PDA

View Full Version : டாடி.



பிச்சி
07-11-2007, 10:33 AM
முதன் முதலா மன்றத்தில நான் கவிதையை விட்டுட்டு வேற இடத்திற்கு வந்திருக்கேன். அதுலயும் புதுசா தலைப்போடு வந்திருக்கேன்.


இதென்ன டா டி? டாடியா? பொதுவாவே எல்லா பசங்களும் பசங்களை டா போட்டு கூப்பிடுவாங்க, பொண்ணுங்க மத்த பொண்ணுங்களை டி போட்டு கூப்பிடுவாங்க, அதே மாதிரி ப்சங்க பொண்ணுங்களை செல்லமா டா போட்டு கூப்பிடுவாங்க, ரொம்ப ரேரா பொண்ணுங்களை டி போட்டு கூப்பிடுவாங்க, சரி இப்ப அதுல என்ன இருக்கு அப்படீங்கறீங்களா? சும்மா தான். என்னை பெரும்பாலும் டி போட்டு கூப்பிட்டவங்கதான் அதிகம். ஏன்னா படிச்ச காலேஜ் உமன்ஸ் காலேஜ், நான் படிச்ச காலேஜுக்கு ரொம்ப பக்கத்திலேயே கோவில் இருக்கு. அதோட மெயின்ரோடு வேற. பசங்க கூட்டம் சொல்லவேண்டாமே. அலை மோதும். நாங்க எப்பவாச்சும் தான் கோவிலுக்குப் போவோம். எங்க பின்னாடியே ஒரு கூட்டம் வந்திட்டு இருக்கும். சரி நாங்கன்னு சொன்னது யார் யாருனு அறிமுகப்படுத்தறேன். என்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ் கலா, நித்தியா, திவ்யா, அப்பறம் பத்மா. ஆக மொத்தம் அஞ்சு பேரு. கலா இனிக்க இனிக்க பேசுவா. அதனாலயே ரொம்ப ஈக்கள் மொய்க்கும். நித்தியா பேசும் போது உடம்பெல்லாம் காயம் ஆகும். ஏன்னா அவ விழுந்து விழுந்து பேசுவா. திவ்யா கடலை மன்னி. பத்மா ஏதோ ஒரு பிஸினஸ் மீட்டிங்கில பேசுறமாதிரி பேசுவா. அவளுக்கு படிப்பைத் தவிர வேறெதுவும் தெரியாது. எங்கபின்னாடி வரும் கூட்டமும் ஒரு காலேஜ் க்ரூப் தான். நான் கொஞ்சம் சைலண்ட் பெர்சன். கொஞ்சம் பொறுங்க, அது வீட்ல மட்டும்தான். வெளியே அப்படியே ஏறுக்கு மாறு. என்னை மாதிரியே என்னோட பிரண்ட்ஸ் எல்லாருமே. அட பாருங்க, ரூட் வேற எங்கயோ போகுது. எங்க பின்னாடி வந்தவனோட ஒருத்தன் கிட்ட திவ்யா பிரன்ஸிப் புடிச்சு வெச்சுகிட்டா. திவ்யா சரியான கடலை. நல்லா வறுப்பா. சில சமயத்தில எண்ணையில்லாம வறுத்து கருகிப் போயிரும். அந்த பையனோட பேரு என்னனு தெரியலை மறந்துடுச்சு. சும்மா வாசுன்னு வெச்சுக்கோங்க, அவன் எங்க எல்லாரையும் ஒருநாள் ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு போனான். எல்லாம் திவ்யாவோட ஏற்பாடு. எங்க நாலு பேருக்கும் அதைப்பத்தி தெரியாம போச்சு. அப்பத்தான் அவன்கிட்ட நாங்க பேசினோம். எங்க எல்லாரையும் அவன் பா வெச்சு கூப்பிடுவான். சொல்லுப்பா, என்னப்பா சாப்பிடுப்பா என்று பா வெச்சு கூப்பிட்டான். எங்க கூட்டத்தில கலா கொஞ்சம் கலக்கல். அவதான் ஏண்டா பா பா னு எங்களை எல்லாரையும் பாப்பா ஆக்கற? அப்படின்னு கேட்டா. அப்பறம் நான் சொன்னேன். பா வை உடைச்சுட்டு டா வெச்சு கூப்பிடு அப்படினு. அவன் கேட்டான் பா வை உடைக்க முடியுமா அப்படீன்னான். அதுக்கு நான் சரியா பதில் சொன்னேன். என்ன தெரியுமா?


