PDA

View Full Version : வருங்காலச் செடியின் வருத்தம்ஆதவா
05-11-2007, 02:23 PM
இயற்கை நீர் பொழியுமென
அண்ணாந்து பார்த்து
செயற்கை பிம்பத்தை
புணர்ந்து துடிக்கிறேன்

ரசாயன தோய்தலில்
நிறமாறிய என் சந்ததிகள்
என்னெதிரே கூடு கட்டி
செழிக்கிறார்கள்.

ஏதோ சில காரணங்களால்
என்னை இவர்கள்
விட்டு வைத்திருக்கக் கூடும்

இயந்திரங்களின்
கட்டுப்பாடுகளைத் தவிர்த்துவிட்டு
நிலவைத் தேடி
மாடிக்குச் செல்லும் சிலர்
என் மீது நீரைத்
தெளித்து விட்டுச் செல்வார்கள்.

இவ் வாக்கிரமிப்புகளுக்கு நடுவே
எங்கோ ஒரு மூலையில்
துடித்துக் கொண்டிருக்கும்
மனிதத்தை எண்ணியே
உமிழ்கிறேன் பிராணத்தை.

பென்ஸ்
05-11-2007, 02:50 PM
அருமை ஆதவா...
நாளை முழுவதும் இரவாகி போகும்
மழை என்பதற்கு கண்ணீரை காண்பிக்க வேண்டி வரும்...
அந்த கண்ணீரோடு ஒரு துளி
மனிதமும் ..
கடைசி வரியிலாயிருந்தாலும்
அதுவும் கடைசி வரை வரும்...
நொண்டி பிணங்களின்
செவிட்டு துடிப்பாய்...

ஆதவா
05-11-2007, 03:02 PM

மிக்க நன்றிங்க பென்ஸ் அண்ணா.

நாளை காகிதத்தில் காண்பிக்கப்படும் உணர்ச்சிகள்.. அன்றும் காகிதம் இருக்குமா என்பது சந்தேகம்.

கட்டியழ எவருமில்லா சூன்யத்தில் ஆயுள் ஏற்றும் ஆராய்ச்சிகளும்
காண்பிக்க அன்பில்லா வெறுமையில் எந்திரங்களுக்கு முத்தமிடும் வேலலகளும்

நாளை நடக்கலாம் எதுவும்..

உலகம் யார்கையில் செல்லப் போகிறது?

ஆண் ?
பெண்?

இரண்டுமில்லை, நாளை உருவாகும் புது மனிதப்படை..

கண்ணீர் உகுக்கா விழிகள் பொருந்ந்தியிருக்கலாம்
பெண்களைக் கண்டால் மலரத்தெரியாமலிருக்கலாம்
ஓய்வொழிச்சல் அற்ற இரும்பாயிருக்கலாம்.

அனைத்தும் கலந்த மனிதனாகக் கூட இருக்கலாம்..

அன்றைய தினத்தில் செத்துப் போகிறவை எத்தனையோ..

மிக்க நன்றி அண்ணா.

ஷீ-நிசி
05-11-2007, 03:04 PM
நீண்ட நாளுக்குப் பின் ஆதவன் பாணியிலான கவிதை!

எனக்கு ஏன் விளங்க மறுக்கிறது என்றுதான் புரியவில்லை....

என்னைபோன்றவர்களுக்கு புரியும்வண்ணம் ஒரு வரியில் அதின் கருவைத் தரலாமே ஆதவா....

அமரன்
05-11-2007, 03:20 PM
புதைந்து, முட்டிமோதி, சுயமாக வழியமைத்து, உலகம் பார்க்கும்போது...
"கண்"நோக நோக்கவைக்கும் காலங்கள் வரவேற்கும்..வேர் வேர்க்கும் தாகத்தில்...
வெளி உலகம் பார்த்தும் வெளியானதால் மீண்டும் போராட்டம்...
உருஞ்சப்பட்டது போக ஆழத்தில் மிச்சமீதியானதை உருஞ்சும்...
அமிலங்களும் காரங்களும் அதில் கலந்திருக்கும்..
ஒருசில தருணங்களில் ஒருசிலர் துடிப்புத்துளிகள் தாகம் தீர்க்கும்..
பிராணனை வாங்கும் பலருக்கு மத்தியில்
அவர்களுக்காகவே பிராண வாயுவை வெளிவிட்டுக்கொண்டெ இருக்கும்
மரத்துப்போனவர்களுக்கு மத்தியில் இருக்கும் "மரம்"..

