PDA

View Full Version : தீபத் திருநாள்..!!

பூமகள்
05-11-2007, 07:16 AM
http://bp1.blogger.com/_ATCRNmCxu-E/Ry7PQ0kGavI/AAAAAAAAAQE/KBdpJXuakow/s320/diwali.jpg (http://bp1.blogger.com/_ATCRNmCxu-E/Ry7PQ0kGavI/AAAAAAAAAQE/KBdpJXuakow/s1600-h/diwali.jpg)

தீப ஒளி எங்கும் மேவ
தீபாவளி வந்தததுவே..!

பட்டாசு வெடிகளில்
பிரபஞ்சம் மறக்கலாமோ??

ஓசோன் மழலை வயிற்றில்
ஓட்டையாக்கும்
ஓங்கியொலிக்கும்
ஓய்யார புகைவெடி தேவையா??

கொஞ்ச புகையும்
மிஞ்சா சத்தமும்
நெஞ்சை அதிரா வெடியில்
பிஞ்சின் மகிழ்வை
விஞ்சியது உளவோ??

வெடித்து பின்
தவிப்பது தகுமோ?
பார்...!
தாங்குமோ பார்??

ஆகாயத்து நட்சத்திரங்களை
கூரை ஓட்டையின் வழி
கண்டு எண்ணும்
ஏழையின் வீட்டில்
விருந்து படைத்து
விமர்சியாய் கொண்டாடலாமே??

பளிச்சிடும் தீப ஒளியில்
பள்ளி செல்ல ஏழை மழலைக்கு
கல்வி ஒளி ஏற்றலாமே??

சிந்தித்தால் தடுக்கப்படுவது
பிரபஞ்ச நஞ்சும்
புதிதாய் தொடுக்கப்படுவது
பாச மனித நேயமும்..!

அமரன்
05-11-2007, 04:08 PM
நல்ல கருத்துத்தான். கரியாக்கும் காசை ஒளியாக்கலாம்த்தான். அதற்காக கேளிக்கை பண்டிகை வேண்டாம் என்றெல்லாம் சொல்லக்கூடாது.. அதுவும் வேண்டும், ஆனால் அளவுடன் கேளிக்கை செலவீனம் இருக்கவேண்டும். ஆமா பட்டாசுத்தொழிலால்த்தான் பலர் வீட்டில் அடுப்பு எரியுதாமே உண்மையா?

ஆதவா
05-11-2007, 04:20 PM
தீபாவளி.

வீடெங்கும்
தீபங்களில் ஒளி
மின்னலை மிஞ்சின

சிறுமிகள் வைத்த
பட்டாசுகளின் சப்தம்
இடியை மிஞ்சின

காகிதமாய்
கரைந்த பணங்கள்
மேகத்தை மிஞ்சின

அதைக்கண்டு
தெருவில் அழுத
ஒரு சிறுமியின் அழுகை
மழையை மிஞ்சின..

அமரன்
05-11-2007, 04:21 PM
தீபத்திருநாள் என்பது சரியா?
கார்த்திகை தீபத்தையே அப்படி விளிப்பதாக ஞாபகம்!!!

ஆதவா
05-11-2007, 04:21 PM
கவிதையை வழி தவறி இட்டுவிட்டேனோ?

ஆதவா
05-11-2007, 04:24 PM
தீபத்திருநாள் என்பது சரியா?
கார்த்திகை தீபத்தையே அப்படி விளிப்பதாக ஞாபகம்!!!

தீபாவளி அன்று தீபங்கள் வைக்கவேண்டும்... தீபம்+ஆவளி. (ஆவளி என்றால் சரியான./முறையான என்று நினைக்கிறேன்.)

தீபத் திருநாளே தீபாவளி...

