PDA

View Full Version : சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம்.தேவிப்ரியா
06-11-2007, 06:38 AM
சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.

மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.

கொல்லப்பட்ட அரக்கன் - தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

துளித்துளியா
06-11-2007, 11:30 AM
கார்த்திகை திருநாளை அப்படி சொல்லியிருக்க வேண்டும்

தேவிப்ரியா
06-11-2007, 01:20 PM
நண்பரே,

கார்த்திகை பௌர்ணமி அன்று வரும்.

அது பற்றி சங்க இலக்கிய குறிப்புகளை கார்த்திகை போது தரலாம் எனப் பார்த்தேன்

தேவிப்ரியா
06-11-2007, 02:22 PM
இருதமிழ் மன்னர்கள் ஒற்றுமையாய் காணுதல் அரிது என்பதை விளக்க சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்து துஞ்சிய பெருவழுதியும் ஒன்றாக கண்டதை காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் புறநானூறில் பாடுகின்றார்:
இருப்பெருந் தெய்வங்கள் கண்ணனையும் பலதேவனையும் ஒன்றாக பார்ப்பது போலுள்ளது என்கின்றார்.
பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு -புறநானூறு்:58:14 - 16

செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்! - (பரி.3:81-82)

சிவந்த கண்களுடைய வாசுதேவனே! கரிய கண்களையுடைய சங்கருஷணனே! சிவந்த உடம்பினை உடைய பிரத்யும்நனே! பசிய உடம்பினையுடைய அநிருத்தனே! என்பது இதன் பொருளாகும்.
புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்-பரிபாடில்.15:49-52

கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக வந்தருளும் முழுமுதல் கடவுளாம்.

சங்க இலக்கியமாகிய பரிபாடலில் கண்ணனின் லீலைகளைச் சுட்டி அவனை மாயோன், திருமால் என்று போற்றும் பாடல்களும், அவனது கோயில்கள் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்கள்.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் 1
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 3
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;
- சிலப்பதிகாரம் 17. ஆய்ச்சியர் குரவை

கொல்லப்பட்ட கொடுங்கோல் அரக்கன் - தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

தேவிப்ரியா
07-11-2007, 10:06 AM
சங்க இலக்கியம் என்பது பாட்டும்-தொகையும்.

பத்துப்பாட்ட்டும்- எட்டுத் தொகையும்.

உலகில் பெரும்பாலான நாடுகள் பொலே இலக்கியக் காலம் குறிக்க முன்பே குறிக்கப் பட்ட மன்னர்கள் நிகழ்வுகள் இவற்றோடு இணைத்து நோக்கி காலம் குறித்தனர். பின் கல்வெட்டுகள். புதை பொருள் ஆய்வில் கிடைத்தவை கார்பன் - 14 ஆய்வு என உதவும். மேலும் நிச்சயமாய் காலம் குறிக்கப் பட்ட இலக்கியம் முன்பு உள்ள ஒரு பாட்டை கூறும் போது அந்த பழைய பாடல் காலமிடப்படும்.

இவ்வழி சங்க காலம் காலம் நிர்ணயம் செய்ய உத்வியது அசோகர் கல்வெட்டுகள். அசோகர் காலம் வ.கா.மு.3ம் நூற்றாண்டு, அவர் கல்வெட்டு தமிழகத்தில் 4 பெரும் அரசுகள் என சதியபுத்ர-கேரளபுத்ர- சோர-பாண்டிய என இருந்தது. இவை அதியமாந் சேர- சோழ- பாண்டிய எனக் காணவும், மேலும் சில பாடல்கள் மோரியர் வரவு பற்றி உள்ளது. சிலப்பகிகாரத்தில் கண்ணகி விழவிற்கு இலங்கை மன்னன் கயவாகு வந்தான் என உள்ளது, இவன் காலம் வ.கா. 2ம் நூற்றாண்டு.

(B.C.E.-Before Common Era-வ.கா.மு. வரலாற்று காலத்துக்கு முன; C.E.-Common Era-வ.கா.)

எனவே சங்க இலக்கியம் வ.கா.மு.200- வ.கா. 250 இடையே என்ப்பட்டது.

பல கல்வெட்டுகளும் உதவும்.

இன்றைய நிலை- சங்க காலமன்பது வ.கா.மு.500- வ.கா. 200 இடையே என்ப்பட்டது ஆகும்.
தொல்காப்பியம் பாட்டுத்தொகைகுப் பின் வ.கா. 200 வாக்கிலானது.
திருக்குறள் இதற்குப் பின்னான சில ஆண்டுகளில்.
சிலம்பும்- மணிமேகலையும் இந்நூற்றாண்டு இறுதியில்.

250 வாக்கில் ஒரு பக்கம் களப் பிரார்கள் வத பின் தமிழ் இலக்கியம் வாழ்வியல் முறையிலிருந்து நீதிநெறி போதிப்பதானது- குறளிருந்து.

கரிகால் சோழன், தலையானங்கானத் வென்ற பாண்டியன் போன்றோர் சங்கால மன்னர்கல்.
களப் பிரார்கள் வந்த பின் பல்லவர்கல் காலம்.
பின் பிற்கால சோழர சேரர் என வரும்.

கண்ணகிக்கு கோயில் எடுத்த சேரன் செங்குட்டுவன் சங்க கால மன்னன். அந்த நிகழ்வுகளை அடுத்த நூற்றாண்டில் இளங்கோ எழுதியது சிலப்பதிகாரம் என்பது வழமை.்மை.

