PDA

View Full Version : இந்தியா-பாகிஸ்தான்



அறிஞர்
05-11-2007, 03:57 PM
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் பாக். அணி விளையாடவிருக்கும் போட்டிகள் அட்டவணை.

ஒருநாள் போட்டிகள்..
__________________________________________________ _________

நவ. 05 / திங்கள். முதல் ஒருநாள் போட்டி. பரீதாபாத். [பகல் ஆட்டம்].
__________________________________________________ __________

நவ. 08/ வியாழன். 2வது ஒருநாள் போட்டி. மொஹாலி. [பகல்/இரவு].
__________________________________________________ _________

நவ. 11 / ஞாயிறு. 3 வது ஒருநாள் போட்டி. கான்பூர். [பகல் ஆட்டம்].
__________________________________________________ __________

நவ. 15 /வியாழன். 4 வது ஒருநாள் போட்டி. குவாலியர். [பகல்/இரவு].
__________________________________________________ _________

நவ. 18 / ஞாயிறு. 5 வது ஒருநாள் போட்டி. ஜெய்ப்பூர். [பகல்/இரவு].
__________________________________________________ __________


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் பாக். அணி விளையாடவிருக்கும் போட்டிகள் அட்டவணை.
__________________________________________________ ____________

டெஸ்ட் போட்டிகள்...
__________________________________________________ ____________

நவ. 22 வியாழன் - 26 திங்கள். முதல் டெஸ்ட் போட்டி. டெல்லி.
__________________________________________________ ____________

நவ. 30 வெள்ளி - டிச. 4 செவ்வாய். 2 வது டெஸ்ட் போட்டி. கொல்கத்தா.
__________________________________________________ ____________

டிச. 08 சனி - 12 புதன். 3 வது டெஸ்ட் போட்டி. பெங்களூர்.
__________________________________________________ ____________

அறிஞர்
05-11-2007, 03:58 PM
முதல் போட்டியில் வெற்றியுடன்.. இந்தியா.. தொடரை தொடங்கியுள்ளது...

தொடரை வெல்ல வாழ்த்துக்கள்.

ஆதவா
05-11-2007, 04:02 PM
இந்திய அணிக்கு வாழ்த்துகள்....

வெற்றிச் சருக்கலின்றி பாதையில் செல்ல அணியினரைக் கேட்டுக் கொள்கிறேன்.. (இங்க கேட்டா அங்க விழுகவா போவுதூ? )

அமரன்
05-11-2007, 04:02 PM
முதல்போட்டியில் வெற்றியா? வாழ்த்து மாலையை சூட்டும் அதேவேளை தொடரும் என நம்புகின்றேன். காரணம் சொந்த மைதானங்கள், சொந்த நாட்டு மக்களின் உற்சாகம், அணியில் மிளிரும் சிலரின் திறமை.

அறிஞர்
05-11-2007, 04:06 PM
முதல்போட்டியில் வெற்றியா? வாழ்த்து மாலையை சூட்டும் அதேவேளை தொடரும் என நம்புகின்றேன். காரணம் சொந்த மைதாங்கள், சொந்த நாட்டு மக்களின் உற்சாகம், அணியில் மிளிரும் சிலரின் திறமை.

இந்திய மண்ணில் இந்தியா சில ஒரு நாள் தொடர்களை பாகிஸ்தானிடம் இழந்துள்ளது.

இப்பொழுது இருக்கும் அணி சாதிக்கும் என நம்புகிறேன்.

தென்னவன்
05-11-2007, 05:05 PM
கண்டிப்பாக இந்திய அணி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரிலும் கோப்பையை வெல்லும்..
தற்போதைய அணி மிக்க திறமையுடன் உள்ளது என்பதை முதல் ஒரு நாள் போட்டியிலேயே நிரூபித்து உள்ளது.!!!

மனோஜ்
05-11-2007, 06:25 PM
கோப்பையை வெல்லும் அனால் 2 போட்டிள் தொற்கும் என்று நினைக்கிறோன் காரணம் கிசு கிசு ஹ ஹ ஹ

அறிஞர்
05-11-2007, 06:41 PM
கோப்பையை வெல்லும் அனால் 2 போட்டிள் தொற்கும் என்று நினைக்கிறோன் காரணம் கிசு கிசு ஹ ஹ ஹ

என்னது இது.. ஏதோ புரோக்கரிடம் கேட்டு சொல்வது போல் இருக்கிறது..

