PDA

View Full Version : அந்த நாய்க்கு நன்றி - ரஜினியின் பேட்டி



xavier_raja
07-11-2007, 08:54 AM
இது ரஜினி குமுதம் பத்திரிகைகாக கொடுத்த பேட்டி (80களில் என்று நினைகிறேன்)

அபுர்வ ராகங்கள் படத்திற்கு பிறகு ரஜினி முன்று முடிச்சு படத்தில் நடித்துகொண்டிருந்த்தார். ஒருநாள் இரவு அவர் பொமரைன் நாயுடன் வாக்கிங் சென்றுகொண்டு இருந்த்தார்,வழியில் அந்த படத்தின் தயாரிப்பாளர் அலுவலகம் வரவே அவரை பார்பதற்காக நாயை வெளியில் நிற்க வைத்துவிட்டு வீட்டினுள் சென்றார். அந்த அலுவலகதில் உள்ள Security அவரை பார்த்து யாரையா நீ இந்த நேரத்தில் வெளியில் போ என்று விரட்டினாராம். ரஜினி அவரை பார்த்து Producerஐ பார்க்கனும் என்றும் அவர் எடுத்துகொண்டு இருக்கும் படத்தில் தான் நடித்துகொண்டுஇருப்பதாவும் கூறினார். ஆனால் அந்த Security அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு நீ இந்த படத்தில் நடிக்கிறியா, யாரை ஏமாற்றபார்கிறாய் என்று அவரை விரட்டினாராம். அந்த நேரத்தில் ரஜினியில் நாய் உள்ளே வந்த்துவிட்டதாம். அந்த நாயை பார்த்த Security நாய் யாருது சார் என்று ரஜினியை கேட்டாராம்,ரஜினி தன்னுடையதுதான் என்று கூறவும் அவர் அப்படினா நீங்க உள்ளே வெய்ட் பண்ணுங்க சார், நான் producer sirஐ கூப்பிடுகிரேன் என்று கூறினாராம். காரணம் பணக்காரர்கள்தான் அந்த நாய் வைத்துஇருப்பவர்கள்அப்பொழுது. தன்னுடைய தோற்றத்தை மதிக்காமல் நாயின் தோற்றத்தை பார்த்து என்னை உள்ளே விட்ட அந்த நாய்க்கு நன்றி என்று ரஜினி அந்த பேட்டியில் கூறியிருந்த்தார்.

Narathar
07-11-2007, 10:07 AM
நாயைப்பார்த்து
மனிதனை எடை போடுகிறார்கள்
காலத்தின் கொடுமை இது

அன்புரசிகன்
07-11-2007, 11:27 AM
என்ன உலகமிது....? நாயால் மனிதனுக்கு காரியம் ஆகிறது தான். ஆனால் இவ்வாறும் நிகழ்கிறது என்பது இன்று தான் தெரிந்துகொண்டேன்.

lolluvathiyar
10-11-2007, 06:07 AM
அருமையா அனுபவம் உன்மைதான் நாயை பார்த்து மனிதனை எடை போடும் காலம் இது. பம்மரேனியன் நாய் வசதியை மட்டுமே குறிக்கும். ஒரு ஜோஜ் கூட உன்டு நாய் மனுசனுக்கு காவல் காக்க வளர்க படுகிறது. ஆனால் பம்மரேனியன் நாயை காசு கொடுத்து வாங்கி அத காவல் மனுசன் காக்கனுமா?

sarcharan
10-11-2007, 08:33 AM
விந்தையான மனிதர்கள் வாழும் உலகம் இது என்பது சரிதான்.

அக்னி
11-11-2007, 10:23 PM
நாயின் தரம் பார்த்து எடை போடப்படும் மனிதத் தரம்...
இழிநிலையில் ஆறறிவா... ஐந்தறிவா...?

பகிர்தலுக்கு நன்றி...