PDA

View Full Version : தமிழ் செல்வன் அண்ணா



இனியவள்
05-11-2007, 02:00 PM
தென்றல் காற்றே தென்றல் காற்றே
எம் தமிழ் செல்வனின் இறுதி
மூச்சை சுமந்து வந்த
தென்றல் காற்றே....

எம் புன்னகைச் செல்வனின்
இறுதியாய் நினைத்திட்ட
நினைவுகளை அறிந்து வந்தாயோ..

மூச்சுக் காற்றே மூச்சுக் காற்றே
மண்ணை சுவாசமாய்
சுவாசித்தவனை விட்டுப்
பிரிந்தாயே....

செல்வா செல்வா எங்கள்
தமிழ்ச் செல்வா - எங்கள்
தலைவர் வழி நடந்தாயே
இன்று தலைவரை விட்டு
எங்கு சென்றாயோ....

தேசக் காற்றெங்கும் உன்னைத்
தேடித் தேடி திரிகின்றனவே
பறவைகள் அனைத்தும் - காற்றாய்
கலந்து போனாயே....

அண்ணா அண்ணா செல்வா அண்ணா
விதையாகிய உன் உயிர்
விருட்சமாய் மாறிடுமே.....

பென்ஸ்
05-11-2007, 02:19 PM
இனியவள்...
அவர் புதைக்கபடலாம்
அவர் சிந்தனை விதைக்கபட்டுள்ளது...
எத்தனை அத்தனை இரத்தம் சிந்தி நான் அதை வளர்க்கிறோம்...
கவலை வேண்டாம் நம் குழந்தைகள் இந்த நிழலில் கண்டிப்பாக இழைப்பாறுவார்கள்...