PDA

View Full Version : அந்த தீபாவளி நினைவுகள்...alaguraj
05-11-2007, 12:45 PM
தீவாளி வரப்போகுது....சின்னவயசுல தீபாவளி கொண்டாடிய அந்த பசுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாலே சுகமாக இருக்கிறது...

ஒரு மாசத்துக்கு முந்தியோ பக்கத்து வீட்டுப் பொம்பளைக எல்லாம் சேலை எடுத்து எல்லாருக்கும் பெருமையா காட்ட ஆரம்பிச்சுடுவாங்க...எனக்கு சட்டை, டவுசருன்னு கேட்டு கேட்டு சலிச்சுப்போய்டும், ஒருவழியா ஒருவாரத்துக்கு முன்னாலே காதர் ராவுத்தர் கடையிலே துணியெடுக்க கூட்டிடுப்போவாங்க..எந்த துணிய எடுத்துப்போட்டாலும் இது உனக்கு ரொம்ப நல்லாருக்கும்ன்னு சொல்லி, சொல்லி ஏதாவது ஒன்னை தலையில கட்டுறதுலேயே குறியாருப்பரு..ஒரு வழியா துணியெடுது வர்ற வழியிலேயோ நம்ம குடும்ப டெய்லர் கிட்டே துணிய தக்க குடுப்போம்..ரெண்டு நாள்ள வாங்கிக்கோங்கன்னு சொல்லி வாங்கி வைச்சுக்கிட்டு அளவெடுப்ப்பாரு...அவ்வள்வுதான் அப்புறம் அத மறந்துடுவாரு...டெய்லி வரும்போது போம்போதெல்லாம் நாமதான் ஞாவப்படுத்தணும்..எப்ப கேட்டடலும் தம்பி வெட்டியாச்சு, காலர்மட்டுத்தான் பாக்கி, காஜா போடனும் அப்படி இப்படின்னு, நாளைக்கு சொல்லி நாள கடத்துறதுல கில்லாடி...

நாலு நாளைக்கு முன்னாலேயே பஜார்லே பட்டாசு கடை போட்டுருவாங்க..சுத்தி நின்னு வேடிக்க பாக்குற கூட்டந்தான் அதிகமா இருக்கும். கூடபடிக்கிற சிலபோர் கூடவே இருந்து வியாரமும் செய்வானுங்க...கம்பிமத்தாப்பு, அனுகுண்டு, ராக்கெட்டு, ரயிலு, லச்சுமிவெடி, யானை,சரம், சாட்டை, 7சாட் பூஞ்சரம்(புஸ்வானம்), பாம்பு, துப்பாக்கி, தரசக்கரம் இப்படி பல வகையான் வெடி இருக்கும். வெடி கம்பெனி போஸ்டரே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுலே எல்லா வருசமும் தீவாளிக்கு முதனாலுதான் வெடி பர்சேஸ் எல்லாம். எல்லா வெரைட்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பர்சேஸ் பண்னிக்கிட்டு வீட்டுக்கு நடந்து போம்பேது ஒரு சந்தோசம் இருக்குமே...ஆஹா.....

முதனாள் நைட்டு டெய்லர் கடையில போய் உக்காந்து போராடி சட்டை துணிமணிய வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாதான் நிம்மதி...அம்மா வீடு வாசல்லாம் அலச ஆரம்பிச்சுவாங்க...சிலதுகள் முதநாள் நைட்டே வெடிபோட ஆரம்பிச்சுவாங்க..அதுல நம்க்குவேற சரியா தூக்கம் வராது....காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்து நல்லென்ணை தேச்சு குளிச்சு புதுச்சட்டைக்கும், டவுசருக்கும் மஞ்ச தடவி வெடப்பா போட்டுக்கிட்டு செய்ற முதகாரியம் வெடி பெட்டிய தூக்குறது தான். பொம்பளைப்புள்ளகல்லாம் பட்டுப்பவாடை, தாவணியில தக தகன்னு ஜொலிப்பக...

நாமெல்லாம் வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குருவி வெடின்னு வெடிக்க விட்டு தெருவெல்லாம் போட்டி போட்டு குப்பையாக்கினாத்தான் நமக்கெல்லாம் நிம்மதி. யானைவெடியெல்லாம் சும்மா அசால்ட்டா பத்தவச்சுட்டு அப்புறமா தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க நம்ம குரூப்பு..

