PDA

View Full Version : அப்பா - மிளகுக் கவிகள்ஆதவா
07-11-2007, 04:16 AM
எனது எல்லா செய்கைகளும்
தந்தையைப் போலுள்ளதாம்
பயமாகத்தான் இருக்கிறது
அவரைப் போல வந்திடுவேனோவென்று!

ஆதவா
07-11-2007, 04:26 AM
அவரிடமிருந்து அதட்டல்
"வேளைக்கு உணவிடாவிடில் அல்சர் வரும்"
இது அக்கறையா?
எச்சரிக்கையா?

அமரன்
07-11-2007, 10:57 AM
மிளகு
கடிக்கும்போது உறைக்கும்
பிறகு
உடலுக்கு குளிர்ச்சி தரும்....
அப்பப்பா-என்
சின்ன வயசில் சொன்னது..!

ஆதவா
07-11-2007, 04:12 PM
மிளகு
கடிக்கும்போது உறைக்கும்
பிறகு
உடலுக்கு குளிர்ச்சி தரும்....
அப்பப்பா-என்
சின்ன வயசில் சொன்னது..!

நன்றி...
தலைப்ப்பை புரிந்துகொண்டமைக்கு நன்றி அமரன்....

அமரன்
07-11-2007, 04:14 PM
நன்றி...
தலைப்ப்பை புரிந்துகொண்டமைக்கு நன்றி அமரன்....
நேரமின்மை தலைப்பை 'பார்க்க'த்தான் வழிவகை செய்தது ஆதவா...

ஆதவா
07-11-2007, 04:19 PM
தானாடாவிடினும்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்

ஆதவா
07-11-2007, 04:25 PM
சண்டை ஓய்ந்த பின்னே
அச்சம் தொத்தும்
நாளை எனக்கெதிரேவும்
நடக்கலாம்.

அமரன்
07-11-2007, 04:27 PM
சண்டை ஓய்ந்த பின்னே
அச்சம் தொத்தும்
நாளை எனக்கெதிரேவும்
நடக்கலாம்.

வாழ்க்கையில் பல காட்சிகள்
மறுதலிக்கின்றனவோ என
எண்ண வைத்த தருணங்கள் பல...

ஆதவா
07-11-2007, 04:30 PM
வாழ்க்கையில் பல காட்சிகள்
மறுதலிக்கின்றனவோ என
எண்ண வைத்த தருணங்கள் பல...

நிச்சயமாக...

இளசு
07-11-2007, 07:13 PM
மருந்தாய் காரமாய்
சுவையாய் நெடியாய்
மிளகின் குணங்கள்
சுவாரசியமான முரண்கள்..

கண்டிப்பும் அன்பும்
கரிசனமும் சிடுசிடுப்புமான
அப்பாக்களை அலசி ஆராதிக்க
ஆதவா எடுத்த தலைப்பு அருமை..

அம்மா - நெய்ப்பொங்கல்
அப்பா - கருமிளகு..
இரண்டும் ஒன்றாய்
இருந்தால்தான் ருசிக்கும்!


--

மறுதலிப்பு...
அழகான பார்வை அமரா..

deja ()vu....
இந்த அழகிய சொற்றொடர் சொல்வதும் அதைத்தான்..

ஆதவா
09-11-2007, 05:59 AM
மிகுந்த நன்றிங்கள் இளசு அண்ணா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் பாராட்டு மாலை..... பூரிப்பு எனக்கு......

இந்த தொடர் இன்னும் தொடரும்....

ஆதவா
09-11-2007, 06:01 AM
குறைந்த வயதினில்
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.

gans5001
09-11-2007, 11:27 AM
எல்லா மிளகும் சுவை கூட்டுவதில்லை இளசு... சில நேரங்களில் மிளகற்ற பொங்கலே சுவையாய் இருக்கக் கூடும்.

இயந்திர வாழ்வில் நாம் என்ன செய்கிறோம்.. நம் பிள்ளைகட்கு களிமண் மிளகாய் பொய்முகம் காட்டுகிறோமோ?

நாமும் அப்பாக்கள் தான்.. இனிய மிளகாய் இனியாவது இருக்க முயற்சிப்போம்

ஷீ-நிசி
09-11-2007, 01:24 PM
மிளகுகவிகள்...

உலகில் அப்பாவுக்கும் மகனுக்கும் எப்பொழுதுமே ஒருவித பனிப்போர் இருந்துக்கொண்டேதான் இருக்கும்...

முதல் நாள் அப்பாவை எதிர்த்து பேசிவிட்டு அதை நினைத்து அழுகின்ற மகன்கள் ஏராளம்! பிள்ளையை நினைத்து கவலைபடும் தந்தைகளோ ஏராளம்! ஏராளம்!

இந்த இருவருக்குமிடையேயான கோபதாபங்கள் நிறைய உள்ளன. இதை ஆதவா துவக்கி இதன் உணர்வுகளை மிக அழகாக சொல்லிக்கொண்டிருப்பது மிகவும் உணர்வுபூர்வமாகத்தான் உள்ளன...

இந்த ஏழாம் பொருத்த உறவிற்கு,
இத்தலைப்பு சாலப்பொருந்தும்!!

சாம்பவி
11-11-2007, 09:31 AM
சண்டை ஓய்ந்த பின்னே
அச்சம் தொத்தும்
நாளை எனக்கெதிரேவும்
நடக்கலாம்.

