PDA

View Full Version : முற்றம்



ஆதி
07-11-2007, 05:55 AM
முற்றம்

தென்னை நிழல் விழும்
உன் முற்றத்தை
நீ கூட்டும்
அழகே தனி.


அந்த நளினத்தில்
கரைய
நானும்
என் காதலும்
பார்வை
தவமிருப்போம் தினம்.


ஈர குழல் முடிந்து
நீல தாவணியில்
நீ வந்து...


தரை கூட்டி
தெள்ளிய தண்ணீர் தெளித்து
வெள்ளிய கோலம் இடுகையில்
நீர்வார் நெற்றியை
உன் புறங்கையால் துடைப்பாய்..


அப்பொழுது
என்னை வெளியேறி ஒருவன்
உலக காற்றை
குளிர்த்தும் விசிறியும்..
மொத்த வெயிலையும்
மறைக்கும் குடையும்..
உனக்கு கொணர்வான்..


நேற்று வெயில் விழும்
முற்றத்தை கூட்டி திரும்பினாய்
என் மனைவியாய்...
ஒருத்தனும் வெளிவரவில்லை
உனக்கு விசுறவும்..
ஒரு டம்ளர் தண்ணீர் தரவும்..

-ஆதி

பூமகள்
07-11-2007, 06:35 AM
அப்பொழுது
என்னை வெளியேறி ஒருவன்
உலக காற்றை
குளிர்த்தும் விசிரியும்..
மொத்த வெயிலையும்
மறைக்கும் குடையும்..
உனக்கு கொணர்வான்..
நல்ல ரசனையான வரிகள்..!! பாராட்டுகள்..!

நேற்று வெயில் விழும்
முற்றத்தை கூட்டி திரும்பினாய்
என் மனைவியாய்...
ஒருத்தனும் வெளிவரவில்லை
உனக்கு விசுரவும்..
ஒரு டம்ளர் தண்ணீர் தரவும்..
காதலியாயிருக்கையில் குடை பிடித்தல் பெருமை..!
கட்டியவள் ஆனவுடன் விசிறுதல் சிறுமையோ??

எதார்த்த வார்ப்பு.. கவிதை சிறப்பு..!
வளர்க... இன்னும் தருக..!
வாழ்த்துகள்..!

gans5001
07-11-2007, 06:53 AM
முற்றம்
நீல தாவனியில் நீ வந்து...


குளிர்த்தும் விசிரியும்..

உனக்கு விசுரவும்..

-ஆதி

அழகிய கவிதை.

"காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும் வரை" என்ற கவியரசரின் வரிகளை நினைவுபடுத்தும் வளமான வரிகள்

அடிகோடிட்ட எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம்

மனோஜ்
07-11-2007, 07:02 AM
அருமை கவிதைக்கு நன்றி

பிச்சி
07-11-2007, 11:35 AM
காதலிக்கும் போது இனிக்கும் உள்ளம். பிறகு கசப்பது ஏன்? உண்மையை சொன்னாலும் பாவம் பென்கள்.

அன்புடன்
பிச்சி

அறிஞர்
07-11-2007, 03:05 PM
கவிதை அருமை.. எழுத்துப்பிழைகளை களையும்பொழுது.. இன்னும் கவிதை அழகாக இருக்கும்.


அழகிய கவிதை.

"காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும் வரை" என்ற கவியரசரின் வரிகளை நினைவுபடுத்தும் வளமான வரிகள்

அடிகோடிட்ட எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம்

கன்ஸை திரும்ப மன்றத்தில் காண்பது குறித்து மகிழ்ச்சி.. தொடர்ந்து வாருங்கள்.. புதியவர்களி தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.. அது அவர்கள் வளர உதவியாக இருக்கும்.

அமரன்
07-11-2007, 04:12 PM
ஆதி உங்கள் கவிதைகள் அனைத்தும் இல்லறம் தொடர்பாகவே உள்ளது. மனைவி சுமைதாங்கியாகவும், அதைக்கண்டு கணவன் காலம் கடந்து உருகுவதாகவும் கவிகள் அமைந்துள்ளன. அந்த வகையில் இதுவும் ஒன்று.. எல்லாக்கணவன்களும் இப்படி இல்லை.. இப்படியான கணவர்கள் இல்லாமலும் இல்லை.. அவை சொற்ப அளவே... அப்படி இருப்பவர்களில் பலர்கூட இப்படியான தருணங்களில் காதலை வெளிக்காட்ட முடியாது இருக்கலாம் அல்லவா... காதலனாக இருந்தபோது இல்லாத பொறுப்புகள் கூடுதலாக அவனுக்கு வந்து சேர்ந்து இருக்கலாம்.. அதனால் அவன் காதல் சோர்ந்தமாதிரி இருக்கலாம்.. எப்படியாயினும் சொல்லாட்சி நன்று.. பாராட்டுகின்றேன்.. தொடருங்கள்.. வளம்பெற வாழ்த்துகிறேன்..