பாவுக்கு கால் இருக்கு அதனால அதை உடைச்சுடு அப்படீன்னேன். என்னோட கடிய பார்த்துட்டு எல்லாருமே என்னை கடிக்க வந்துட்டாங்க. நல்லவேளை. வாசு மட்டும் சிரிச்சு என்னை காப்பாத்தினான். அப்பறமா ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணினான். ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே. அவன் பொண்ணுங்க இருக்கிறாங்கன்னு இங்கிலீஸிலேயே பேசிட்டு இருந்தான். அதிலயும் அவன் அரைகுறை வேற. திவ்யா எப்படித்தான் இங்கிலிஸீல் கடலை வறுக்கிறானு தெரியலை. அதுக்கு உடனே ஆப்பு வெச்சது பத்மா. அவ சூப்பரா பேசுவா. எங்க எல்லாரையும் விட. கடகட ன்னு பேசி அவனை அப்படியே ஸ்டாப் பண்ணீட்டா.. பாவம் வாசு. அவன் மூஞ்சில ஈ கூட உக்காரலை. ஐஸ்கிரீம் சாப்பிட்டதுக்கப்பறமும் கூட. சரி இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி? எப்படியோ அதோட நான் திவ்யாவை ரொம்ப கடிச்சேன். இந்த மாதிரியெல்லாம் முன்ன பின்ன தெரியாதவன்கூட எங்களை கூட்டிட்டு போகாதே அப்படீன்னு. நான் கடிச்சதுல அடுத்தநாள் ஆஸ்பிடல்ல போய் படுத்துகிட்டா.. உண்மையாவே தாங்க, ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரொம்பவே சேரலை போலிருக்கு. அதுமட்டுமில்லாம அந்த வாசு திவ்யாகிட்ட ப்ரபோஸ் பண்ணி வம்புக்கிழுத்தானாம். இவ வீட்டுக்கு வந்து தலைவலியிலிருந்து வாந்தி வரை ஏதோ பிரகனண்ட் மாதிரி ஆக்ட் கொடுக்க, அவளோட அப்பா அம்மா என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சு அட்மிட் பண்ணாங்க, சினிமாவில வரமாதிரி ரிப்போர்ட் மாத்தி கொடுத்திடுவாங்களோன்னு நாங்க நாலுபேரும் பயந்துகிட்டே கமெண்ட் அடிச்சோம். பாவம் திவி. ஒருவாரம் இருக்கவேண்டியதா போச்சு. திவ்யா ஆஸ்பிடல்ல இருக்கறப்ப ஏகப்பட்ட போன் கால்ஸ். எல்லாம் அவன்கிட்ட இருந்துதான். திவ்யா படுத்த படுக்கையாக காலைக் கூட எடுத்து வைக்கமுடியாம, வந்த காலை கட் பண்ணீட்டா. அதுக்குத்தான் சொல்றேன். முன்ன பின்ன தெரியாதவங்ககூட யாரும் காபி சாப்பிடவோ இல்லை ஐஸ்கிரீம் சாப்பிடவோ போகாதீங்க. இது என்னோட அட்வைஸ். ரொம்ப தெரிஞ்சவங்கன்னா முதல்ல வீட்ல அறிமுகப்படுத்துங்க. இது பொண்ணுங்களுக்கு மட்டும். ஆண்களை அறிமுகப்படுத்தினீங்கன்னா சீவக்கட்டை விழும். நம்ம முதுகுல. மத்தப்டி நல்லா ஜாலியா கொண்டாடுங்க. அதெல்லாம் சரிதான் இதுக்கும் டா, டி க்கும் என்ன சம்பந்தமுனு பார்க்கிறீங்களா? டா வோ டீ யோ எதான்னாலும் டாடிகிட்ட சொல்லிடனும்.


அன்புடன்
பிச்சி

ஷீ-நிசி
07-11-2007, 10:52 AM
ஹா ஹா! இவ்ளோ நகைச்சுவை இருக்கா பிச்சிக்குள்ள...

பிச்சிட்டீங்க... அது சரி டாடீ னா நான் கூட அப்பா கவிதையோனு நினைச்சேன்..

