PDA

View Full Version : அகத்திக் கீரை



mgandhi
06-11-2007, 06:56 AM
அகத்திக் கீரை

தினமும் பகல் உணவில், ஏதாவது ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வது என்றென்றும் ஆரோக்-கியம் தரும்.

கொஞ்சம் கசப்பான சுவையுள்ள அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள் நிரம்பியது. புரதம், இரும்புச் சத்து, சுண்-ணாம்-புச் சத்து, வைட்டமின் ஏ போன்றவை அதிக அளவில் அகத்திக் கீரையில் இருக்கிறது.

அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உண்டு. பித்தத்தையும்


கபத்தையும் குறைக்கும். வாதத்தை மட்டுப்படுத்தும். உடலின் உஷ்ணத்-தைக் குறைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். மாலைக் கண் நோயைக் குணப்படுத்தும்.

எந்தக் கீரையாக இருந்தாலும், கீரையை வேக வைத்த நீரை கீழே கொட்டிவிடக் கூடாது. கீரையின் சத்துப் பொருட்கள் அந்த நீரில் இறங்கி-யிருக்கும். அந்த நீரில் சூப் வைத்துச் சாப்பிடலாம்.

வாயுக் கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பொதுவாக, மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக் கூடாது!

நன்றி விகடன்

யவனிகா
06-11-2007, 08:08 AM
அகத்திக் கீரையைப் பற்றி நல்ல கருத்து. மற்றும் அகத்திக் கீரையை நன்றாக வேகவைத்துத் தான் சாப்பிட வேண்டும். கீரையின் கலர் மாறும் அளவு சமைக்க வேண்டும். "முருங்கக் கீரை வெந்து கெட்டது. அகத்திக் கீரை வேகாமல் கெட்டது" என்பார்கள் ஊர்ப்பக்கம்.அத்தோடு கீரை உணவை இரவில் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவை ஜீரணமாக 8 மணி நேரம் ஆகும். இரவில் உண்டால் சரியாக செரிக்காது.
தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி காந்தி அவர்களே!

பூமகள்
06-11-2007, 08:20 AM
அகத்திக் கீரை பற்றிய பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள் காந்தி அண்ணா.
மேலும் பயனுள்ள கருத்துகளைப் பதித்த யவனி அக்காவிற்கும் நன்றிகள் பலப்பல.

மாதவர்
11-11-2007, 01:28 PM
இதுவரை கீரை வகைகளை சாப்பிடாமல் நாங்கள் நொந்து கெட்டோம்!

இளசு
11-11-2007, 01:37 PM
வெற்றிலைப் படர அதற்கான வயலில் தோள்கொடுக்கும் அகத்திமரம்..
வலுவின்றி சட்டென முறியும் பலவீன மரம்..

ஆனால் சிறுகசப்பையும் மீறி தனிச்சுவை அளிக்கும் கீரை அதன் வரம்..

நல்ல கீரை..வாய்ப்புண் ஆற்றும் என பாட்டி சொல்வார்கள்.

மாடுகள் விரும்பி உண்ணும்.. பால் பெருகுமாம்.

நன்றி காந்தி..