இளசு
07-11-2007, 08:03 PM
ஒரே நிகழ்ச்சி..
அவள் கல்லில் கால் தடுக்க, காயம், குருதி, வலி..

இரு காலகட்டங்கள்:

1) காதலன்: பாழாய்ப்போன கல்..அவள் பிஞ்சுப்பாதம் தாங்குமா?

1) கணவன்: கண் என்ன முதுகிலா இருக்கு? பார்த்து நடக்கக்கூடாது?

படித்த துணுக்கு இது..
பரிணாம மாற்றம் இது..

வருந்தலாம்..ஆனால் நிதர்சனம்..

ஆதியின் கவிதைக்குப் பாராட்டுகள்..

என் அருமை நண்பன் கண்ஸின் வரவும் பதிப்பும் கண்டு -

ஆடாத மனமும் ஆடுதே..
ஆனந்த கீதம் பாடுதே!

நேசம்
08-11-2007, 02:23 AM
பொறுப்புகள் கூடினாலும் காதலில் சலிப்பு அடையகூடாது. அமரன் ஜி
adhidin க்கு வாழ்த்துக்கள்

அமரன்
08-11-2007, 09:03 AM
பொறுப்புகள் கூடினாலும் காதலில் சலிப்பு அடையகூடாது. அமரன் ஜி
adhidin க்கு வாழ்த்துக்கள்
மன்னிகவேண்டும் நேசம்.. நான் சலிப்பைச் சொல்லவில்லை. கோலம்போடும்போது எட்டிப்பார்க்கும் ஒருவனை விட காலைமுதல் மாலை வரை வேலை செய்து களைத்தவள் அசதிபோக்க செல்லமாக தோள் சேர்த்து தட்டிக்கொடுக்கும் ஒருவன் எடிப்பார்த்தால் காலதல் பெருக்கெடுக்கும்.. நவீன வேக உலகில், சுகமான சுமைகள் அதிகமான நிலையில் எபடி இருக்க முடியும் என்பதை சொன்னேன்.. அதற்காக காதல் சலிக்கவில்லை. அதன் இனிப்பும் குறையவில்லை..

gans5001
08-11-2007, 10:18 AM
இளசுக்கும் அறிஞருக்கும் நன்றி... இன்னமும் மறக்காமல் இருப்பதற்கு. முன்பு சொந்தக்காலில் நின்றேன். இப்போது ஒரு அலுவலகத்தில் பணியாற்றுகிறேன் (கடந்த 2 வருடங்களாக). அதுவே காணாமல் போனதன் காரணம். இனி அடிக்கடி வர முயற்சிக்கிறேன்

ஆதி
08-11-2007, 05:02 PM
உங்கள் கருத்தை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்..

பல தடைகளை, எதிர்ப்பை, கட்டுப்பாடுகளை, மதத்தை, சாதியை எதிர்க்கொண்டு வெற்றிப் பெற்றும், திருமனத்திற்கு பிறகு பலக்காதல் தோற்கிறது..

அந்த தோல்வியின் துவக்க புள்ளிகளில் இருந்துதான் புறப்பட்ட எண்ணங்கள் தான் இந்த கவிதைகள்..

அது மட்டுமின்றி சமூகத்தின் சில அவலங்களை, கொடுமைகளை சிறமப்படாமல் மற்றவரை சிறமப்படுத்தாமல் எளிமையாகவும் யதார்த்தமாகவும் சொல்லிப்போக முடியும் என்கிற என் ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடுகள்தான் இவை..

ஆதி
08-11-2007, 05:09 PM
பெண்மைக்கு மட்டுமல்ல காதலுக்கும் ஏற்படுகிற மன அவலத்தைதான் சொல்லி இருக்கிறேன்..

இது வெறும் கற்பனையின் கிற்றுக்கள்தான் நிஜங்களின் நிழலோ நிகழ்வோ இல்லை..

ஆதி
08-11-2007, 05:18 PM
பூமகள்.. உங்கள் சுட்டுவிரல் கவிதையின் நாயகனை நோக்கி நீண்டது எனின்.. அதில் எந்த வியப்பும் எனக்கில்லை..

என்னை நோக்கி நீண்டதாயின் உங்களுக்கு ஒன்று சொல்ல கடமைப் பட்டுள்ளேன்..

என் வாழ்கையின் நிகழ்வு இல்லை இந்த பதிவு..

பெறும்பாலான கவிதைகள் அதுவும் காதல் கவிதைகள் திருமணத்திற்கு முன் கொண்ட காதலையே பாடுகின்றன.. திருமனதிற்கு பின்பும் காதல் காதலாய் இருக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இது..

ஆதி
12-11-2007, 03:00 AM
நன்றி அனைவருக்கும்