PDA

View Full Version : யாஹூ தூதுவன் 9அன்புரசிகன்
05-11-2007, 10:53 AM
நண்பர்களே...

யாஹூ தூதுவன் 9 (Yahoo! Messenger 9.0 Beta) வெளிவந்துவிட்டதுது... இதுதுவரை யாஹூ தூதுவனில் நாம் ஒருங்குக்குறியில் அரட்டை அடிக்க முடிவதில்லை. (Not support for UTF-08)

தற்சமயம் அதனை நிவர்த்திசெய்துள்ளனர்... மேலும் சில சிறப்புகள் நிச்சயம் இருக்கும். பார்வைக்கு மிக அழகாகத்தோன்றும் இந்த தூதுதுவனை Dialup இணைய தொடர்பில் பாவிப்போர் அங்கிருந்த படியே நிறுவுவது சற்றே கடினமாக இருக்கும். இந்த (http://us.dl1.yimg.com/download.yahoo.com/dl/msgr9/us/ymsgr9us.exe) சுட்டியின் மூலம் 12.7 MB அளவுள்ள அந்த கோப்பை பதிவிறக்கி உங்கள் கணிணியிலும் நிறுவலாம்....

இது ஏற்கனவே தெரிந்ததாயின் மன்னிக்க....

நன்றி: யாஹூ

alaguraj
05-11-2007, 11:20 AM
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்! ...யாகு மெசஞ்சரில் சாட் செய்வதே அலாதி சுகம் தான்...

தமிழில் ஆடிபிள்ஸ் சூப்பர்....பயன் படுத்திப்பருங்க..

தகவலுக்கு நன்றி அன்பு..

நேசம்
05-11-2007, 11:23 AM
நான் இப்பதான் பதிவேற்றம் செய்தேன்.தமிழில் கலந்துரையாட்லாம் என்னும் போது மகிழ்ச்சி யாக தான் இருக்கிறது. அதே சமயம் நாம் யாருகூடவும் தமிழில் சாட்டிங் செய்யும் போது , சாட்டிங் செய்பவரும் இந்த புதிய வெர்சனை வைத்து இருக்க வேண்டுமா..?

அன்புரசிகன்
05-11-2007, 11:30 AM
அதே சமயம் நாம் யாரு கூடன் தமிழில் சாட்டிங் செய்யும் போது , சாட்டிங் செய்பவரும் இந்த புதிய வெர்சனை வைத்து இருக்க வேண்டுமா..?

அப்படியில்லை. ஆனால் அவரால் தமிழில் நேரடியாக பதிய முடியாதிருக்கும்... வேறெங்காவது பதிந்து கொப்பி பேஸ்ட் செய்ய வேண்டி வரும்...

நேசம்
05-11-2007, 11:32 AM
நல்லது அன்பு.இதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

மீனாகுமார்
05-11-2007, 02:07 PM
நல்ல தகவல் தோழரே... இது இல்லாததினால், மிரிண்டாவைப் பயன்படுத்தி வந்தோம்...

நன்றி.

அன்புரசிகன்
05-11-2007, 02:14 PM
நல்ல தகவல் தோழரே... இது இல்லாததினால், மிரிண்டாவைப் பயன்படுத்தி வந்தோம்...

நன்றி.

அது என்னமோ உண்மைதான். அலுவலகத்தில் Notepad ல் பதிந்து copy paste பண்ணுவேன்...

மனோஜ்
05-11-2007, 02:32 PM
நன்றி தகவலுக்கு அன்பு

praveen
05-11-2007, 02:57 PM
இந்த பீட்டா பதிப்பு ஏற்கெனவே நான் பதிவிறக்கி உபயோகித்திருக்கிறேன். ஆனால் இந்த யுனிகோடு சப்போர்ட் பற்றி அன்புரசிகன் தகவல் மூலம் தான் அறிகிறேன்.

இவர் தாமதமாக இந்த தகவல் தந்ததற்கு மண்ணிக்க முடியாது :)

அன்புரசிகன்
05-11-2007, 03:35 PM
அநியாயத்திற்கு கோபப்படுகிறீர்கள் பிரவீன்.... :D :D :D

மனோஜ்
05-11-2007, 07:51 PM
அன்பு இதில் பாமினி இகலப்பை வேலை செய்யவில்லை என்ன செய்வது

அன்புரசிகன்
05-11-2007, 08:04 PM
இல்லையே மனோஜ்... நான் பாவிப்பது பாமினி எழுத்துதுரு முறையினாலான இ-கலப்பை தான். சில வேளை பிரச்சனை கொடுத்தால் உங்கள் தூதுவனில் Messenger> Preferances>Apperance ல் Default Font colour for message window எனும் இடத்தில் உள்ள Change Fonts and colors என்பதை அழுத்தி TSCu_Paranar அல்லது Arial Unicode MS போன்ற எழுத்துருக்களை தெரிவு செய்து பாருங்கள். சரிவரும் என்று நினைக்கிறேன்...

அறிஞர்
05-11-2007, 08:06 PM
தகவலுக்கு நன்றி நண்பரே.... யுனிகோடிற்காக.. எம் எஸ் என்... ஜிடாக் உபயோகித்தேன். இனி இதையும் முயற்சிக்கலாம்.

தங்கவேல்
06-11-2007, 08:02 AM
ஐந்து நிமிடத்தில் பதிவிறக்கி உபயோகித்தேன். நல்லாத்தான் இருக்கு ......................