கலக்கிபுட்ட! பிச்சி! வாழ்த்துக்கள்! அடிக்கடி இந்த மாதிரி ஜாலி கட்டுரை தாங்க!

பிச்சி
07-11-2007, 11:08 AM
ஹா ஹா! இவ்ளோ நகைச்சுவை இருக்கா பிச்சிக்குள்ள...

பிச்சிட்டீங்க... அது சரி டாடீ னா நான் கூட அப்பா கவிதையோனு நினைச்சேன்..

கலக்கிபுட்ட! பிச்சி! வாழ்த்துக்கள்! அடிக்கடி இந்த மாதிரி ஜாலி கட்டுரை தாங்க!

நன்றி அண்ணா. நேரம் இருந்தால் நிச்சயம் தருவேன். இந்த கட்டுரை எழுதவே ரென்டு வாரம் ஆகிட்டுது.

அன்புடன்
பிச்சி

பூமகள்
07-11-2007, 11:11 AM
பிச்சியின் கைவண்ணம் முதன் முதலில் இங்கு பதித்ததுக்கு முதலில் வாழ்த்துகளும் 1000 இ-பண அன்பளிப்பும்.!!

என்னதான் ஜாலியா சம்பவத்தை பகிர்ந்தாலும் கடைசியில் ஒரு செய்தி கொடுத்து எல்லாத்தையும் சாய்ச்சிப்புட்டே பிச்சி..!! :icon_rollout:

அருமையோ அருமை..!! பாராட்டுகள் பிச்சி..!! :icon_b:
இன்னும் இப்படியான டாடி போல கருத்துகளை அடிக்கடி வந்து கொடுமா..!!

பாராட்டுகளோடு,
அன்பு அக்கா,

அமரன்
07-11-2007, 11:15 AM
ரொம்பப்பிடிச்சிருக்கு...சொன்னவிதமும்.....காவி வந்த கருத்தும்...
செவ்வந்தி மன்றம் தாண்டி வந்து படைத்தமைக்கு வாழ்த்துகிறேன்...
நட்பூக்கள் வீட்டுக்கு தெரிந்து இருப்பது அவசியம்..

பிச்சி
07-11-2007, 11:19 AM
பிச்சியின் கைவண்ணம் முதன் முதலில் இங்கு பதித்ததுக்கு முதலில் வாழ்த்துகளும் 1000 இ-பண அன்பளிப்பும்.!!

என்னதான் ஜாலியா சம்பவத்தை பகிர்ந்தாலும் கடைசியில் ஒரு செய்தி கொடுத்து எல்லாத்தையும் சாய்ச்சிப்புட்டே பிச்சி..!! :icon_rollout:

அருமையோ அருமை..!! பாராட்டுகள் பிச்சி..!! :icon_b:
இன்னும் இப்படியான டாடி போல கருத்துகளை அடிக்கடி வந்து கொடுமா..!!

பாராட்டுகளோடு,
அன்பு அக்கா,



பணம் பத்திரமாக வந்து சேர்ந்துட்டுது. ரொம்ப நன்றிக்கா.

பாவம் திவி. ரொம்ப நொடிஞ்சு போய்டா அப்போ. இப்ப அவளைப் பார்க்கறது ரொம்ப ரேர்.

அன்புடன்
பிச்சி

பிச்சி
07-11-2007, 11:20 AM
ரொம்பப்பிடிச்சிருக்கு...சொன்னவிதமும்.....காவி வந்த கருத்தும்...
செவ்வந்தி மன்றம் தாண்டி வந்து படைத்தமைக்கு வாழ்த்துகிறேன்...
நட்பூக்கள் வீட்டுக்கு தெரிந்து இருப்பது அவசியம்..

காவி வந்த கருத்துன்னா என்ன அன்னா?

மிகவும் நன்றிகள் அன்ணா.

