PDA

View Full Version : மீச்சுவல் பண்ட்



aam537
05-11-2007, 06:56 AM
நண்பரகளே மீச்சுவல் பண்ட் பற்றி கொஞ்சம் விரிவாக விளக்கிணால் உதவியாக இருக்கும். மாதாந்திர திட்டம் என்றால் மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் கிடைக்குமா? , எந்த திட்டம் நல்லது தயவு செய்து உதவுங்கள்

தாமரை
05-11-2007, 08:12 AM
மியூச்சுவல் ஃபண்ட் - பரஸ்பர நிதி

பங்குச் சந்தையின் அடி நாதம் இது..

பணம் படைத்தவர்கள் பங்குச் சந்தைகளுக்கு வருகின்றனர்.
அங்கு அனுபவசாலிகளைச் சந்திக்கின்றனர்.
அனுபவத்துடன் இருந்தவர்கள் பணத்தைப் பெறுகின்றனர்..
பணத்துடன் வந்தவர்கள்.. அனுபவங்களைப் பெறுகின்றனர்..

இப்படி கையில் இருக்கும் சிறுதொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அனுபவமின்மை, மற்றும் உரிய கவனம் செலுத்தாமை காரணமாய் பணத்தை இழப்பதிலிருந்து காப்பதற்கும், பங்குச் சந்தையின் வலர்ச்சியில் பங்கு பெற்று புவுடன் சேர்ந்த நாறும் மணப்பதைப் போல நல்ல வருமானத்தையும் தரவேண்டி அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு திட்டம் தான் பரஸ்பர நிதி.

இதைப் பற்றி நன்கு விளக்கமாய் அறிய்வேண்டுமாயின் நாணயம் விகடன் படியுங்கள்..

venkatesan1985
02-04-2010, 06:46 PM
நாணயம் விகடனை விட சிறந்த நூல்.கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள திரு வெங்கடேஷ் அவர்கள் எழுதியுள்ள மியூச்சுவல் பண்ட் என்ற நூல்.இதன் விலை 70ரூ.மியூச்சுவல் பண்ட் பற்றிய அ முதல் ஃ வரை இதில் உள்ளது.இது கோயம்பேடு பஸ்நிலைய புத்தகக்கடையில் கூட கிடைக்கிறது

rajarajacholan
03-04-2010, 11:01 AM
யாராச்சும் இதைப்பற்றி சொல்லுங்க நானும் ஆவலா இருக்கிறேன்.

venkatesan1985
03-04-2010, 11:47 AM
ஐயா விடிய விடிய கத கேட்டு சீதக்கி ராமன் சித்தப்பன்னு சொல்றீகளே,அந்த புக்க வாங்கி படிங்கய்யா,எல்லாமே புரியும்
யாராச்சும் இதைப்பற்றி சொல்லுங்க நானும் ஆவலா இருக்கிறேன்.

rajesh2008
14-04-2010, 05:27 AM
மியூச்சுவல் பண்ட்

பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க எல்லோருக்கும் ஆசையாக இருக்கும்.ஆனால் அதற்கு உண்டான டெக்னிக்கல் நுண்ணறிவு,நேரம் செலவிடுதல், திட்டமிடுதல்,பாலோ-அப்,எல்லோருக்கும் செய்ய முடிவதில்லை.இதனை செய்து கொடுத்து அதற்குண்டான ஒரு தொகையை நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதால் இருவருக்கும் லாபம் கிடைக்கும், இதுதான் மியூச்சுவல் பண்டின் சாராம்சம். நம் சிறிய முதலீடு கூட இன்னும் சிறு சிறு யூனிட் என்று பிரித்து ஷேர் மார்கெட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்ய படுகிறது.பங்குகளில் முதலீடு செய்வதால் உள்ள ரிஸ்க் இதிலும் உண்டு,எனினும் நம் முதலீட்டில் ஒரு பகுதி, கடன் பத்திரங்களில் முதலிடு செய்யப்படுவதால், பங்குச் சந்தையின் இறக்க காலத்திலும். நம் முதலீட்டுத் தொகை பாதுகாக்கப்படுகிறது.

வெற்றி
23-04-2010, 11:28 AM
உங்களுக்கு பதில் வேறு ஒருவர் ரிஸ்க் ( அபாயம் ) கை ஏற்றுக்கொண்டு உங்கள் அசலை காப்பற்ற போராடுவார்.. லாபம் வந்தால் உங்களுக்கும் தருவார் (அவரும் எடுத்துக்கொள்வார்.. )

சுருக்கமாக சொல்லவா... நீங்கள் நெல் எடுத்துக்கொண்டு போவீர்கள் ...அவர்கள் ( மீசுவல் பண்ட் ) உமி கொண்டு வருவார்கள் இருவரும் ஊதி.. ஊதி சாப்பிடலாம்.

aren
24-04-2010, 04:05 AM
நம் மக்கள் அனைவரும் பங்கு மார்கெட்டில் பலர் முதலீடு செய்து பணம் பார்ப்பதைப் பார்த்திருக்கிறோம், ஆனால் அதை எப்படி செய்வது அவ்வளவு தொகை நம்மிடம் எங்கே இருக்கிறது என்று நினைத்து பலர் அந்தப் பக்கம் போக ஆசையிருந்தும் அந்தப்பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்தார்கள்.