அமரன்
05-11-2007, 03:22 PM
அட..எனது பின்னூட்டத்தைப் பதித்து விட்டுப்பார்க்கின்றேன் தலைப்பு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது...
நிகழவேண்டிய மாற்றத்துக்கு பொருத்தமாக நிகழ்ந்திருக்கிறது.

ஷீ-நிசி
05-11-2007, 03:26 PM
நன்றி ஆதவா....

உன் தலைப்பு எனக்கு கவிதையின் சுவையை வெகுவாய் விளக்கியது...

ஒரு அழகிய சோலையினை கண் கட்டிக்கொண்டு ரசித்தவனுக்கு ஒப்பாயிருந்தேன் சற்று முன் வரை..

காலசக்கரத்தில், விஞ்ஞான மாற்றங்களில் அற்ப செடியும் கூட தப்பவில்லை..

கவிதையின் கரு முற்றிலும் புதிய ஒன்று! வாழ்த்துக்கள்!

அமரன்
05-11-2007, 03:27 PM
செடியை குறியீடாகக் கொண்டால் வேறு ஏதாவது மாட்டுமோ?

பென்ஸ்
05-11-2007, 03:30 PM
இயற்கை நீர் பொழியுமென
அண்ணாந்து பார்த்து
செயற்கை பிம்பத்தை
புணர்ந்து துடிக்கிறேன்

எப்போதும் முதல் வரிகளில் அசத்திவிடுகிறாய்...

இருண்டு, செயற்கை ஓளியேறிய இடத்தில் மழைக்காக காத்திருக்கும் ஒரு மரம்... என்று எடுத்து கொள்ள எனக்கு அதிகமாக பிடிக்கிறது

ஆதவா
05-11-2007, 03:43 PM
புதைந்து, முட்டிமோதி, சுயமாக வழியமைத்து, உலகம் பார்க்கும்போது...
"கண்"நோக நோக்கவைக்கும் காலங்கள் வரவேற்கும்..வேர் வேர்க்கும் தாகத்தில்...
வெளி உலகம் பார்த்தும் வெளியானதால் மீண்டும் போராட்டம்...
உருஞ்சப்பட்டது போக ஆழத்தில் மிச்சமீதியானதை உருஞ்சும்...
அமிலங்களும் காரங்களும் அதில் கலந்திருக்கும்..
ஒருசில தருணங்களில் ஒருசிலர் துடிப்புத்துளிகள் தாகம் தீர்க்கும்..
பிராணனை வாங்கும் பலருக்கு மத்தியில்
அவர்களுக்காகவே பிராண வாயுவை வெளிவிட்டுக்கொண்டெ இருக்கும்
மரத்துப்போனவர்களுக்கு மத்தியில் இருக்கும் "மரம்"..

மிக்க நன்றி அமரன்.

சற்றே புரிந்தும் புரியாமலும் இருப்பினும்,

மற்றவர்களுக்காக பிராணம் விட்டுக் கொண்டிருக்க மரங்களுக்கு உணர்விருக்கலாம்....:)

நடக்கலாம் எதுவும்....
எதிர்காலத்தில்.

நன்றிங்க அமரன்.

ஆதவா
05-11-2007, 03:46 PM
நன்றி ஆதவா....

உன் தலைப்பு எனக்கு கவிதையின் சுவையை வெகுவாய் விளக்கியது...

ஒரு அழகிய சோலையினை கண் கட்டிக்கொண்டு ரசித்தவனுக்கு ஒப்பாயிருந்தேன் சற்று முன் வரை..

காலசக்கரத்தில், விஞ்ஞான மாற்றங்களில் அற்ப செடியும் கூட தப்பவில்லை..

கவிதையின் கரு முற்றிலும் புதிய ஒன்று! வாழ்த்துக்கள்!

நன்றி கவிஞரே!
கவிதைக் கருவுக்கு என்ன காரணம் என்று தெரியுமா? ஒரு கனவு...

ஆனால் நான் கண்ட கனவு மிக மிக தாமதமானது.... ஏற்கனவே அந்த கனவுகள் ஊடகத்தால் நனவாகிக் கொண்டிருக்கும் போதிலும்....

அவ்வகை ஊடகங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

நன்றிங்க