PDA

View Full Version : தீபாவளி ஸ்பெசல்:அத்தை பெண்கள் என்னும் அழĨ



umakarthick
05-11-2007, 05:28 AM
அத்தை பெண்கள் என்னும் அழகிகள்..........



1.
ஒவ்வொரு முறை எங்களூர் திருவிழாக்கு வரும் போதும்
வளையள்களும் ரிப்பனும் வாங்கித் தந்திருக்கிறேன்
பேசாமல் வாங்கிக் கொள்வாய்


இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக
ஒரு சில முத்தங்கள்ளையும் சில நகக்கீறல்களையும்
அன்பாய் கொடுத்தேன்
உன்னிடம் யார் இதெல்லாம் கேட்டது
என எனைத் துரத்தியடிக்கிறாய்

2.
இவனோட சேஷ்டைக்கும் அளவே இல்லாமல் போச்சு

உன் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்தட்டையும்
ஒரு ஈர முத்தமும் அனுப்பி வைத்திருக்கிறேன்
என சொன்னது தப்பாயிற்று


இப்போது பாருங்கள்
'வாழ்த்தட்டை மட்டும் தானிருக்கு
என்னவள் முத்தம் எங்கே'
என தபால்காரரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான்..!!


3.

நீ அப்போதே அப்படித்தான்

கோலி விளையாட்டிலும் கிட்டிப் புல்
ஆடும் போதும் பெண் எனக்காரணம் காட்டி
உன்னை நான் சேர்க்க மாட்டேன்

நீயோ தோழிகளுடன் ஆடும்
தாயத்திலும்,பாண்டியிலும் என்னை
விரும்பி சேர்த்துக் கொள்வாய்

நீ இப்போதும் இப்படித் தான்


4.

நாமிருவரும் ஒரே நாளில் தான் பிறந்தோமாம்
ஒரே நாளில் தான் நம்மிருவருக்கும் காதுகுத்தினார்களாம்

நாமிருவரும் ஒரே ரேங்க எடுப்போமாம்
ஒரே தட்டில் சாப்பிட்டிருக்கோமாம்
உன் என் பெற்றார்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்

நமக்கிருவருக்கும் ஒரே நாளில் தான் திருமணம்
என நாம் சொல்லித் தான் தெரிந்துக் கொண்டார்கள் அவர்கள் !!!

5.
நீ தாவணி அணிந்த அந்த முதற்நாளையும்
சேலைக் கட்டிய அந்தத் திருநாளையும்
என்னால் மறக்கவே முடியாதென்கிறாய்

எவ்வளவோ முயன்றாலும் அதே நாளில்
உன் தாவணிப் பிடித்திலுத்து கதவின்
மறைவே கொடுத்த அவசர முத்தத்தையும்

சேலைக் கட்டி வந்து என் பெற்றோர்கள்
காலில் விழுந்து என் அறைக்கு வந்து போது
என் காலிலும் விழச் சொல்லி
உன் இடுப்பில் கிள்ளி உன்னை எழுப்பியதையும்
மட்டும் நினைவில் கொண்டு வரமுடிய வில்லையென்கிறாய்
இது உனக்கே அடுக்குமா ..!!



எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தங்கவேல்
05-11-2007, 05:35 AM
உமா கார்த்திக் அருமை அருமை. பிடியுங்கள் 100 ஐ பணம்...

umakarthick
05-11-2007, 05:41 AM
என்ன இது எதுக்கு பணம்?