PDA

View Full Version : கனவின் மிச்சம் !



Hayah Roohi
07-11-2007, 06:32 AM
நிலவின் கிரணங்கள்Е.
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !

இதயமே கழன்று விடுவது
போலЕ..
ஒரு எரிகல்Е
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவுЕ.
இனிமையாய் இருக்கிறது !

மேகப்பஞ்சணைகள்Е.
கனவுகளின்
மிச்சங்களாய்ЕЕ.

தத்தி தத்தி வரும்
தென்றல் குழந்தைЕ.
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்Е
இந்த செக்கன்Е.
இதயம்Е.
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்Е.
பாரமற்றதாய்Е..

எங்கோ இரையும்
ஒரு
வண்டின் ரீங்காரம்Е
செவிகளில்
சங்கீதமாய்Е..
சங்கீதமாய்Е..

தூங்கி விழும்
அந்த
இலை மடியிலிருந்துЕ
ஒரு
`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்
இதயங்களில் தீட்டுங்கள் !!!

рокро╛ро░родро┐
07-11-2007, 05:00 PM
இரவு இனிமையாய் எளிமையாய் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

எல்லோரும் எடுத்தது போகவும் எப்போதும் இயற்கையில் மிச்சம் இருக்கும்.

வாழ்த்துக்கள்.

роЕрооро░ройрпН
07-11-2007, 05:59 PM
இரவு தூங்கும் நேரம்
தூங்காத ஒரு இதயம்..
விழிகளுக்கு இடுகிறது கட்டளை
சிறைப்படுத்துங்கள் இக்காட்சியை...



தூங்கி விழும்
அந்த
இலை மடியிலிருந்துЕ
ஒரு
`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !
அசத்தல்....
சொப்பனத்தில் பச்சிலை..
சொட்டுகிறது எச்சிலை...
ஜொள்ளு ஜாஸ்தியானதோ?

அருமையான வருணனைகள்
வருணம் குழைத்த வார்த்தைகள்..
பாராட்டுக்கள் ஹாயா ரூஹி.....!

роЗро│роЪрпБ
07-11-2007, 07:53 PM
இயற்கையை ரசிக்க, உள்வாங்க, உள்ளில் கரைய
இரவிலாவது கொஞ்சம் நேரம் ஒதுக்கு..

கவி வைரமுத்து அடிக்கடி சொல்வது இது.

உங்கள் கவிதை கண்டால் அவர் மிக மகிழ்வது நிச்சயம்.

வாழ்த்துகள் கவிஞர் ஹயாத் ரூஹி....


( செகண்ட் - நொடி என தமிழ்ச்சொல் உள்ளதே சந்தம் சிதைக்கமால் பொருத்த?)

jpl
08-11-2007, 03:16 AM
விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !
நயமான கற்பனை.மன்ற கவியொருவர் சிட்டுக்குருவிக்கு
உவமைப்படுத்திருந்தார் விழியினை அல்லது இமையினை.
(இயன்ற வேளை மீண்டும் 1 முறை அக்கவியை படிக்க வேண்டும்.)

роЖродро┐
08-11-2007, 05:40 PM
உங்கள் எல்லா கவிதைகளையும் படித்தேன்.. செறிவு சொல்லாட்சி கவிதைக்கு தனி சுவை சேர்க்கிறது..

роЕроХрпНройро┐
09-11-2007, 10:27 PM
இரவின் கருமை
வெறுமையல்ல...
உன் விழி ரசித்தால்...

இரவின் நிசப்தம்
மௌனமல்ல...
உன் செவி கிரகித்தால்...

நாளின் சோர்வைத் தீர்க்கும்
இரவு... வரம்...

பாராட்டுக்கள் ஹயா ரூஹி அவர்களே...

இளசு அண்ணா குறிப்பிட்ட செக்கன் பற்றியது,
என் மனதிலும் நெருடியது...
நொடி அல்லது வினாடி ஆகி இருந்தால், இன்னமும் மிளிரும்...
இந்த இரவு...

роУро╡ро┐ропройрпН
13-11-2007, 07:58 AM
ஒரு பாடல் வரிகள் எனக்கு நிரம்பவே பிடிக்கும் அது....

"கண்ணிரண்டும் செவியும் திறந்திருந்தால் சுற்றி சுற்றி இன்பமிருக்கு...."

உண்மைதான், நம்மைச் சுற்றி எத்தனையோ இன்பங்கள் கொட்டிக் கிடக்க நாம் தான் கண்டு கொள்வதில்லை...

இந்தக் கவிசொல்லும் இரவின் அழகு கூட...
கண்ணையும் செவியையும் திறந்து வைத்து மற்றவரையும் திறக்க வைத்த சகோதரியின் கவி வரிகள் அழகு....

பாராட்டுகள் சகோதரி..!! :icon_b:

роЬрпЖропро╛ро╕рпНродро╛
13-11-2007, 02:53 PM
உங்கள் கவிதையைப் படித்தபோது, சிறு நேரமாவது குளிரும் இரவின் தனிமையில் இயற்கை ரசிக்க ஆவலைத் தூண்டியுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் ஹாயாருஹி.