கஜினி
06-11-2007, 08:29 AM
அருமையான தகவல் உடனே நானும் உபயோகிக்கிறேன். நன்றி.

பூமகள்
06-11-2007, 09:28 AM
பதிவிறக்கிக் கொண்டே இருக்கேன்..!
பயனுள்ள தகவல்.
முயற்சித்துவிட்டு ஏதும் பிரச்சனை எனில் உங்க தலையை உருட்ட வருகிறேன் அன்பு அண்ணா...!! :D:D
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. :)

மனோஜ்
06-11-2007, 09:33 AM
இல்லையே மனோஜ்... நான் பாவிப்பது பாமினி எழுத்துதுரு முறையினாலான இ-கலப்பை தான். சில வேளை பிரச்சனை கொடுத்தால் உங்கள் தூதுவனில் Messenger> Preferances>Apperance ல் Default Font colour for message window எனும் இடத்தில் உள்ள Change Fonts and colors என்பதை அழுத்தி TSCu_Paranar அல்லது Arial Unicode MS போன்ற எழுத்துருக்களை தெரிவு செய்து பாருங்கள். சரிவரும் என்று நினைக்கிறேன்...

ஒன்னு நடக்கலை நண்பா ஒன்று செய்யுங்கள் என் இகலப்பை எதாவது பிரச்சனையாக இருக்கலாம் தாங்கள் பயன்படுத்தும் இகலப்பையை தாருங்கள் அப்பபோழதாவது சரிவறுதா என்று பாக்கிறோன்:icon_b:

அன்புரசிகன்
06-11-2007, 09:49 AM
மனோஜ்....

தமிழா இணையத்திலிருந்து தான் நான் பதிவிறக்கிக்கொண்டேன்...

இங்கே (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=4) அழுத்துங்கள்...

அது சரி... உங்கள் மன்றம் வரும் போது உலாவியின் title bar ல் தமிழில் வருகிறதா அல்லது பெட்டி பெட்டி அல்லது கேள்விக்குறியாக வருகிறதா?

உங்கள் தூதுவனில் தமிழில் டைப்செய்துவிட்டும் Enter செய்த பிறகும் உள்ளதாக ஒரு screen shot தாருங்கள். பார்க்கலாம்...

பூமகள்
06-11-2007, 09:52 AM
இப்போது தான் உபயோகித்தும் பார்த்துவிட்டேன்.
எனக்கு பிடித்த Theme - இல் அழகாய் இருக்கிறது.
தமிழில் இகலப்பை மூலம் அடிக்கவும் தடையில்லை..!! :)

அன்புரசிகன்
06-11-2007, 09:56 AM
7 theme கள் minimize பொத்தானுக்கு அருகில் அழகாக உள்ளன... கண்ணாடி பளிங்குகள் பொன்ற தீம்கள்.... ஜூப்பரா இருக்கு

மீனாகுமார்
06-11-2007, 12:26 PM
ஆம் தோழர்களே.. தமிழ் எழுத்துக்களும் மிக அழகாக உள்ளன. பல மாறுதல்களுடன் கடைசியில் யாகூ தூதுவன் நல்ல பொலிவைப் பெற்றுள்ளது.. ஆனால் இதற்காக நீண்ட நாட்கள் காக்க வைத்து விட்டார்கள். எனினும் மிக நன்றாக உள்ளது.

மனோஜ்
06-11-2007, 02:48 PM
இப்ப ஓகே அன்பு மிக்க நன்றி ஆலோசனைகளுக்கு:icon_b:

வெற்றி
07-11-2007, 10:33 AM
நல்ல தகவல்...பார்த்தேன் பதிவிறக்கி அப்டேட் செய்தேன் (beta 9 ) அருமை..இதை தானே எதிர் பார்த்தேம் யாகூவில்....ஆனாலும் ரொம்ப தாமதம்..(இப்போவாச்சும் வந்ததே)

ஷீ-நிசி
07-11-2007, 11:32 AM
என்ன இருந்தாலும் கூகிள் அளவிற்கு சிம்பிள் வேறு எதுவும் இல்லை என்பதே என் கருத்து!

எனினும் தகவலுக்கு நன்றிகள் அன்பு!

அன்புரசிகன்
07-11-2007, 11:41 AM
google talk ல் பல சிறப்பம்சங்கள் உண்டு என்பது என்னவோ உண்மை தான். ஆனாலும் எனக்கு மிகப்பிடித்தது என்னமோ msn messenger தான். காரணம் ஆரம்பத்திலிருந்து பாவிப்பது. Yahoo ல் சில flexibility உண்டு...

அன்புரசிகன்
07-11-2007, 06:19 PM
நண்பர்களே... உங்களுக்கு இது தெரிந்ததோ தெரியாது. ஆனால் நான் இன்று அறிந்தது. எதேச்சையாக மயூரேசன் தந்த youtube சுட்டி ஒன்றை எனது நண்பனுக்கு யாஹூ தூதுவன் மூலம் அனுப்பியபோது அதன் preview அதிலேயே தெரிகிறது. அப்படியே பார்க்கவும் முடியும்... இதோ screen shot...

http://www.slcues.net/mantram/pics/yahooyoutube.jpg

reader
08-04-2008, 03:05 PM
யாகூ ரொம்பவேத்தான் முன்னேறிருச்சு......