மனோஜ்
05-11-2007, 07:11 PM
ஹஹஹ அதான்னா இப்ப நடக்குது அதான் சென்னேன்
இந்தியா தோக்ககுடாது அதே நேரத்தில் பாக்கி மக்களும் பாக்கனும் அதான் இப்படி இருக்கும் நினைக்கிறோன்

நேசம்
06-11-2007, 01:55 AM
இந்தியா − பாகிஸ்தான் யார் வெற்றி பெறுவார்கள் என்று ராசாண்ணாக்கிட்டே கேட்க வேண்டியதுதான்

ராஜா
06-11-2007, 04:47 AM
ஒரு நாள் தொடர் ஒருத்தருக்குன்னா...

டெஸ்ட் தொடர் இன்னொருத்தருக்கா இருக்கும்..

:)

கஜினி
06-11-2007, 05:04 AM
இந்தியாதான் தொடரை வெல்லும்.

அறிஞர்
06-11-2007, 02:30 PM
பாகிஸ்தான் மீது நம்பிக்கை வைத்துள்ள மகாராசா.. யாருப்பா...

நேற்று இந்திய அணியின் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை....

மன்மதன்
06-11-2007, 02:55 PM
ஒருநாள் தொடரை இந்தியா வெல்லும்.. டெஸ்ட் டிராவாகும்..

ராஜா
07-11-2007, 05:08 AM
இந்தியா - பாகிஸ்தான்.. முதல் ஒருநாள் போட்டி. குவாஹத்தி [கௌஹாத்தி] 5-11-07.


55 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்த "தாதா"..!

http://content-ind.cricinfo.com/db/PICTURES/CMS/81700/81777.jpg

நான்காவது மட்டையாளராகக் களமிறங்கி, தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் அரைசதம் அடித்த அணித்தலைவர்... தோனி..

http://content-ind.cricinfo.com/db/PICTURES/CMS/81700/81776.jpg

ராஜா
07-11-2007, 05:13 AM
தோனியும், யுவராஜும் தங்களது பங்களிப்பில் 100 வது ஓட்டத்தை எடுக்கின்றனர்...

http://content-ind.cricinfo.com/db/PICTURES/CMS/81700/81778.jpg

5 விக்கெட் வேறுபாட்டில் பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்வுடன் பாசறை திரும்பும், பத்தானும் உத்தப்பாவும்..

http://content-ind.cricinfo.com/db/PICTURES/CMS/81700/81775.jpg

அமரன்
07-11-2007, 06:41 AM
படமும் அதுக்கான பஞ்சும் சூப்பர்..

மனோஜ்
08-11-2007, 02:13 PM
நன்றி ராஜா அண்ணா

அறிஞர்
08-11-2007, 04:11 PM
இப்ப திரும்ப அடிக்கிறாங்க... இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி விளிம்பில்

உதயசூரியன்
08-11-2007, 04:45 PM
என்னங்க வர்ணனை எதுவும் இல்லை..
போட்டி வரலாறை முழுக்க சொல்லலாமில்லையா..???

எப்பொழுதும் சச்சின் மட்டும் தான் விளையாடுவது போல் தெரிகிறது..

90 ல் இருந்து 99 வரை எடுத்து அவுட் ஆனதை கணக்கில் எடுத்தால்... 50 க்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்

அது எல்லாம் சதமாகியிருந்தால்.. இன்னேரம் வரலாறை இன்னொருவர் படைக்க கஷ்டமாயிருக்கும்

இன்று வெற்றி பெற்ற பாகிஸ்தானின்.. விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்

இந்தியாவிற்க்கும் வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
வாழ்க தமிழ்

அமரன்
08-11-2007, 04:46 PM
பாகிஸ்தான் வெற்றி...

மன்மதன்
08-11-2007, 04:57 PM
நீ ஒன்னு ஜெயிச்சா, நான் ஒன்னு ஜெயிப்பேன்னு சொல்லி வச்சி வெளாடுறாங்க.. இன்றைய ஆட்டம் இந்தியா கையில் இருந்தது.. அதான் ஒரு மேட்ச் ஜெயிச்சிருக்கோம்ல, அப்புறம் என்ன என்று இன்று கேட்டிருக்கிறார்கள்.. வாழ்க இந்தியன் டீம்..