பூமகள்
05-11-2007, 04:26 PM
தீபத்திருநாள் என்பது சரியா?
கார்த்திகை தீபத்தையே அப்படி விளிப்பதாக ஞாபகம்!!!
தீபாவளி அன்று இருள் அகன்று வெளிச்சத்தின் பண்டிகையாக, ஒளித்திருவிழாவாக கொண்டாடுவதால் வித்தியாசமாக பெயர் வைத்தேன்.
இதே சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது.
கார்த்திகைத் திருநாளும் தீபத்திருநாள் என்று தான் அழைப்போம்.
தவறெனில் தலைப்பை தீபாவளி என்றே மாற்றிடுங்கள் அமரன் அண்ணா.
சுட்டிக் காட்டியமைக்கு மிகுந்த நன்றிகள்.

கவிதையை வழி தவறி இட்டுவிட்டேனோ?
சரியான இடத்தில் தான் பதித்துள்ளீர்கள் தம்பி ஆதவா.
நன்றிகள்.

அமரன்
05-11-2007, 04:28 PM
தீபம்+ஆவளி--யாரோ ஒரு அசுரனுக்கு அறிவு ஒளி சரியாகக் கிடைத்த நாள் என்றும் கொள்ளலாமோ...
எங்கள் ஊரில்/நாட்டில் தீபங்கள் வைப்பதில்லை.. கார்த்திகை தீபத்துக்குதான் தீபங்களால் அலங்கரிப்பார்கள்.."தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" என்னும் பாடல் என்னமோ சொல்கிறதே...!!

பூமகள்
05-11-2007, 04:34 PM
எங்க ஊரில் தீபங்களும் ஏற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அரிது தான்.
மத்தாப்புகளாலும் வானவேடிக்கைகளினாலும் ஒளியை கொடுத்து இருள் அகன்றதால் அப்படி பெயர்.
அதாவது அறியாமை இருள் களைந்து அறிவு ஒளி வந்த நாள்.

மனோஜ்
05-11-2007, 05:48 PM
கவிதை அருமை பூ..........மா
பட்டாசு விற்பனையை நம்பி பல வீடு ஒளிர்கிறதே :confused:

சாம்பவி
05-11-2007, 06:39 PM
தீபாவளி அன்று தீபங்கள் வைக்கவேண்டும்... தீபம்+ஆவளி. (ஆவளி என்றால் சரியான./முறையான என்று நினைக்கிறேன்.)

..

ஆவளி..... வரிசை.... !

தீபாவளி...... தீபங்களின் வரிசை.... !!

யவனிகா
05-11-2007, 06:45 PM
நல்ல கவிதை பூமகள். கொண்டாட்டத்தை சமூக அக்கறையுடன் சேர்த்துக் கொண்டாடினால் நன்றாகத் தான் இருக்கும். தீபத்திருநாள் தலைப்பு சரிதானே? பூவின் அழகான கவிதையின் ஒளியில் மன்றம் தீபாவளி கொண்டாட ஆரம்பித்து விட்டதெனச் சொல்லுங்கள். ஆதவரின் பின்னூட்டக்கவிதையும் அருமை. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஆதவா
06-11-2007, 05:27 AM
நல்ல கருத்துத்தான். கரியாக்கும் காசை ஒளியாக்கலாம்த்தான். அதற்காக கேளிக்கை பண்டிகை வேண்டாம் என்றெல்லாம் சொல்லக்கூடாது.. அதுவும் வேண்டும், ஆனால் அளவுடன் கேளிக்கை செலவீனம் இருக்கவேண்டும். ஆமா பட்டாசுத்தொழிலால்த்தான் பலர் வீட்டில் அடுப்பு எரியுதாமே உண்மையா?

இன்னும் எத்தனை நாளைக்கு இதைச் சொல்லிக் கொண்டு திரியப் போகிறோம்?

பட்டாசு வெடிப்பது எங்கும் நிறுத்தப்படமாட்டாது. ஆயின் குறைக்கப்படலாம்....

ஒரு தொழில் நொடிந்தால் மாற்று தொழில். இன்னும் அது சோறு போட்டால், ஏன் மாற்றை மாற்றவேண்டும்?