அன்புடன்
பிச்சி

அமரன்
07-11-2007, 11:22 AM
காவி வந்த கருத்துன்னா என்ன அன்னா?
மிகவும் நன்றிகள் அன்ணா.
அன்புடன்
பிச்சி
நட்பு வட்டத்துக்குள்ள அம்மா அப்பாவையும் அடக்குங்க என்பதை கொண்டு வந்திருக்கே உங்க படைப்பு:icon_b::icon_b:

பிச்சி
07-11-2007, 11:29 AM
நட்பு வட்டத்துக்குள்ள அம்மா அப்பாவையும் அடக்குங்க என்பதை கொண்டு வந்திருக்கே உங்க படைப்பு:icon_b::icon_b:

ஆமாம். நன்றி அண்னா

பென்ஸ்
07-11-2007, 12:51 PM
வாசிக்கும் போது என் உதட்டோரம் வந்த ஒரு சின்ன புன்னகை எதையோ நியாபக படுத்தியது...
சரி... வுடுங்க...

மன்மதன்
07-11-2007, 01:19 PM
இது மாதிரி கட்டுரை படிக்கறது ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கும்..:D அருமையா கொடுத்திருக்கீங்க.. :icon_b:


திவ்யா படுத்த படுக்கையாக காலைக் கூட எடுத்து வைக்கமுடியாம, வந்த காலை கட் பண்ணீட்டா.

காலை எடுத்து வைக்க முடியலேன்னா கட் பண்ணிடுவாங்களா.. அடக்கொடுமையே.:eek::rolleyes:

மனோஜ்
07-11-2007, 01:22 PM
அருமையா எழுதிஉள்ளீர்கள் பிச்சி
சம்பவம் கண்முன் நடப்பது பொன்று விருவிருப்பாதான் இருந்தத அந்த
டா டி சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல கதைஎழுதுனதுக்கு

மதி
07-11-2007, 02:16 PM
நல்லா இருக்கு உங்க அனுபவம்..
கடைசியில அந்த பையன் கட்டுன பில் எவ்ளோ ஆச்சு..?
அத சொல்ல வீட்டுட்டீங்க..

மீனாகுமார்
07-11-2007, 02:26 PM
நானும் அப்பாவோட கவிதையோ.. இல்ல டாடின்னு கூப்பிடுறது பத்தி ஏதோ சொல்ல வர்றாங்க போலன்னு வந்தா.... கடலை கதை.. ஆனாலும் தூள்.. அந்த டாடி கிட்டயே பொறுப்ப ஒப்படச்சதுல.... உங்க கடமைய நீங்க செஞ்சுட்டீங்க...

நல்ல சுவராஸ்யமாக இருந்தது.

அறிஞர்
07-11-2007, 02:52 PM
எல்லாரையும் போல் உள்ளே அப்பாவை பார்க்க வந்தால்... அழகான கலாய்ப்பு கதை....

அருமை பிச்சி.. புது பகுதிகளிலும் இன்னும் பல படைப்புக்களை கொடுங்கள்.

ஷீ-நிசி
08-11-2007, 03:47 AM
வாசிக்கும் போது என் உதட்டோரம் வந்த ஒரு சின்ன புன்னகை எதையோ நியாபக படுத்தியது...
சரி... வுடுங்க...


நல்லா இருக்கு உங்க அனுபவம்..
கடைசியில அந்த பையன் கட்டுன பில் எவ்ளோ ஆச்சு..?
அத சொல்ல வீட்டுட்டீங்க..

ஒரு வேளை இப்பிடி இருக்குமோ?!:)

ஒரு வேளை அப்பிடி இருக்குமோ?!:)

மன்மதன்
08-11-2007, 05:18 PM
ஒரு வேளை இப்பிடி இருக்குமோ?!:)

ஒரு வேளை அப்பிடி இருக்குமோ?!:)


அப்டி இப்டிதான் இருக்கும்.. :rolleyes:

அக்னி
09-11-2007, 10:42 PM
டாடியைத் தேடி வந்தால்,
டா டி யைப் பற்றி சுவையாக விழிப்படைய வைத்துவிட்டீர்கள்...
பாராட்டுக்கள் பிச்சி...

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உணரவேண்டும்...

ஓவியன்
11-11-2007, 07:55 AM
முதன் முதலா மன்றத்தில நான் கவிதையை விட்டுட்டு வேற இடத்திற்கு வந்திருக்கேன். அதுலயும் புதுசா தலைப்போடு வந்திருக்கேன்.வாருங்கள், வாருங்கள் தொடர்ந்து உங்களை இங்கே எதிர்பார்கின்றோம்...!! :)

அதெல்லாம் சரிதான் இதுக்கும் டா, டி க்கும் என்ன சம்பந்தமுனு பார்க்கிறீங்களா? டா வோ டீ யோ எதான்னாலும் டாடிகிட்ட சொல்லிடனும்.