சிலப்பதிகாரம் 2ம் நூற்றாண்டினது என்க் கீற்றினில் ஒரு கட்டுரையை முனைவர்.மதிவாணன் எழுதிய்ள்ளார். எனவே சங்க கால மக்கள் நிலையை அறிய பாட்டும் தொகையும்-திருக்குறள்- சிலப்பதிகாரம்-மணிமேகலை வரை காணலாம்.

lolluvathiyar
07-11-2007, 10:57 AM
ப*ய*னுள்ள* த*க*வ*ல் தேவ* பிரியா. ஒரு ச*ந்தேக*ம் விள*க்குவீர்க*ளா
(B.C.E.-Before Common Era-வ.கா.மு. வரலாற்று காலத்துக்கு முன; C.E.-Common Era-வ.கா.)
இது ஆங்கில*த்தில் எந்த* ஆண்டு என்று தெரிய*வில்லை 1 ஆம் ஆண்டா?

தேவிப்ரியா
07-11-2007, 11:56 AM
முன்பு புழக்கத்தில் இருந்த B.C. (கி.மு.)என்பது B.C.E.-Before Common Era-வ.கா.மு. வரலாற்று காலத்துக்கு முன;
A..D.(கி.பி.) என்பதும் முறையே C.E.-Common Era-வ.கா.

கிறிஸ்துவ புராண நாயகன் பற்றி வரலாற்று ரீதியில் ஆதாரமின்மையும், ஏசு பிறந்த வருடம் பற்றி சுவிசேஷங்களிலும் வ.கா.மு. 6 என ஒன்றும் வ.கா.8 என ஒன்றும் குறிப்பு தருவதால் பழைய முறை கைவிடப்பட்டு 40- 50 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் தொடர்கிறது.


நாமும் மாற வேணும்

தேவிப்ரியா
11-12-2007, 04:42 PM
சங்க காலம் பற்றி சிறிது விளக்க முடியுமா?
ஏதோ இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
சங்க கால இலக்கியங்கள் முதல், இடை, கடையில் எப்படி வர்ரையறுக்கப் படுகிறது. . .. ..
எனக்கு விளக்க முடியுமா.என ஒரு மெயில் வந்தது.

இதற்கு நான் கீழுள்ள நூலில் இருந்து தருகிறேன்.

சங்ககால மன்னர் காலநிலை வரலாறு
- வி.பி.புருஷோத்தம்; தொகுதி-1;
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.

நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.[
SIZE="4"]தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.

முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும்.
-பக்கம் -30[/SIZE]


8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது.

இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.

விக்கிபீடியா கூறுவது:
Sangam

From Wikipedia, the free encyclopedia:

Sangams were Tamil academies, which according to Tamil legends, enabled poets and authors to gather periodically to publish their work. The earliest extant works of Tamil date back to the period between 200 BCE and 200 CE. The literature of this period has been referred to as The Sangam literature and the period in which these works were composed itself is referred to as the Sangam period alluding to the legends. Scientifically and historically, the legends of multiple Sangams existing prior to the period of the earliest extant works in Tamil have been dismissed due to lack of any tangible proof. Due to the evidences of this period being more mythological than factual, some scholars are of the opinion that, the whole Sangam story is a hoax and a fabrication.

Etymology:

The word Sangam is probably of Indo-Aryan origin, coming from Sangha, the Buddhist and Jain term for an assembly of monks. In Tamil the word means "assembly" or "academy".[5] In 470 CE, a Dravida Sangha was established in Madurai by a Jain named Vajranandi. During that time the Tamil country was ruled by Kalabhra dynasty. The Kalabhra rulers were followers of either Buddhism or Jainism. The Dravida Sangha took much interest in the Tamil language and literature. We can also find Jain names such as Uloccnaar and Maathirthan among the early poets. Jain cosmology and mythology are also found mentioned in the early Sangam poems.

Evidence:

There has been no contemporary archaeological or scientific evidence found to substantiate whether these academies existed at all and if so, the dates, the participants or their works.

Literary evidence:

Although the term Sangam literature is applied to the corpus of the earliest known Tamil literature belonging to the c. 300 BCE 300 CE, the name Sangam and the legend was probably of a much later date. The early literature belonging to the pre-Pallava dynasty period (c. 400 600 CE) do not contain any mention of the Sangam academies, although some relationship between Madurai and literature may be found in some of the Sangam age literature. Further references to Sangam and its association with Madurai have been mentioned by poets such as Sekkilar, Andal, Auvaiyar and Kambar (all belonging to the tenth to the twelfth centuries CE). The actual poems of the Sangam literature themselves do not directly mention such academies. However the poem Mathuraikkanci (761-763), which belongs to the early collection of Pattupattu, describes Madurai as the 'place where authors met and interacted'. //

ஆனால் சங்க இலக்கியத்துக்கு நிகரான ஒரு வாழ்வியல் இலக்கிய பாரம்பரியம் உலகில் வேறு மொழிகளிலும் இல்லை எனலாம்.

lolluvathiyar
12-12-2007, 07:38 AM
விக்கிபீடியாவிலிருந்து எடுத்து தந்திருகிறீர்கள், அந்த தளம் 90 சதவீதம் நம்பகதன்மை உடையது. நானும் அதிலிருந்து தமிழர்கள் வரலாறு நிரைய படித்தேன். நன்றி