ராஜா
09-11-2007, 05:42 AM
இந்தியாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த தீபாவளி ஸ்பெஷல் அதிர்ச்சி அல்வா... ..!

99 ஓட்டங்களில் மீண்டும் ஒருமுறை ஆட்டமிழந்த சச்சின்..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81800/81878.jpg

ராஜா
09-11-2007, 05:46 AM
2வது ஒருநாள் போட்டி.. மொகாலி. - 08-11-07.

இன்னொரு அரை சதத்துடன் திருப்தி அடைந்த கவுதம் கம்பீர்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81800/81876.jpg

ராஜா
09-11-2007, 05:49 AM
சென்ற முறை அடித்ததே போதும் என்று "தோனி"டுச்சோ..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81800/81882.jpg

ராஜா
09-11-2007, 05:51 AM
யுவராஜ் சிங்... ஒரு பாகிஸ்தான் பவுன்சரில் இருந்து தப்பிக்கிறார்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81800/81884.jpg

மதி
09-11-2007, 05:52 AM
அண்ணா..
கமெண்ட்ஸ் சூப்பர்ர்ர்ர்ர்ர்..

ராஜா
09-11-2007, 05:56 AM
கடைசி 10 ஓவரில் வெறும் 60 ஓட்டங்கள்.. அதுவும் கொண்டை அதிரடியாக அடித்த 38 வாயிலாக வந்தது..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81800/81883.jpg

இந்தியா 321-9 [50 ஓவர்களில்..]

ராஜா
09-11-2007, 06:00 AM
பாக். துவக்க ஆட்டக்காரர் 'சல்மான் பட்'டை 37 ஓட்டங்களில் வெளியேற்றிய மகிழ்ச்சியில் இர்ஃபான் பத்தான்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81800/81897.jpg

ராஜா
09-11-2007, 06:03 AM
இன்னொரு துவக்க ஆட்டக்காரர் 'கம்ரன் அக்மல்' ஆட்டமிழக்கக் காரணமான ருத்ர [ப்ரதாப் சிங்] தாண்டவம்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81800/81887.jpg

ராஜா
09-11-2007, 06:07 AM
முகம்மது யூசுஃப் அவுட்.. ஹர்பஜன் பந்து வீச்சில்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81900/81902.jpg

ராஜா
09-11-2007, 06:11 AM
ஆனால் பாகிஸ்தானியர் மனம் தளரவில்லை...

ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவது ஆட்ட நாயகன் யூனிஸ் கான் மட்டுமல்ல.. ஆட்டமும் தான்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81800/81899.jpg

ராஜா
09-11-2007, 06:13 AM
எதிரணியைச் சிதறடித்து, சதமடித்த மகிழ்வில்... யூனிஸ் கான்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81900/81906.jpg

ராஜா
09-11-2007, 06:17 AM
117 ஓட்டங்கள் எடுத்த யூனிஸ் கானின் ஸ்டம்ப் ஜாகீர் கானின் பந்துவீச்சுக்கு இலக்காகிறது..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81900/81908.jpg

ராஜா
09-11-2007, 06:20 AM
மிஸ்பா-உல்-ஹக் [49] ஆட்டமிழந்த மகிழ்வைப் பகிர்ந்துகொள்ளும் பந்து வீச்சாளரும், அணித்தலைவரும்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81900/81920.jpg

ராஜா
09-11-2007, 06:24 AM
அஃப்ரிதியின் அதிரடியில் எகிறுவது பந்து மட்டுமல்ல.. இந்தியர்களின் பல்ஸும் தான்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81900/81915.jpg

ராஜா
09-11-2007, 06:27 AM
2 வது போட்டியை 4 விக்கெட் வேறுபாட்டில் வென்றது பாகிஸ்தான்.. வாழ்த்தும் இந்திய அணித்தலைவர்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/81900/81916.jpg

ராஜா
09-11-2007, 06:38 AM
சுருக்கமான ஸ்கோர்..

இந்தியா 321-9.[50 ஓவர்களில்..]

சச்சின் 99, கம்பீர் 57, ஹர்பஜன் 38, யுவராஜ் 34.

ஷோயப் அக்தர் 10-1- 42- 3.

பாகிஸ்தான் 322-6.[49.5 ஓவர்களில்..]

யூனிஸ் கான் 117, மிஸ்பா 49, சல்மான் பட் 37.

