PDA

View Full Version : விதைக்கப்பட்டார் சு.ப. தமிழ்ச்செல்வன்இலக்கியன்
05-11-2007, 06:51 PM
வரலாறு காணாத அளவு மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்த உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் தூய விதைகுழியில் முழுப்படைய மதிப்புடன் இன்று விதைக்கப்பட்டது.
முன்னதாக கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் வன்னி எங்கிலுமிருந்து திரண்ட மக்கள், விடுதலைப் புலிகளின் துறைப் பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், சைவ- கிறிஸ்தவ மதகுருமார்கள், ஆயர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடலுக்கு மலர்தூவி மலர்மாலைகள் சூட்டி தமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்தனர்.

http://img410.imageshack.us/img410/4922/20071105025ft4.th.jpg (http://img410.imageshack.us/my.php?image=20071105025ft4.jpg)

http://img145.imageshack.us/img145/7261/20071105026bx3.th.jpg (http://img145.imageshack.us/my.php?image=20071105026bx3.jpg)

இறுதி வணக்கம் தெரிவித்த மக்கள் கண்ணீர் மல்க உணர்வெழுச்சியுடன் பிரியா விடை கொடுத்தனர்.

வீரவணக்கக் கூட்டம் நிறைவடைய கிளிநொச்சி நகரில் இருந்து கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் நோக்கி வித்துடல் அணியிசை வகுப்புடன் நகர்ந்த போது நகரிலிருந்து துயிலுமில்லம் வரையிலா 6 கிலோமீற்றர் தூரத்திற்கு சாலையில் இருபுறமும் மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்தினர்.

http://img145.imageshack.us/img145/2108/20071105027fg2.th.jpg (http://img145.imageshack.us/my.php?image=20071105027fg2.jpg)

http://img409.imageshack.us/img409/8918/20071105028bn0.th.jpg (http://img409.imageshack.us/my.php?image=20071105028bn0.jpg)

இச்சாலையில் வீடுகளின் வாசல்கள் தோறும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்தை வைத்து மக்கள் தமது வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து மக்களின் வணக்கத்துடன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு வித்துடல் சென்றது. அங்கு இறுதி வணக்கத்துடன் விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் உலகத்தமிழினத்தின் பிரியா விடையுடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.

http://img145.imageshack.us/img145/6939/20071105029pt9.th.jpg (http://img145.imageshack.us/my.php?image=20071105029pt9.jpg)

http://img409.imageshack.us/img409/1356/20071105030za9.th.jpg (http://img409.imageshack.us/my.php?image=20071105030za9.jpg)

தமிழீழத் தாயகத்தில் வீர வணக்ககூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சமநேரத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு வீர வணக்ககூட்டங்கள் நடைபெற்றன.

தற்போது தமிழகத்திலும் தலைநகர் சென்னையில் வீரவணக்கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வரலாறுகாணாத அளவுக்கு உணர்வெழுச்சியடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செலவ்னுக்கு உலகத் தமிழினம் அணிதிரண்டு வீரவணக்கம் செலுத்தி பிரியாவிடை கொடுத்துள்ளது.

மன்னார் ஆயர் இரங்கல்

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தி:

வன்னியில் வாழ்ந்து வரும் ஒரு கத்தோலிக்க ஆயர் என்ற வகையில் தமிழ்ச்செல்வனுடன் நாட்டின் சமாதானம் பற்றியும் வன்னி மக்களின் தேவைகள் பற்றியும் கடந்த 15 ஆண்டுகளாக நான் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தேன்.

உண்மையானதும் இதய சுத்தியோடும் கூடியதுமான அரசியல் பேச்சுவார்த்தையை சமாதானத்துக்கு வழிவகுக்கும் என்பது அவரிலே வேரூன்றியிருந்தன. மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் அன்பையும் நான் பலமுறை கண்டு வியப்படைந்திருக்கின்றேன்.

