PDA

View Full Version : உதவுங்கள் உறவுகளே...



ராஜா
06-11-2007, 05:20 AM
அன்புள்ள உறவுகளே..

நான் AOL மெயிலில், arr@aol.com என்ற அடையாளத்தில் ஒரு மின்னஞ்சல் முகவரி வைத்திருந்தேன். அதன் கடவுச்சொல் மறந்துபோய் விட்டது. அதற்காக கொடுத்த விபரங்களும் எதுவும் தற்போது நினைவில் இல்லை.

மீண்டும் அதே முகவரியை பயன்படுத்த நான் என்ன செய்யவேண்டும்..?

ஆதவா
06-11-2007, 05:30 AM
இது கஷ்டம் என்றே நினைக்கிறேன்.. பிறந்த நாள் தேதி ஏதும் கொடுத்துப் பாருங்களேன்.....

praveen
06-11-2007, 06:02 AM
நீங்கள் கொடுத்த தகவல் பதில் சொல்ல பத்தாது, நண்பரே.

1)கடைசியாக நீங்கள் லாகின் ஆகி எவ்வளவு நாள் ஆனது, (அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட காலக்கெடு தாண்டினால் பிறகு அதை மீட்க இயலாதே)

2) உங்கள் கணினியில் பிரவுசரில் பாஸ்வேர்டு சேமிக்கும் பழக்கம் உள்ளதா?

3) ரீசெட் பாஸ்வேர்டு ஆப்சன் அதில் இருந்தால் உங்கள் மற்றொரு முகவரிக்கு டீடெயில்ஸ் வந்து சேருமே. (உங்களுக்கு அப்படி எந்த இமெயில் கொடுத்தோம் என்று தெரியவில்லை என்றால், ஒரு 10 முறை வேறு வேறு பாஸ்வேர்டு போட்டு பாருங்கள், அது தானகவே அந்த ஆல்டர்நேட் இமெயிலுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி விடும் நீங்கள் உங்கள் இமெயில் கணக்கு எல்லாம் செக் செய்து புது மெசேஜ் (ஜங்க்/பல்க்) வந்திருக்கும்)

4)நீங்கள் அந்த காலகட்டத்தில் உருவாக்கிய வேறு இமெயிலின் டீடெயில்ஸை பார்வையிட்டு முயன்று பாருங்கள்.


5) நீங்கள் AOL வேறு சர்வீஸ் AOL messenger/ x drive வேறு ஏதாவது உபயோகித்தால் அது சம்ப்ந்தமான பைல் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் ஏதாவது பாஸ்வேர்டு ரெக்கவர் மூலம் முயன்று பார்க்கலாம்.

ராஜா
06-11-2007, 06:15 AM
நன்றி பிரவீண்..

என் பழைய மடிக்கணினி மழையில் நனைந்து சாம்பிராணி போட்டுக்கொண்டது. அதை நான் மட்டுமே உபயோகித்து வந்ததால், கடவுச்சொற்களை அதிலேயே சேமித்து வைத்து வந்தேன்.. மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வப்போது கடவுச்சொற்களை நான் மாற்றி வருவதால் எதுவும் நினைவில் இல்லை. முற்றிலும் பழைய கணினி நினைவகத்தையே நம்பியிருந்தேன்.

தற்போது வேறு புதுக்கணினி வாங்கியிருக்கிறேன். இதுதான் இப்போதைய நிலை.

சிறிய ஐடியாக இருப்பதால் AOL மின்னஞ்சலிலேயே அனைத்து முக்கிய தகவல்களையும் இட்டு வைத்திருந்தேன். இப்போது அதையே திறக்க முடியாத நிலை..

தங்கவேல்
06-11-2007, 07:00 AM
இதுக்குத்தான் நம்ம பெரியவங்க வல்லாரை சாப்பிடனும் என்று சொல்லி இருக்காங்க...

பிரசாத்
12-11-2007, 09:25 AM
இது முடியாத காரியம், பிறந்த தேதி, உதவிக் கேள்வி இல்லை இரண்டாம் மின்னஞ்சல் முகவரி இவைகளில் ஏதேனும் ஒன்று தெறிந்தால் மட்டுமே திரும்ப பெறமுடியும்.

அப்படி சாத்தியமென்றால் உங்கள் கணக்கை நான் உபயோகிக்கலாமே.