ஹா, ஹா!

நல்ல கருத்து கூறிய விதமோ சூப்பர்...!! :)

பாராட்டுக்கள் பிச்சி...!!

ஓவியன்
11-11-2007, 07:56 AM
சரி... வுடுங்க...
அதெப்படி விடுறது......!! :)

சிவா.ஜி
11-11-2007, 08:58 AM
அடடா...பிச்சிகிட்டருந்து இப்பிடி ஒரு பட்டாசா.....அசத்தல். பா-வுக்கு காலொடிச்சி டி யாக்கி....என்னென்னவோ பண்ணியிருக்கீங்க.இருந்தாலும் சொன்னதை ரொம்ப சுவாரசியமா சொல்லியிருக்கீங்க பிச்சி. சூப்பர்.

இதயம்
11-11-2007, 01:51 PM
முதன் முதலா மன்றத்தில நான் கவிதையை விட்டுட்டு வேற இடத்திற்கு வந்திருக்கேன். அதுலயும் புதுசா தலைப்போடு வந்திருக்கேன்.

ஹையோ.. பிச்சிக்கு வெறும் கவித மட்டும் தான் தெரியும்னு பாத்தா காமெடியிலயும் பிச்சி... பிச்சி உதறிட்டாங்க போங்க..! அதென்னவோ தெரியல.. நம்ம பசங்க தான் ஹ்யூமர் சென்ஸை காட்டுறேன்னு சொல்லி கடிச்சி மண்டை காய வைப்பாங்க..! ஆனா, பொதுவா பொண்ணுங்களுக்கு ஹ்யூமர் சென்ஸ் அதிகம்ப்பா..! அந்த வகையில பிச்சி எழுதுன இது "கலக்குற சந்துரு.." கதை தான்..! நான் தலைப்பை பார்த்துட்டு ஏதோ "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" டைப் கதையா இருக்குமோன்னு வந்தா படத்தின் கடைசி ரீலில் வரும் ட்விஸ்ட் மாதிரி அந்த டாடிக்கும் டா..டி..க்கும் சம்பந்தமே இல்ல..!

பொதுவாவே "நம்ம இலட்சணம் தான் நமக்கு தெரியுமே..!"ங்கிறதால பொண்ணுங்க எழுதுறத படிக்கிறதுல பசங்களுக்கு ஒரு ஆர்வம் வர்றது இயற்கை (இதை நம்பாதவங்க பொண்ணு பேர்ல சேட்டிங் பண்ணி பாருங்க.... தெரியும்...!). ஆனா, இந்த பதிவை நான் படிக்க காரணம் பிச்சி ஒரு பொண்ணுங்கிறதால இல்ல.. கவிதைய மட்டும் கட்டிக்கிட்டு வாழ்ற பிச்சி, புதுசா கதை விட்ருக்காங்களேன்னு படிக்க வந்தேன்..! வந்ததுக்கு மோசமில்லாம ஒரு சூப்பர் காமெடி ஷோ பார்த்த திருப்தி கிடைச்சிது.!

இந்த டா.. டி.. சமாச்சாரம் ஒரு சர்வதேச குழப்பத்துக்கு ஈடானது. எப்படின்னா.. இந்த இரண்டையும் வச்சி நல்லது கெட்டது எதையும் தீர்மானிக்க முடியாது. உதாரணத்துக்கு அறிமுகமில்லாத ஆணுக்கும், ஆணுக்கும் இடையில் டா.. வந்தா கலவரம் நடக்க போவுதுன்னு அர்த்தம். நெருங்கிய இரு ஆண்களுக்குள் வந்தா நெருக்கமான நட்பு.! இதை அப்படியே பெண்களுக்கும் எடுத்துக்கலாம். அதே போல் ஆண் பெண்ணை டி.. போட்டா ஒண்ணு அங்க அன்பு வழியும், இல்லன்னா ஆபத்து வரும். இதத்தாண்டி வித்தியாசமா வர்றது தான் பிச்சி சொன்ன டா.. டி.. மேட்டர்ஸ். இன்னும் வித்தியாசமா இன்னொரு மேட்டர்.. என் (இளம் வயது) மாமாவும், அவரோட நெருங்கின நண்பரும் அவங்களுக்குள் வாடி, போடின்னு கூப்பிட்டுக்குவாங்க.. "இது என்ன வகை..?"ன்னு ரொம்ப நாள் யோசிச்சிருக்கேன். அதுவும் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி, அன்பின் சதவீதம் ஏறி இறங்கும் போது வாடி..ன்னும் வாம்மா..ன்னும் மாறும். மனிதர்களில் எத்தனை வகை, அதில் இது வகை போலிருக்கு.!