சமாதானம் பற்றிய எனது கருத்துக்களை வரவேற்றதோடு மக்கள் சார்பாக நான் விடுத்த வேண்டுகோள்களையும் அவர் மகிழ்ச்சியோடு ஏற்று ஆவண செய்துவந்தார். இதனோல் நாடு நன்மை அடைந்தது. மக்களும் ஆறுதல் அடைந்தனர் என்றார் அவர்.


http://img409.imageshack.us/img409/5403/20071105031bv8.th.jpg (http://img409.imageshack.us/my.php?image=20071105031bv8.jpg)

http://img148.imageshack.us/img148/3504/20071105032cy7.th.jpg (http://img148.imageshack.us/my.php?image=20071105032cy7.jpg)

http://img148.imageshack.us/img148/3504/20071105032cy7.th.jpg (http://img148.imageshack.us/my.php?image=20071105032cy7.jpg)
Thanks
puthinam

மனோஜ்
05-11-2007, 06:55 PM
தகவல்பதிவுகள் நன்றி இலக்கியன்

அக்னி
05-11-2007, 07:00 PM
http://www.youtube.com/watch?v=JPTlX-ZCHlc

http://www.youtube.com/watch?v=OhdnzIzokrg

அமரன்
05-11-2007, 07:14 PM
விடுதலை வேட்கை தணியா மறவன் மண்ணுக்குள் விதைக்கபட
தொலைக்காட்சி திரைகள் சில நொடிகளில் கண்ணுக்குள் அனுப்ப
கண்கள், மழை மொழியும் வேளையில் காரின் முன்கண்ணாடிகளாக
கலங்கிய காட்சியாக பதிந்தது கலங்கடித்த அந்தக்காட்சி....

அறிஞர்
05-11-2007, 08:27 PM
இலங்கை தமிழ் மண்ணில் இது வரை நடந்த எல்லா இறுதி ஊர்வலங்களிலும் இது தான் பெரியது என எண்ணுகிறேன்... பலரை கண்ணீரில் ஆழ்த்தி சென்றுள்ளார்...

நேசம்
06-11-2007, 01:53 AM
விதைக்கப்பட்ட தமிழ்செல்வன் அண்ணா நிகழ்வை பகிர்ந்த இலக்கியன் அவர்களுக்கு நன்றி

ஓவியன்
06-11-2007, 02:16 AM
இறுதி நினைவில் புலிகளின் தளபதிகள் எல்லோரும் வர மாட்டார்களோ என்று கூட பேசினார்கள், எல்லாம் பொய்பித்து வானில் நேற்றும் விமானங்கள் சுற்றிக் கொண்டிருக்க அணி திரண்ட பெருவெள்ளம் கட்டியம் கூறுகிறது ''பிரிகேடியர் தமிழ்செல்வன்" முட்டிய தீ எத்தகையதென்று....!!

நுரையீரல்
06-11-2007, 08:47 AM
இலங்கை தமிழ் மக்களின் மனதில் மட்டுமே இடம்பிடித்தவர் என்று நினைத்திருந்தேன். அதை பொய்ப்பித்திருக்கிறது அண்ணாரின் இரங்கல் செய்தி.

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் அண்ணாரது இழப்பை நினைத்து வருந்துவதை பார்க்கும் போது உள்ளம் கலங்குகிறது. அவரது நினைவு அனைத்துலக தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்றே நம்புகிறேன்.

அவரது நாமம் பல்லாண்டு காலம் வாழ்க.....

Saravanan.S
16-11-2007, 08:03 AM
ஒரு விடிவெள்ளியைக் கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்திருக்கலாம்

ஒரு அட்சயப் பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்க்க இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.

மரணத்தைக் கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்! அதுதான் அவர்களுக்கு முகவரி

வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல! அவர்களின் இரணங்கள்- சாதாரணம்! தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள்!

என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும்போது இங்கே கரிக்கிறது- அங்கே அவர்கள் காயப்படும்போது இங்கே குருதி கொதிக்கிறது

வான்வழியே விழுந்தது வெடி அல்ல- எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!

தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல

தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமை அழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்குக் காட்டியவனும் நீ தான்!

அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?

ஈழத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை, சமாதானப் பாதை நோக்கிய பயணத்தை உலகெங்கிலும் உள்ள அரசியல் அரங்குகளில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே! உமது இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது- உலக உருண்டையின் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தமிழர்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அந்தோ!

அன்று சிங்கத்தை இழந்தோம்!

இன்று தங்கத்தை இழந்துவிட்டோம்!!

அகிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனைக் கொன்ற கைகள்தான் இன்று உன்னையும் தின்றது!

திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்- திலீபனைப் புதைக்கவில்லை..விதைத்திருக்கிறோம்

தம்பி தமிழ்ச்செல்வா உன்னை எரிக்கவில்லை...ஏற்றியிருக்கிறோம்

இது நான் ஒரு இனையத்தளத்தில் பார்த்தது உங்கள் அனைவரினதும் பார்வைக்காக இங்கு பதிக்கின்றேன்.