ஆர்பி சிங் 10- 0- 59- 2.
ஹர்பஜன் 10- 0- 65- 0.

ராஜா
09-11-2007, 06:42 AM
அடுத்த போட்டி..

நவம்பர் 11. கான்பூர்.. பகல் ஆட்டம்.. இந்திய நேரம் காலை 9 மணி.

ராஜா
09-11-2007, 07:13 AM
இரண்டாவது ஒருநாள் போட்டி..

சில சுவையான விபரங்கள்..

மொகாலியில் ஆடியுள்ள 2 ஆட்டங்களிலுமே பாக். இந்தியாவை வெற்றி கண்டிருக்கிறது. முதல் ஆட்டம் : 01-4-1999. பாக். 7 விக்கெட் வேறுபாட்டில் வெற்றி.

பாகிஸ்தான் இந்தியாவில் வெற்றிகண்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவே.
முந்தைய சாதனை : ஆமதாபாத், 12-04-2005, இந்தியாவின் 315 க்கு எதிராக 319/7 அடித்து வெற்றிகண்டது.

சனத் ஜெயசூர்யாவின் [403 ஒருநாள் போட்டிகள் பங்கேற்பு] சாதனையை சச்சின் தாண்டி [404 போட்டிகள்] இன்னுமொரு உலக சாதனை.

சோக சாதனைகள்..

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில், சவுரவ் கங்கூலி அரை சதத்தைகூட தாண்டியதில்லை.

சச்சின் 3வது முறையாக 99 -ல் ஆட்டம் இழந்தார்... இதே ஆண்டில்..!
அதுமட்டுமல்ல..தன் ஆட்ட வரலாற்றில் 15 வது முறையாக 90க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்த சாதனையும் அவருக்குதான்..!

யூனிஸ் கான் இந்தியாவுக்கு எதிராய் அடித்த முதல் சதம்..!

xavier_raja
09-11-2007, 11:19 AM
டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக "அனில் கும்ப்ளே" தேர்வு.

ஒருமூறை அவர் பேட்டியில் என்னை கேப்டனாக பரிசீலிக்காதது ஏமாற்றமாக உள்ளது என்று கூறியிருந்தார், அது இப்பொழுது நிறைவெறிவிட்டது அவருக்கு மகிழ்சியாக இருக்கும் என்று நினைக்கிரேன்.

ராஜா
12-11-2007, 02:15 PM
இந்தியா-பாகிஸ்தான்.. இந்தியன் ஆயில் கோப்பை.

நவம்பர் 11. 3 வது ஒருநாள் போட்டி. கான்பூர்.

முதல் பந்திலேயே கங்கூலியை தவற விடுகிறார் கம்ரன் அக்மல்..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82007.jpg

அதன் பின்னர் தாதா 39 ஓட்டங்கள் எடுத்தார்..

ராஜா
12-11-2007, 02:26 PM
சச்சினை வீழ்த்திய மகிழ்ச்சியைக் கொண்டாடும் தன்வீர் சோஹைல்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82009.jpg

ராஜா
12-11-2007, 02:34 PM
ஆட்டத்தின் இடையே மோதிக்கொண்ட கம்பீரும், அஃப்ரிதியும்..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82017.jpg

ராஜா
12-11-2007, 02:39 PM
எகிறுவது 'இன்சாட்' ராக்கெட் அல்ல.. கங்கூலியின் ஆஃப் ஸ்டம்ப்....!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82013.jpg

ராஜா
12-11-2007, 02:44 PM
அணித்தலைவரின் 49 ஓட்டமும்.. [என்ன கணக்கோ..?] அவரது ஸ்டம்பின் ஆட்டமும்..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82020.jpg

ராஜா
12-11-2007, 02:48 PM
கவுதம் கம்பீர் மட்டும் என்ன சளைத்தவரா..? அவர் குச்சியும் காலி..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82014.jpg

ராஜா
12-11-2007, 02:51 PM
நிதானமாக ஆடி, 95 பந்துகளில் 3 சிக்சர் உள்பட 77 ஓட்டங்கள் குவித்த யுவராஜ்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82015.jpg

ராஜா
12-11-2007, 02:54 PM
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அப்ரிதியை வீழ்த்திய இர்ஃபான் பத்தான்..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82024.jpg

ராஜா
12-11-2007, 02:58 PM
கடந்த போட்டியின் ஆட்டநாயகன் யூனிஸ் கானை வழியனுப்புகிறார் ஆர்பி சிங்..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82025.jpg

ராஜா
12-11-2007, 03:05 PM
ஷோயப் மாலிக்கை ஆட்டமிழக்கச் செய்ததை கொண்டாடுகிறார் யுவராஜ்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82026.jpg

ராஜா
12-11-2007, 03:08 PM
129 ஓட்டங்கள் குவித்து பட்டையைக் கிளப்பிய சல்மான் பட்..!

