PDA

View Full Version : உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க.......!



தங்கவேல்
06-11-2007, 08:36 AM
உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க எழுதுகின்றேன். எனது வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள். எத்தனையோ தோல்விகள். என் இரு குழந்தைகளின் முகத்தில் பசி தெரிய கூடாது என்பதற்காக,
பசிக்கா இரண்டு வருடம் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உயிர் வளர்த்தேன். தோல்விகள், தோல்விகள். மனது வெந்து வெந்து, புழுங்கினேன். எனது பாலைவன வாழ்க்கையில் தென்றலாய் வந்தவர்கள் எனது வாழ்க்கைக்காக நண்பர்கள் தான்.

மன்ற உறவு ஒருவர் என்னையும் ஒரு பொருட்டாக கருதி, எனக்காக அவரின் நேரத்தையும், பொருளையும் செலவிட்டு, உடனடியாக உதவி செய்தார். யாரிடமும் சொல்லக்கூடாது என்று வேறு சொல்லி விட்டார்.

அவர் முகம் எப்படி இருக்கும் ? தெரியாது.
குரல் எப்படி இருக்கும் ? தெரியாது
எந்த ஊர் ? தெரியாது
சிவப்பா கருப்பா ? தெரியாது.

இறைவனுக்கு கூட முகங்கள் உண்டு. ஆனால் இவரை என்னெவென்று சொல்லுவது. எனது கோரிக்கைக்கு செவி மடுத்து உடனடி உதவி செய்தார். அவரை நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது. கண்கள் பனிக்கிறது. அவரின் உள்ளம் அன்பினால் செய்யப்பட்டு இருக்கும். அள்ளி அள்ளி தெளிக்கின்றார். அந்த அன்பின் வேகம் தாங்க முடியால் நெஞ்செல்லாம் நிறைந்து விட்டது. இப்போதே அதே சந்தோசத்தில் செத்து விடலாம் போல இருக்கின்றது. தீபாவளி உண்மையில் எனக்குத்தான்.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மன்றத்தில் உலவவே ஆவல்.

அவருக்கு இறைவன் எல்லா வளமும் அருளுவார்.

நெஞ்சம் பொங்கும் அன்புடன்
தங்கம்

அமரன்
06-11-2007, 08:44 AM
பாலவன சுனையாக எனக்குத் தெரிபவர்கள் நண்பர்கள்..
உங்களுக்கு உதவிய நண்பர் ஆறாக இருக்கிறார் அன்பில்..
வாழ்க அவர்..வாழ்க உங்கள் நெகிழும் மனம்..வளர்க உங்கள் தோழமை
இப்படியான நண்பர்களுக்குடன் குலாவுவதில் பெருமை....

பூமகள்
06-11-2007, 08:51 AM
மன்றம் தந்த
வைரமாய் ஒரு நண்பர்..!

கொடுத்த உதவியை
உரைக்கவும் தடை செய்யும்
நல்லுள்ள மனிதர்..!

மன்றத்தில் பிறந்த
மாணிக்கங்களில் ஒருவர்..!

செய்நன்றி மறவாமல்
நன்றி நவிழ்ந்த நட்பு..!
வளர்க.. வாழ்க..!
நட்போடு நலமும்
வளமும்..!

lolluvathiyar
06-11-2007, 09:12 AM
வெளியில் சொல்லகூடாது என்று உதவி செய்த மன்ற நன்பர் உன்மையில் பெருந்தன்மையானவர். அவர் வாக்கை காப்பாற்றிய உங்களையும் நினைத்து பெருமை படுகிறேன். ஆனாலும் நன்றியை காட்ட பெயர் குறிப்பிடாமல் ஒரு பதிவை பதித்து எங்கேயோ போய் விட்டீர்கள்.
உங்களுக்கு எல்லா பிரச்சனையும் நீங்க கடவுளை பிராத்திகிறேன்.
உதவிய உள்ளங்களுக்காகவும் கடவுளை பிராத்திகிறேன்.

alaguraj
06-11-2007, 09:24 AM
அருமையான பதிவு....தங்களின் உள்ளத்தில் உள்ளதை வார்த்தையால் உருக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு உதவிய அந்த உள்ளம் வாழ்க பல்லாண்டு...

