PDA

View Full Version : அழகுச்சிரிப்பின் உருவம்..............



kavinila
05-11-2007, 11:12 AM
அழகுச் சிரிப்பின் உருவம்
அண்ணன்...............
அரசியல் அறிவில் பேருருவம்
எம் அண்ணன்....

அண்ணணே செல்வன் அண்ணனே.....
சென்றீரோ............
எங்கு பேசச் சென்றீரோ......

தமிழரின் உரிமைகள்
எல்லாம்
உரைத்திட்ட அறிவே
எங்கள் அண்ணனே.....
அன்டன் அங்கிளின் அறிவின்
ஒளியாய்....
அகிலத்தில் வீசிய தீபமே

அழகுச் சிரிப்பின் உருவம்
அண்ணன்...............
அரசியல் அறிவில் பேருருவம்
எம் அண்ணன்

பேச்சுவர்த்தைகள் எல்லாம்
தமிழ் மூச்சென....
முழங்கிய...
அண்ணனே
தமிழ் செல்வனென
எமக்கு அரசியல் ....
செல்வமாய் வந்த
செல்வமே.......

அழகுச் சிரிப்பின் உருவம்
அண்ணன்...............
அரசியல் அறிவில் பேருருவம்
எம் அண்ணன்...............

அண்ணனின் அன்பின்
வடிவாய்...
அருகினிலிருந்த செல்வமே
அரசியல்துறையின் அடியாய்
அரும்பணி ஆற்றிய
செல்வமே

கண்ணிலே என் கண்ணிலே
அண்ணா.......
உன் கனிவின் முகங்கள்
கனவிலே...என் கனவிலே
நீ சிரிப்பது போலவே
எண்ணங்கள்......

அழகுச் சிரிப்பின் உருவம்
அண்ணன்...............
அரசியல் அறிவில் பேருருவம்
எம் அண்ணன்

அதிகாலை வேளையில்
உம்மை.....
அழித்ததோ அசுரரின் குண்டுகள்....
அண்ணா....
அழித்ததோ உம்மை....
அழித்ததோ................

அழிவில்லா சிரிப்பின்
இதயம்......
எம் அண்ணன்
அரசியல் அறிவின்
இமயம்...........

செல்வனவன் சிரிப்படக்கி
சிங்களம்தான் சிரிக்கிறதோ.....
செந்தமிழன் பேச்சடக்கி
பேய்கள் இங்கு நடிக்கிறதோ....

நீர் நடந்த பாதையெல்லாம்
உம் புன்னகைகள்
பூத்திருக்கும்.....
நீர் அமர்ந்தசபைகளெல்லாம்
உம் சிந்தனைகள்
சிறகடிக்கும்....

அழகுச் சிரிப்பின் உருவம்
அண்ணன்...............
அரசியல் அறிவில் பேருருவம்
எம் அண்ணன்

வெள்ளைப்புறா.....
கழுகுகளின் விமானக்குண்டில்
வீழ்ந்ததுவோ..............
வெள்ளை மனம் கொண்ட
மகன்
வித்துடலாய் வீழ்ந்ததுவோ