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82000/82042.jpg

ராஜா
12-11-2007, 03:18 PM
சுருக்கமான ஸ்கோர்..!

இந்தியா : 294/6 [50 ஓவர்களில்..]

யுவராஜ் 77, தோனி 49, கங்கூலி 39.

அப்துர் ரகுமான் 2/58.

பாகிஸ்தான் : 248 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து..[47.2 ஓவர்களில்..]

சல்மான் பட் 129., மிஸ்பா 38.

ஆர்பி சிங் 3/62

இந்தியா வெற்றி... 2-1 என்ற கணக்கில் முன்னிலை.

ராஜா
12-11-2007, 03:19 PM
அடுத்த போட்டி..

15-11-07 .. குவாலியர்.

அறிஞர்
15-11-2007, 03:22 PM
இன்றைய ஆட்டத்தில் இந்தியா சாதிக்குமா...

தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு

டெண்டுல்கருக்கும் சதத்திற்கும் என்ன தூரமோ.... இந்த வருடத்தில் 6ம் முறையாக சதத்தை கோட்டை விட்டுள்ளார்.

அறிஞர்
15-11-2007, 04:03 PM
மன்றத்தில் ஓட்டளித்த பலருடைய நம்பிக்கையை வீணாக்காமல் இந்தியா தொடரை வென்றது.....

பாகிஸ்தான் 255/6

இந்தியா 260/4 (டெண்டுல்கர் 97, யுவராஜ் 53, தோனி 45, சேவாக் 43)

நேசம்
15-11-2007, 07:11 PM
http://www.tamilmantram.com/photogal/images/2878/medium/1__44240705_arpy.jpg

இந்தியா-பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டகாரர் சல்மான்பட் விக்கெட் விழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்.பி.சிங

நேசம்
15-11-2007, 07:28 PM
http://www.tamilmantram.com/photogal/images/2878/medium/1__44240945_zaheer.jpg

பாகிஸ்தான் அணி தலைவர் மாலிக் விக்கெட் எடுத்ததன் முலம் 200 விக்கெட் எடுத்த ஐந்தாவது வீராக ஆகிறார் ஜாகிர் கான்

நேசம்
15-11-2007, 07:31 PM
http://www.tamilmantram.com/photogal/images/2878/medium/1__44241035_ganguly.jpg

அதிரடி ஆட்டகாரர் அப்ரிதி விரைவில் வெளியேற்றிய மகிழ்ச்சியில் கங்குலி

நேசம்
15-11-2007, 07:35 PM
http://www.tamilmantram.com/photogal/images/2878/medium/1__44241985_gul.jpg

இந்த வருடத்தில் மட்டும் ஆறாவது தடவையாக சதத்தை தவறவிடும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்

அறிஞர்
15-11-2007, 10:13 PM
http://www.youtube.com/v/BepLkBKZPds&rel=1

http://www.youtube.com/v/QMtwn_rLDeM&rel=1

salman butt
http://www.youtube.com/v/V-BUF62rReo&rel=1

afridi out
http://www.youtube.com/v/DZV1A2bCjgM&rel=1

sachin 97
http://www.youtube.com/v/CK6Kroh4XB4&rel=1

http://www.youtube.com/v/CK6Kroh4XB4&rel=1

sachin wkt
http://www.youtube.com/v/4yqRuk-ZW0k&rel=1

http://www.youtube.com/v/qOy3obg0Y4w&rel=1

நேசம்
17-11-2007, 02:26 AM
ஒரு நாள் போட்டிகளில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 16 தடவை சதம் எடுக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.அதிலும் ஒரு ரன்னில் சதம் இழந்தவர்களில் முதலிடத்தில் உள்ளார்.அது முன்று முறை நடந்துள்ளது.16 தடவையில் 6 முறை பாகிஸ்தானுக்கு ஏதிராக சதம் எடுக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்