ஆதவா
06-11-2007, 05:29 AM
ஆவளி..... வரிசை.... !

தீபாவளி...... தீபங்களின் வரிசை.... !!

மிக்க நன்றி....

கற்றுத் தேர்ந்தவனல்லன் நான்..

பிழை பொறுக்க...

பூமகள்
06-11-2007, 04:31 PM
இன்னும் எத்தனை நாளைக்கு இதைச் சொல்லிக் கொண்டு திரியப் போகிறோம்?
பட்டாசு வெடிப்பது எங்கும் நிறுத்தப்படமாட்டாது. ஆயின் குறைக்கப்படலாம்....
ஒரு தொழில் நொடிந்தால் மாற்று தொழில். இன்னும் அது சோறு போட்டால், ஏன் மாற்றை மாற்றவேண்டும்?
மிகச் சரியான பதில் ஆதவா.. நன்றிகள். என் கருத்தும் இதுவே..!

பூமகள்
06-11-2007, 04:37 PM
கவிதை அருமை பூ..........மா
பட்டாசு விற்பனையை நம்பி பல வீடு ஒளிர்கிறதே :confused:
நன்றிகள் மனோஜ் அண்ணா.
ஆனாலும் ஆதவா சொன்னது போல் பல வீடுகளில் ஒளி வீச வேண்டி, உலகையே புகையாலும் சத்தத்தாலும் அழிப்பதா??
மாற்றுத்தொழிலுக்கு போவது தானே சிறந்தது?

நல்ல கவிதை பூமகள். கொண்டாட்டத்தை சமூக அக்கறையுடன் சேர்த்துக் கொண்டாடினால் நன்றாகத் தான் இருக்கும். தீபத்திருநாள் தலைப்பு சரிதானே? பூவின் அழகான கவிதையின் ஒளியில் மன்றம் தீபாவளி கொண்டாட ஆரம்பித்து விட்டதெனச் சொல்லுங்கள். ஆதவரின் பின்னூட்டக்கவிதையும் அருமை. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றிகள் யவனி அக்கா.. இந்த கவிதை சில நொடிகளில் எழுதியது.
ஆகவே வாழ்த்துக் கவிபோல் விட்டுவிட்டேன். செதுக்கவில்லை.ஆகவே கொஞ்சம் பூவின் மணம் குறைவாய் தெரியலாம்.
உங்களின் வாழ்த்துக்களோடு இனிதே தீபாவளி மன்றத்தில் ஒளிவீசத்துவங்கிவிட்டது.
வாழ்த்துக்கு நன்றிகள் அக்கா.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

பிச்சி
07-11-2007, 10:49 AM
கவிதை அழகாக் இருக்கிரது அக்கா. தீபாவளி பட்டாசு நான் வெடிக்கமாட்டேன்.

அன்புடன்
பிச்சி

அமரன்
07-11-2007, 10:52 AM
கவிதை அழகாக் இருக்கிரது அக்கா. தீபாவளி பட்டாசு நான் வெடிக்கமாட்டேன்.

அன்புடன்
பிச்சி

நல்லது சின்னப்பசங்க வெடிக்கக்கூடாது.. கையைச் சுட்டு விடும்..

பூமகள்
07-11-2007, 10:54 AM
கவிதை அழகாக் இருக்கிறது அக்கா. தீபாவளி பட்டாசு நான் வெடிக்கமாட்டேன்.
நன்றிகள் தங்கை பிச்சி..!
தீபாவளி பட்டாசு நானும் வெடிப்பது கிடையாது.

பிச்சி
07-11-2007, 11:51 AM
நல்லது சின்னப்பசங்க வெடிக்கக்கூடாது.. கையைச் சுட்டு விடும்..

:) :)

சிவா.ஜி
11-11-2007, 05:09 AM
கருத்து சொல்லும் கவிதை..தங்கையின் வார்த்தை வளத்துடனான கவிதை அழகு.வாழ்த்துக்கள் பூமகள்.