....

நேசம்
07-11-2007, 11:31 AM
சந்தோஷம் பலகாரத்திலும் பட்டாசிலும் இல்லை.அதை கொண்டாடுபவர்களை பொறுத்து தான் அமையும்.ஒப்பீட்டு நிங்கள் தந்த கவிதை எளிமையாகவும் அழகாகவும் இருந்தது ஷீ-நிசி. வாழ்த்துக்கள்

க.கமலக்கண்ணன்
07-11-2007, 11:33 AM
அனைவருக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

அனைவரும் இதை பாருங்கள்... (http://www.geocities.com/kamalk023/kamal.swf)

நேசம்
07-11-2007, 12:02 PM
அனைவருக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

அனைவரும் இதை பாருங்கள்... (http://www.geocities.com/kamalk023/kamal.swf)

வாழ்த்துக்கு ஏற்ற பாடலை இனைப்பாக தந்த கமலக்கண்ணன் அவர்களுக்கு நன்றி.(உங்க குடும்பத்தில் எல்லொருக்கும் அழகிய தமிழ் பெயராக இருப்பது மிக்க மகிழ்ச்சி)

மனோஜ்
07-11-2007, 01:37 PM
நல்ல கவிதை நன்றி ஷீ நல்ல ஒப்பீடு

அனைவருக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

அனைவரும் இதை பாருங்கள்... (http://www.geocities.com/kamalk023/kamal.swf)

அருமையான செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்:icon_b:

leomohan
07-11-2007, 03:04 PM
வித்தியாசமான கவிதை, பார்வை ஷீ. வாழ்த்துகள்.

ஷீ-நிசி
08-11-2007, 03:20 AM
நன்றி நண்பர்களே!

இதயம்
08-11-2007, 04:06 AM
நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

ஷீ..! நல்லதொரு கவிதைக்கு நன்றியும், பாராட்டுக்களும்..!!

ஷீ-நிசி
08-11-2007, 04:20 AM
நன்றி இதயம்! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இளசு
08-11-2007, 05:24 AM
இயல்பாய் கொண்டாட்டமாய் அமையவேண்டிய பல விழாக்கள்
சீர்வரிசை, கட்டாயப் பரிசுகள், ''அடுத்தவருக்காகவது'' - என
வணிகமயமாக்கப்பட்டு மக்களை உள்ளுக்குள் குமையவைப்பது
உலகமெங்கும் காணக்கிடைக்கும் காட்சி..

இங்கே ஏங்கி இருக்கும் பூவில் இல்லாத பொன்காணும்
ஏழையின் தேய்ந்த பொருளாதாரக் காட்சி..
பாராட்டுகள் ஷீ!

கஜினி
08-11-2007, 06:41 AM
இது உம் தீபாவளி, இதுவும் தீபாவளி. இனிய தீபாவளிக் கவிதை. வாழ்த்துகள் ஷீ-நிசி அவர்களே.

ஷீ-நிசி
08-11-2007, 06:54 AM
நன்றி இளசு... நீண்ட நாளுக்குப் பின் உங்கள் விமர்சனம் கண்டேன்...

நன்றி கஜினி... இதுவும்.... ரசித்தமைக்கு!!

கஜினி
08-11-2007, 07:07 AM
கவிஞரே உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? பின்னூட்டத்திலேயும் கவிஞர்னு நிரூபிக்கிறீங்கள்.

அமரன்
08-11-2007, 02:22 PM
இது உம் தீபாவளி..இதுவும் தீபாவளி..
மகிழ்கிறது என் விழி உம் கவிவழி கண்டு..
வாழ்த்துக்கள் தீபாவளிக்கும்..கவிதைக்கும்.

ஷீ-நிசி
08-11-2007, 04:23 PM
நன்றி அமரன்!

மன்மதன்
08-11-2007, 04:44 PM
நிறைவான கவிதை ஷீ.. பாராட்டுகள்..!


குளியலுக்காகும் எண்ணையை
சமையலுக்காய் எடுத்துவைத்து,

தண்ணீரில் ஒரு குளியல்!

தலைக்கு தேய்ப்பது சமையல் எண்ணையா? (நிஜமாவே சந்தேகம்பா..)

ஷீ-நிசி
08-11-2007, 04:47 PM
நிறைவான கவிதை ஷீ.. பாராட்டுகள்..!



தலைக்கு தேய்ப்பது சமையல் எண்ணையா? (நிஜமாவே சந்தேகம்பா..)

நன்றி மன்மதன்..

குளியலுக்கு எண்ணை வாங்கினால் செலவாகும் பணத்தை எடுத்துவைத்து சமையல் எண்ணை வாங்க பயன்படுத்துவதை சொன்னேன்பா!