பெருசுக காது அதிர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு பயந்து ஒதுங்கி நிக்கவச்ச சாதனைகளும் நடத்திருக்கு..

பக்கத்து வீட்டு அக்கா ஆசைக்கு ஒண்ணு பத்தவக்க நடுங்கிகிட்டே போகும். கை நடுங்கிகிட்டே திரி பக்கத்திலே போகும்போது "டம்" ன்னு வாயலே வெடிபோட்டு திரும்ப வர வச்சிடுவோம்.. இட்லி, பலகாரம்ன்னு சாப்புட்டுட்டு ஒரு மிதப்பா 10 மணி சினிமாவுக்கு 8.30 மணிக்கே கிளம்பிடுவோம் கையிலே துப்பாக்கி, ரோல், கேப்வெடி எல்லாம் எடுத்துக்கிட்டு.

கியுவிலெ காத்துக்கிடந்து, டிக்கெட் எடுத்து தியெட்டருக்குள்ளேயும் துப்பாக்கி சரமாரியா வெடிக்கும்..தியேட்டரெல்லாம் புதுச்சட்ட ஆசாமிகதான். இடைவேளைக்கு கலர் சேடா, பால் ஐய்சு, சமோசாவுக்கு கூட்டம் அலை மோதும்...

நைட்டெல்லாம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, தீப்பெட்டின்னு, தரசக்கரம், ராக்கெட்டுன்னு கொளுத்தி ஒரே அமர்களந்தான். இது மட்டுமா? வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து, கரி மருந்த ஒண்ணா ஒரு போப்பரிலே கொட்டி பேப்பரேட கொளுத்தினா ஒரே புகை மண்டலமாயிரும் தெருவு...

இப்படி ஒருவழியா சந்தோசமா எந்த கவலையுமில்ல போனது தாங்க நம்ம சின்னவயசு தீபாவளி...

இது எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது நடுவீட்டுக்குள்ள இருக்குற டிவி பொட்டிதானுங்க...இப்போ கிராமத்துக்கு போனா..... தாவாணியயே பாக்க முடியலை...தியேட்டர்ல்லாம் இல்ல..

கொஞ்சமா பேருக்கு வெடி வெடிச்சு புஸ்சுன்னு போச்சு அந்த பழய சந்தோசம்....நீங்களாவாது நல்லா கொண்டாடுங்க ......

உங்க சின்ன வயசு தீபாவளிய கொஞ்சம் அசைபோட்டு சொல்லுங்க மக்கா...

யவனிகா
05-11-2007, 02:39 PM
அந்த நாட்கள் தீபாவளியை அப்படியே தந்திருக்கிறீர்கள் மத்தாப்பாய் சிதறும் வார்த்தைகளில்.பழைய ஞாபகங்களை கிளறி விடுகிறது உங்கள் பதிப்பு.இன்றைய தீபாவளி நாலு சுவர்களுக்குள் முடங்கித்தான் போய்விட்டது.இனி வரும் தலைமுறைக்கு ஒரிஜினல் தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு கிட்டவே கிட்டாதோ?அருமையான பதிப்பு. வாழ்த்துக்கள்.

அமரன்
05-11-2007, 03:10 PM
நம்ம நாட்டுல எனக்குத் தெரிந்து இவ்வளவு பிரமாண்டமாக தீபாவளி கொண்டாடுவதில்லை. தீபாவளிக்கு காசைக் 'கரி'யாக்கியது நினைவில்லை. ஆனாலும் பெருசுங்க வயித்தில் புளியைக் கரைக்கும் சமாச்சாரங்கள் இருந்தன. கடைமுகப்புகளில் தொங்கும் வாழ்த்து அட்டைச்சரங்கள், டவுன்கடைகளில் மணக்கும் புதுத்துணி வாசனை இரண்டும் அவற்றுள் பிரதானம்.