எப்பா..! பொண்ணுங்க உலகம் ஒரு தனி சாம்ராஜ்யம் போலிருக்கு..! அதை பிச்சி மாதிரி பொண்ணுங்க எழுதுற அனுபவங்களை படிச்சாலே தெரியுது..! ஆண்களை குழப்புறதுல பொண்ணுங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்ல..அதுக்கு உதாரணமா பல குழப்பங்கள் பிச்சி அனுபவத்தை படிச்சப்ப எனக்கு வருது. முதல்ல, பிச்சி ரொம்ப அமைதியான பொண்ணுங்கிற என்னோட எண்ணத்துல இன்னைக்கு அரை லோடு மண் விழுந்திடிச்சி..! ஒரு அடாவடி பெண் கும்பலுக்கு பிச்சி தலைவி போல தெரியுது. மக்கா உஷார்..!

அடுத்து ஒரு பெரிய சந்தேகம்.... தன் பின்னாடி பசங்க "கறுப்பு பூனைப்படை" வேலை பார்க்கிறத அவங்க விரும்புறாங்களா இல்லையா..? நான் கேட்ட (நல்லா படிங்க....கேட்ட...) பல அனுபவங்கள் இரண்டு பக்கமும் சப்போர்ட் பண்ணி என்னை சப்பையா குழப்பியிருக்கு..! அதை தெளிவு படுத்துங்க.. அடடா.. பிச்சியோட ப்ரெண்ட்ஸ்களிலும் எத்தனை வகை..? வன்முறையிலும் இத்தனை வெரைட்டி கிடைக்கும்னு இன்னிக்கு தான் தெரிஞ்சுது..! ஒரு சந்தேகம்.. திவ்யா வறுத்த கடலை எண்ணெய் இல்லாம சில நேரம் கருகிப்போயிடுமா..? எனக்கு தெரிஞ்சி கடலை எண்ணெய் இல்லாம தான் வறுப்பாங்க..! இதை க்ளியர் பண்ணிட்டா கடலையில் கவலை மறக்கும் பசங்களுக்கு வசதியா இருக்கும்.

அதென்ன அப்புடி சொல்லிப்புட்டீக..? பொண்ணுகளை பாத்தா பசங்க மட்டுமா பீட்டர் விடுறாங்க.?. அந்த பக்கமா பசங்க போனாலே பொண்ணுகளெல்லாம் பந்தாவா பீட்டர் விடுமே..! குறிப்பா... 10 வார்த்தைய மட்டும் சிக்கனமா தெரிஞ்சி வச்சிக்கிட்டு, கரெக்டா பசங்க அவங்க பக்கம் போகும் போது மட்டும் "பஞ்ச் டயலாக்" மாதிரி பக்குவமா, சிக்கனமா அந்த இங்கிலீஷ் வார்த்தைகள்ல கடைசியில் யா..யா.. போட்டு பேசுறது யா(ரு)..? பசங்களுக்கு நல்லா பீட்டர் விட தெரிஞ்சாலும் பொண்ணுங்க பாக்கிற பார்வையிலே அம்பேலாகி பீட்டர் அப்பீட்(டர்) ஆயிடும்..! நம்ம அப்பாவி வாசு ப்ரொப்போஸ் பண்ணுனது பத்தி தெளிவா சொல்லாததால அதைப்பத்தி கமெண்ட் அடிக்க முடியாது. ஆனா, அதுக்காக அந்த அப்பாவி வாங்கி தந்த ஐஸ்க்ரீம் தான் திவ்யா தலைவலி, வாந்திக்கு காரணம்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா..! இத்தனையும் வாங்கி கொடுத்து "திவ்யா"கிட்ட "தின்னுயா"ன்னு சொன்னதுக்கு காட்டுற நன்றியா இது..?