ஆதவா
06-11-2007, 09:56 AM
மன்றம் வெறும் மன்றமல்ல...உறவுகளாகிய குடும்பம் - இது சிவா அண்ணன் சொன்னது.

அந்த நபர் நிச்சயம் ஒரு இறைவனே! (இதற்கு முன்னர் நாம்செக் என்று நினைக்கீறேன். யாரோ சொன்னார்கள்.. சில முரண்பட்ட கருத்துக்களும் வந்தன. அச்சமயம் நானில்லை.)

வாத்தியார் சொன்னமாதிரி, அவர் நிச்சயம் பெருந்தன்மை மிக்கவர்....

நன்றி சொன்ன நீங்களும்..

தங்கவேல்
06-11-2007, 03:24 PM
நாம்செக்குடன் தினமும் ஒருமுரை அளாவ விடில் எனக்கு தூக்கமே வராது.. என்ன ஒரு நல்ல மனிதர் தெரியுமா அவர் ? அற்புதமானவர்.

மனோஜ்
06-11-2007, 03:43 PM
நேஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் இருவருக்கும்
நாம் சோக் அண்ணாவை இப்ப அடிக்கடி கணவில்லையே

அக்னி
11-11-2007, 10:50 PM
கடினங்கள், எம்மை உறுதியில் கடினமாக்கும்போது, வெற்றி நிச்சயம்...
போராடிப் போராடி வாழ்வில் பெறும் வெற்றி.., என்றும் நிரந்தராமானது...

நன்றி மறப்பது நன்றன்று...
சொல்லத் தடுத்த போதிலும், செய்ந்நன்றி மறவா உங்களுக்கு இறைவன் துணை என்றும் இருக்கும்.
என்றும் சந்தோஷப் பூக்கள் உங்கள் வாழ்வில் சொரிய வாழ்த்துகின்றேன்...

சிறு செயலானாலும், புகழ், இலாபம் தேடும் உலகில்,
பிரதிபலன் நோக்காது உதவி செய்த மன்ற உறவுக்குத் தலைவணங்குகின்றேன்...

நேசம்
12-11-2007, 02:52 AM
சுற்றி இருப்பவர்களெ உதவ யோசிக்கும் இக்காலத்தில் அம்மன்ற உறுப்பினர் தங்கவேல் அண்ணனுக்கு செய்த உதவியை நினைக்கும் போது நானும் மன்ற குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் என்று பெருமைப்படுகிறேன்.
செய்த உதவியை மறக்காமல் பதிந்த தங்கவேல் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

சிவா.ஜி
12-11-2007, 01:54 PM
வலதுகை கொடுப்பது இடதுகை அறியாவண்ணம் உதவும் நல்லுள்ளங்கள் இன்னும் உள்ளதை நினைத்து,அதுவும் நம்மிடையே உலவும் உறவென்பதை உணர்ந்து நெஞ்சம் நெகிழ்கிறது.
அந்த உதவிக்கு உருகி தங்கவேல் வெளியிட்ட பதிவால் கண்கள் பணிக்கிறது.மன்றம் என் சொந்தம் என்ற உணர்வு இனிக்கிறது.
தங்கவேல் அவர்களுக்கு உதவிய அந்த உறவு எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
தங்கவேலுவை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

யவனிகா
12-11-2007, 02:52 PM
யார் உங்களுக்கு உதவினார்கள் என்று தெரியா விட்டாலும்...உதவிய நல்லுள்ளம் துயரின்றி வாழ பிரார்த்திப்போம்.

நுரையீரல்
17-11-2007, 03:02 AM
உதவி செய்வதற்கு பெருந்தன்மை வேண்டும். உதவி பெற்றதைச் சொல்லி நன்றி நவில்வதற்கும் அதே பெருந்தன்மை தான் வேண்டும். உங்கள் இருவரது பெருந்தன்மையை நினைத்து நெகிழ்கிறேன்.