மியூட்சுவல் ஃபண்ட் என்பது, நம்மால் முடிந்த தொகையை மாதாமாதம் அந்த ஃபண்டில் செலுத்தினால், அவர்கள் நம்மைப் போல பலரிடமிருந்து வந்த தொகையை வைத்து பங்கு மார்கெட்டில் முதலீடு செய்வார்கள். அப்படி முதலீடு செய்வதில் ஒரு சில சதவிகதம் அவர்கள் வேலை செய்வதற்காக எடுத்துக்கொள்வார்கள். அந்த முதலீட்டிலிருந்து வருவாய் வரும் அனைத்தும் அதில் மூதலீடு செய்தவர்களுக்கு வந்து சேரும்.

இந்த மியூட்சுவல் ஃபண்டில் பல பிரிவுகள் உள்ளன. சிலர் ரிஸ்கான பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டில் பணத்தைப் போடுவார்கள், ஒரு சிலர் ப்ளூ சிப்ஸ் எனப்படும் நல்ல கம்பெனிகளில் முதலீடு செய்யும் ஃபண்டில் பணத்தைப் போடுவார்கள், ஒரு சிலர் இண்டெக்ஸ் ஃபண்டு எனப்படும் ஃபண்டில் முதலீடு செய்வார்கள். முதலில் முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் பின்னர் நீங்களே பல விஷயங்களை அநாயசமாக பேசமுடியும் அளவிற்கு உங்களுக்கே விஷயங்கள் தெரிந்துவிடும். அதற்கு என் வாழ்த்துக்கள்.

selvamurali
28-05-2010, 06:39 AM
பரஸ்பர நிதி என்பது
பங்கு சந்தையில் நாம் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதிலாக குழுவாக இணைந்து முதலீடு செய்வது எனக்கொள்ளலாம்.
எப்படியென்றால் இன்போசிஸ் பங்கு 2000 ருபாய் விற்கிறது என்றால் திடீரென ஒரு பங்குக்கு 100 ருபாய் விலை குறைந்தால் ஒரு பங்கிற்கு 100 ருபாய் நஷ்டம் ஆக நீங்கள் 10 பங்குகள் வாங்கியிருந்தால் 1000 ருபாய் நஷ்டம்.
ஆனால் இதுவே ஒரு 10 பேர் சேர்ந்து 10 பங்குகள் வாங்கினால் ஆளுக்கு 100 ருபாய் நஷ்டம். ரிஸ்க்கு மிக மிக குறைவு.

ஆனால் இதில் உள்ள இன்னொரு பெரிய விஷயம் எப்போதெல்லாம் பங்கு விலை குறைகிறதோ இவர்கள் அதிக அளவில் பங்குகளில முதலீடு செய்வார்கள் அப்படி செய்வதால் பங்கு சந்தை வீழ்ச்சியிலிருந்து மீளும்.
ஏனெனில் இந்தியா முதலீட்டாளர்கள் முதலீடு செ ய்து தோராயமாக ஒரு 5%தான் இருக்கும்.
ஆனால் அந்நிய நாட்டவர்கள் முதலீடு செய்வது 20%.
அவர்கள் எப்போதெல்லாம் நம் சந்தையில் நுழைவார்களோ அப்போதெல்லாம் பங்கின் விலை ஏறும்.
எப்போதெல்லாம் விற்க ஆரம்பிக்கிறார்களோ அப்போதெல்லாம் இறங்க ஆரம்பிக்கும். எனினல் பங்கு சந்தை மிக அதக அளவில் வாங்குகிறவர்களையும் விற்கிறவர்களையும் மட்டுமே கவனிக்கும். பங்கு சந்தையில் வெளிநாட்டவர்கள் விற்கிறார்கள் என்றால் நம்மாட்கள் லபோதிபோ என்று அடித்துிக்கொண்டு அவர்கள் பங்குகளை விற்க ஆரம்பித்துவிடுவார்கள்.

எனவே இந்திய முதலீட்டாளர்களும் அதி க அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்தால் வெளிநாட்டினர் வெளியேறினாலு்ம பங்கு சந்தை விழாது. வெளிநாட்டவர் பாதயென்றால் மீதி பாதி நாம் இருக்கவேண்டும். ஆனால் எப்போதுமே அவர்கள் அதிகம். அதனால் ஏற்றம் இறக்கம் அவர்களுக்கு மட்டுமே லாபம்.
இது அடியேன் கருத்து :)

rajarajacholan
28-05-2010, 03:02 PM
பல நல்ல தவகல்கள் கொடுத்தீர்கள். இன்னும் நிறைய விவரமாக சொன்னால் ந்னறாக இருக்கும். நானும் ம்யூச்சுவல் பண்ட்ல் முதலீடு செய்ய ஆர்வமா இருக்கேன்.

visa1977
11-06-2012, 03:04 AM
தயவு செய்து அவர் சொன்ன புத்தகத்தை வாங்கி படிங்க. விஷயத்த நல்லா தெரிஞ்சிக்கிங்க. அப்புறம் முதலீடு பண்ணுங்க. மாதா மாதம் SIP மூலம் ஒரு சிறு தொகையை போட்டு பாருங்க. உங்களுக்கு புரியும்.

ramaswamy83
09-01-2014, 07:03 AM
நண்பரே,

revmuthal என்ற தமிழ் பொருளாதார தளத்தில் மியூச்சுவல் பண்ட் தேர்ந்தெடுப்பது தொடர்பாக தொடர் வெளிவந்துள்ளது. இந்த இணைப்பில் சென்று பாருங்கள்.

http://www.revmuthal.com/search/label/Mutual%20Fund

நன்றி!