காரம் வாய்ந்த
குறுமிளகுக் கவிகள்
கஷாயம் போலும்
கசக்கும் உண்மைகள்... !

அன்னையிடத்தும்
அதே சங்கதி தான்....
மகளுக்கு,..... !!


வாழ்க்கையில் பல காட்சிகள்
மறுதலிக்கின்றனவோ என
எண்ண வைத்த தருணங்கள் பல...
மறுதலிப்பு...
..

மறுதலிப்பு.... !!!!!!
நெருடுகிறதே.... !

அன்று
யேசுவை யூதாஸ்
மூன்று முறை
மறுதலித்தது... !
மறுக்கவே...
அன்றி...
மறுஒளிபரப்புக்கில்லையே....!

மறுத்து மறுதலிக்கிறேன்....
மறுதலிப்பு - வேறுபடலானதனால்... !

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையப் போவதை....
முன்பே உரைப்பது
முன்னோட்டமன்றோ... !

யவனிகா
11-11-2007, 09:36 AM
..

அம்மா - நெய்ப்பொங்கல்
அப்பா - கருமிளகு..
இரண்டும் ஒன்றாய்
இருந்தால்தான் ருசிக்கும்!


ஆதவாவுடைய கவிதைக் காரமாகவும்...இளசு அவர்களின் பின்னூட்டக் கவிதை ருசியாகவும் இருக்கிறது.

இளசு
11-11-2007, 01:25 PM
சாம்பவி..

மறுதலிப்பை மறுபார்வை பார்த்துத் திருத்தியமைக்கு நன்றி..
ஈடான தமிழ்ச்சொல் இன்னும் தேடவைத்துவிட்டீர்கள்..

அருமை கண்ஸ்.. விமர்சனத்திலகம்....

மிளகிளகாமல் மிளகாயாய் தொடர்ந்துகாய்த்தால்
வெறும் பொங்கல் போதும் என்ற கண்ஸின் கருத்தையும்
''மறுதலிக்க'' முடியவில்லை!

இர(ரு)சித்தமைக்கு நன்றி யவனிகா..

ஆதவா..

கன்ன அடி
இதய அடி
வாழையடி வாழை!
உனக்கும் மகன் பிறப்பான்!

சாம்பவி
11-11-2007, 01:39 PM
ஈடான தமிழ்ச்சொல் இன்னும் தேடவைத்துவிட்டீர்கள்..


முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையப் போவதை....
முன்பே உரைப்பது
முன்னோட்டமன்றோ... !

உழைப்பெல்லாம் விழலுக்கோ.... !

இளசு
11-11-2007, 01:48 PM
ஹாஹ்ஹ்ஹா!

விழலுக்கல்ல சாம்பவி..

கொஞ்சம் காய்ந்த வெற்று நிலத்துக்கு.. ( என் மூளையைச் சொல்கிறேன்..)

வருமுன் உரைப்பது - முன்னோட்டம்..

''ஏற்கனவே நிகழ்ந்ததோ'' என மருகவைப்பது..?

சாம்பவி
11-11-2007, 01:58 PM
''ஏற்கனவே நிகழ்ந்ததோ'' என மருகவைப்பது..?

பூர்வ ஜென்ம வாசனை.... !!!!!!!!

meera
11-11-2007, 02:00 PM
ஆதவா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உன் கவிதை படைப்பை கண்டேன். மிளகு காரம் அருமை.

இளசு
11-11-2007, 02:06 PM
பூர்வ ஜென்ம வாசனை.... !!!!!!!!

நன்றி சாம்பவி..

இன்னும் சுருக்கமாக, நச்சென சிக்கினால் சொல்லுங்கள்..

http://en.wikipedia.org/wiki/D%C3%A9j%C3%A0_vu

ஆங்கிலத்திலும் சிக்காமல்தான் deja என்ற ஃபிரஞ்சுச்சொல்லை அப்படியே பயன்படுத்துகிறார்கள்..ஆதவா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உன் கவிதை படைப்பை கண்டேன். .

நீண்ட இடைவெளிக்குப்பின் காணக்கிடைக்கும் மீராவுக்கு வரவேற்பு..

meera
11-11-2007, 02:11 PM
நீண்ட இடைவெளிக்குப்பின் காணக்கிடைக்கும் மீராவுக்கு வரவேற்பு..


வரவேற்புக்கு நன்றி இளசு அண்ணா.:D:D:D

மன்மதன்
11-11-2007, 09:29 PM
படித்து ரசிக்கிறேன்.. தொடரட்டும் உங்கள் மிளகுக்கவிகள் ஆதவா..

நண்பர்களின் பின்னூட்டங்கள் பல புதிய விசயங்களை தெரிந்துகொள்ள உதவுகிறது..நன்றி..

அமரன்
12-11-2007, 07:36 AM
பிரெஞ்சுவில் deja vu என்பதை பூர்வகாட்சி (பூர்வபந்தம்) என்பது போன்ற கருத்துப்படச் சொல்வார்கள்.. அந்தவகையில் மறுதலைத்தல் என்பது பொருத்தமாக இருக்குமோ..?

சாம்பவி, இளசு அண்ணா இருவருக்கும் நன்றி...

admin
11-12-2007, 11:58 AM
மிளகுக் கவிகள்

அப்பா