எல்லாம்... சரி தான்.. ஆனால், எல்லாரையும் கெடுக்கிற மாதிரி படம் எடுத்துட்டு, பிறகு படம் முடியுறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி அட்வைஸ் வைக்கிற கஸ்தூரி ராஜா ஸ்டைல்ல இவ்ளோ எழுதிட்டு "கடைசில எதானாலும் டாடிக்கிட்ட சொல்லிடணும்" சொல்லியிருக்கீங்க.. இவ்வளவு சொன்ன நீங்க, இந்த மேட்டரை உங்க டாடிக்கிட்ட சொன்னீங்களா..? நான் கேட்டது உங்க தாதா க்ரூப் டா..டி.. இல்ல.. "என் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது"ன்னு நெனச்சிக்கிட்டிருக்கிற உங்க "ஒண்ணும் தெரியாத" டாடி கிட்ட..!!

யவனிகா
11-11-2007, 02:39 PM
பிச்சியின் எழுத்துக்கள் என் காலேஜ் நாட்களை நினைவூட்டுகின்றது, சிரிப்பு நெடி வீசும் துறு துறு நடை...பாராட்டுக்கள்.தொடருங்கள் பிச்சி.அப்புறம் அந்தப் பையன் என்ன ஆனான்னு சொல்லவே இல்லை?

பிச்சி
12-11-2007, 10:41 AM
வாசிக்கும் போது என் உதட்டோரம் வந்த ஒரு சின்ன புன்னகை எதையோ நியாபக படுத்தியது...
சரி... வுடுங்க...

அண்ணா... ம்ம். புரிஞ்சது. புரிஞ்சது. நீங்கலும் ஒரு வாசுவா? :D

பிச்சி
12-11-2007, 10:49 AM
இது மாதிரி கட்டுரை படிக்கறது ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கும்..:D அருமையா கொடுத்திருக்கீங்க.. :icon_b:



காலை எடுத்து வைக்க முடியலேன்னா கட் பண்ணிடுவாங்களா.. அடக்கொடுமையே.:eek::rolleyes:

ரொம்ப நன்றி மன்மதன் ஜி. அது சும்மா எழுததனேன். கால் வேற, call வேற.

பிச்சி
12-11-2007, 10:52 AM
அருமையா எழுதிஉள்ளீர்கள் பிச்சி
சம்பவம் கண்முன் நடப்பது பொன்று விருவிருப்பாதான் இருந்தத அந்த
டா டி சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல கதைஎழுதுனதுக்கு

ரொம்ப நன்றி மனோஜ் அண்ணா

அன்புடன்
பிச்சி

பிச்சி
12-11-2007, 10:55 AM
நல்லா இருக்கு உங்க அனுபவம்..
கடைசியில அந்த பையன் கட்டுன பில் எவ்ளோ ஆச்சு..?
அத சொல்ல வீட்டுட்டீங்க..

எனக்குத் தெரியலை. இல்லாட்டி மறந்துட்டேன்.
ரொம்ப நன்றி மதி அண்ணா

அன்புடன்
பிச்சி

கஜினி
12-11-2007, 11:19 AM
ஆஹா... பிச்சி சகோதரியா இது. நீங்கள் கவிதையில்தான் மன்னி என்று நினைத்தேன். கட்டுரைகளிலும் மன்னி என்று நிரூபித்து, பின்னி பெடல் எடுத்திட்டீங்க. ஷீ-நிசி அண்ணா சொன்னமாதிரி நானும் அப்பாவைப் பற்றிய கவிதை விமர்சனம் இருக்கும் என்று நினைத்தேன். அருமை பிச்சி சகோதரி.

பிச்சி
22-11-2007, 07:03 AM
நானும் அப்பாவோட கவிதையோ.. இல்ல டாடின்னு கூப்பிடுறது பத்தி ஏதோ சொல்ல வர்றாங்க போலன்னு வந்தா.... கடலை கதை.. ஆனாலும் தூள்.. அந்த டாடி கிட்டயே பொறுப்ப ஒப்படச்சதுல.... உங்க கடமைய நீங்க செஞ்சுட்டீங்க...

நல்ல சுவராஸ்யமாக இருந்தது.