காலையில் எழுந்தமா? குளிச்சுப் புது துணி அணிந்தோமா? அநேகமாக இருக்கும் வெள்ளத்தின் சேறுகளை அதில் பூசினோமா? எனக் களிந்த தீபாவளிக்கு அநேகமான இல்லங்களின் ஸ்பெஷல் ஐந்தாறு வீடுகள் சேர்ந்து, வீட்டின் கொல்லைப்புறத்தில் தலைகீழாகக் கட்டித்தூங்கவிட்டு, கண்முன் உரித்த ஆட்டுக்கறிக்குழம்பு, இரத்த வறுவல்தான். அதுவும் நம்ம ஊருப்பயலுக வைக்கும் குழம்பை நாக்கில் வைச்சா மூக்கில் ஓடும். கேட்டாக்கா மழைச்சளி எல்லாம் வெட்டி அகத்த இபடித்தான் ஆக்கணும்னு வக்கணையா சொல்லுவாங்க..

அதை நல்லா மூக்கு முட்ட வெட்டி விட்டு, பசங்க கூட மார்பிள் (இந்தியாவில் கோலிக்குண்டு என நினைகின்றேன்) அடிச்சுத்திரியுறதோட தீபாவளி முடிஞ்சிடும். எங்க காலத்துல யாழ்ப்பாணத்தில் சினிமாக்கொட்டகை என்பதை காதால் கூட்டக் கேட்பதில்லை. அதனால புதுப்படங்கள் எம்மை எட்டுவதில்லை.

அப்புறம் நாட்டுகுள்ளேயே நாடு கடந்தபின்ன்ர் தீபாவளி வரும். யாழ்ப்பாணத்தில் வாங்கித்தா என அடம்பிடித்த காலம்போய், வாங்கித்தந்தாலும் போடமாட்டேன் என அடம்பிடித்த காலம் கனிந்தது. அதனால புதுச்சட்டை அப்பப்போதான் வரும். ஆனாலும் தலை முழுக்கும் ஆட்டுக்கறியும் இருக்கும். கறிக்கடை ஆடுதான் கிடைக்கும்.

புதுத்திரைப்படம் எம்மை அழைக்கும். இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, டிக்கட்டை கறுப்பில் வெள்ளை விலைக்கு வாங்கி, நீண்ட வரிசையில் படம் பார்க்க முட்டிமோதுபவர்களை பார்த்துக்கொண்டு கம்பீரமாக உள்ளே போய் கேலரியில் இருந்து விசில் அடிப்பதோடு தீபாவளி முடியும்.

நாடு விட்டு நாடு வந்த பின் தாயகத்தில் இருந்து வந்து விழும் குரல்கள் மட்டும்தான் தீபாவளியைச் சொல்லும். அதன் பின்னர் எனது அலைபேசிக் குறுந்தகவல்கள் தீபாவளியைப் பரிமாறும். அவ்வளவுதான்.. மறுபடி ஊர்த்தீபாவளிக்கு எப்போதான் ஹலோ சொல்வதோ?

அக்னி
10-11-2007, 12:02 AM
அழகுராஜ், அமரன் இருவரினதும் தீவாவளிக் கண்ணோட்டங்கள்,
ரசிக்க வைப்பதோடு,
மீண்டும் அந்த நாட்கள் தேடி ஏங்கவும் வைக்கின்றன...

தங்கவேல்
10-11-2007, 12:12 AM
ம் .. அதெல்லாம் ஒரு காலம். ஏக்கப்பெருமூச்சுமாய் மலரும் நினைவுகள். திரும்பவும் வருமா ? வராது ?

lolluvathiyar
10-11-2007, 06:34 AM
அழகு உங்கள் மலரும் நினைவுகளை அப்படியே தந்து எங்கள் நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள். உங்கள் அனுபவம் அப்படியே எனக்கு இருந்திருகிறது. ஒன்னே ஒன்னு தான் மைனஸ் அது சினிமா, ரிலீஸ் அன்னிக்கு எங்க வீட்டல என்னை சினிமாவுக்கு போக தடை ஒர் வாரம் கழிச்சுதான் போவோம்.

இன்னிக்கு டீவி ஆப்பு வச்சாலும் முழுசா தப்புனு சொல்ல முடியாது. தற்போது 2 குழந்தை இருக்கு வீட்டுக்கு பட்டாசு வாங்க 1000 ரூபா. வேண்டும். அதே டீவீ இல்லீனான் 5000 ரூபாவுக்கு வாங்கி தந்தாலும் கட்டுபுடியாகாது. ஏதோ 2 சினிமாவ காட்டி கொஞ்ச கட்டுபாடு பன்னி நம்ம காத காப்பாத்த வேண்டி இருக்கு