PDA

View Full Version : முதுகு தண்டுவட முறிவு: "பயோ சிமென்ட்' கண்ட



mgandhi
04-11-2007, 05:08 PM
முதுகு தண்டுவட முறிவு: "பயோ சிமென்ட்' கண்டுபிடிப்பு


"முதுகு தண்டுவட முறிவை சரி செய்ய, "பயோ சிமென்ட்' பயன்படுத்தலாம்; அறுவை சிகிச்சை செய்யாமல் ஊசி மூலம் திரவமாக இதை செலுத்தி, எலும்புகளைச் சேர்க்கலாம்' என்று, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள், ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

இது குறித்து, அமெரிக்க லீட்ஸ் பல்கலைக்கழக எலும்பியல் சிகிச்சை நிபுணர்கள் கூறியதாவது:உலோக தகடு பொருத்தி,"ஸ்குரூ' பயன்படுத்தி, எலும்புகளை இணைக்கப்பட்டும் வந்தன. இப்போது, சிமென்ட் பயன்படுத்தப்படுகிறது.அறுவை சிகிச்சை செய்து தான், சிமென்ட்டை பயன்படுத்தி, எலும்புகளைச் சேர்க்க வேண்டும் என்பதில்லை. பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியில் ஊசி மூலம் சிமென்டை செலுத்தி, எலும்புகளைச் சேர்த்து வைக்கலாம்.எந்த செயற்கை பொருட்களும் சேர்க்காமல், இயற்கையான சாதனங்களை கொண்டு இந்த சிமென்டை தயாரிக்கலாம்.இப்போது நடைமுறையில் உள்ள, சிமென்ட் மற்றும் உலோக தகடு பொருத்தும் சிகிச்சையை விட, இது சுலபமானது; நீண்ட காலத்துக்கு பாதுகாப்பானது.இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்."பயோ சிமென்ட்' தயாரிப்பதற்காக, அமெரிக்க இன்ஜினியரிங் மற்றும் அறிவியல் ஆய்வு கவுன்சில், பல நுறு கோடி ரூபாய் செலவில் தனி தொழிற்சாலை உருவாக்க ஏற்பாடு செய்து வருகிறது. தனியார் நிறுவனத்திடம் இந்த பொறுப்பை விட தீர்மானித்துள்ளது."மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பாதிப்புள்ள நோயாளிகளுக்கும் இந்த "பயோ சிமென்ட்' சிகிச்சையை செய்யலாம். இறுதிக் கட்ட ஆய்வை முடித்தவுடன், வர்த்தக ரீதியாக இந்த "பயோ சிமென்ட்' பயன்படுத்தப்படும்' என்றும் நிபுணர்கள் கூறினர்.