ரொம்ப நன்றி அண்ணா. நான் எப்பவுமே அப்பா பக்கம்தான்.அன்புடன்பிச்சி

பிச்சி
22-11-2007, 07:05 AM
எல்லாரையும் போல் உள்ளே அப்பாவை பார்க்க வந்தால்... அழகான கலாய்ப்பு கதை....

அருமை பிச்சி.. புது பகுதிகளிலும் இன்னும் பல படைப்புக்களை கொடுங்கள்.

மிக்க நன்றி அறிஞர் அண்ணா, இன்னும் தருகிறேன். உங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றிஅன்புபிச்சி

பிச்சி
22-11-2007, 07:12 AM
டாடியைத் தேடி வந்தால்,
டா டி யைப் பற்றி சுவையாக விழிப்படைய வைத்துவிட்டீர்கள்...
பாராட்டுக்கள் பிச்சி...

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உணரவேண்டும்...

மிக்க நன்றி அக்னி அண்ணா. அன்புடன்பிச்சி

பிச்சி
22-11-2007, 07:14 AM
வாருங்கள், வாருங்கள் தொடர்ந்து உங்களை இங்கே எதிர்பார்கின்றோம்...!! :)


ஹா, ஹா!

நல்ல கருத்து கூறிய விதமோ சூப்பர்...!! :)

பாராட்டுக்கள் பிச்சி...!!

நன்றி ஓவியன் அண்ணா.

பிச்சி
22-11-2007, 07:15 AM
அடடா...பிச்சிகிட்டருந்து இப்பிடி ஒரு பட்டாசா.....அசத்தல். பா-வுக்கு காலொடிச்சி டி யாக்கி....என்னென்னவோ பண்ணியிருக்கீங்க.இருந்தாலும் சொன்னதை ரொம்ப சுவாரசியமா சொல்லியிருக்கீங்க பிச்சி. சூப்பர்.

மிக்க நன்றி சிவா.ஜி அன்னா. ஏதோ என்னால முடிஞ்சது நான் எழுதியிருக்கேன். சகிச்சுட்டு படிச்சதுக்கு நன்றி அண்ணாஅன்புடன்பிச்சி

பிச்சி
22-11-2007, 07:17 AM
ஹையோ.. பிச்சிக்கு வெறும் கவித மட்டும் தான் தெரியும்னு பாத்தா காமெடியிலயும் பிச்சி... பிச்சி உதறிட்டாங்க போங்க..! அதென்னவோ தெரியல.. நம்ம பசங்க தான் ஹ்யூமர் சென்ஸை காட்டுறேன்னு சொல்லி கடிச்சி மண்டை காய வைப்பாங்க..! ஆனா, பொதுவா பொண்ணுங்களுக்கு ஹ்யூமர் சென்ஸ் அதிகம்ப்பா..! அந்த வகையில பிச்சி எழுதுன இது கலக்குற சந்துரு கதை தான்..! நான் தலைப்பை பார்த்துட்டு ஏதோ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை டைப் கதையா இருக்குமோன்னு வந்தா படத்தின் மிகவும் நன்றி இதயம் அண்ணா. உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும் மனமகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு பல விசயங்கள் தெரிந்திருக்கிறது. இதையே ஒரு தொகுப்பாக வெளியிடலாமே? அறிஞர் அன்னா தான் கவிதை மட்டும் எழுதவதோடு நிறுத்தாமே இன்னும் பல வரைட்டி கொடுனு சொன்னார். நன்றி அறிஞர் அன்னா.அப்பறம். உங்க சந்தேகம். என்னால் முடிஞ்ச அலவுக்கு தீர்த்து வைக்கிறேன்.நான் வீட்டுல எவ்வளவு அமைதியோ அதற்கு நேரெதிர் காலேஜில். ஆனா இப்பதான் வீட்லயே முடங்கிக் கிடக்கிறேனே. திவ்யா ஓவர் கடலை மன்னி. எப்படித்தான் பேசறாளோ தெரியலை. அப்படியே வந்து கொட்டிடே இருக்கும். அதுத்தான் அப்படி கருகிப் போயிடும்னு சொன்னேன். டாடிகிட்ட சொல்லுங்கன்னு சொன்னேனேதவிர நான் போய் சொல்லவேயில்லை

பிச்சி
22-11-2007, 07:18 AM
மிக்க நன்றி யவனிகா மேடம்,.கஜினி அவர்களேஅன்புடன்பிச்சி