PDA

View Full Version : குடும்ப நகைச்சுவை

alaguraj
04-11-2007, 08:52 AM
என்னங்க.. பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன் நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க !

alaguraj
04-11-2007, 09:20 AM
மாமியார்: சாப்பாட்டுக்கு முன்பு, சாமி கும்பிட்டுற பழக்கம் இருக்கா?

மருமகள்: இல்லை. உங்க பையன் நன்றாக சமையல் செய்றார்..

alaguraj
04-11-2007, 10:22 AM
என் மனைவி என் கூட கோபம்னா சமைக்கமாட்டா...

என் மனைவி என் கூட கோபம்னா சமைப்பா...
_________________________

மனைவி: என்னங்க தீபாவளிக்கு நான் செஞ்சு வச்ச சுவீட் எல்லாம் யாரோ திருடிங்க...

கணவன்: சத்தம் போடாம தூங்கு, சாப்பிட்டபிறகு எங்கயாவது செத்துக்கிடப்பான்...
___________________

கல்யாணத்துக்கு முன்னாலே போய்களை அடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினீங்களே இப்போ என்ன புத்தகம் எழுதுறீங்க..

பேய்களுடன் வாழ்வது எப்படிங்கிற புத்தகம்...
_________________________

டேய் உங்க்ப்பா என்னடா பண்றார்.

ஹொம் ஒர்க் பண்றார் அங்கிள்

என்னடா உன்னோட ஹொம் ஒர்க்கொல்லாம் அவர்தான் பண்றாரா?

இல்ல அங்கிள், அப்பா சமையல் பண்ணிக்கிட்டு இருக்கார்
_________________________________

என் பொண்டாட்டி திட்டும்போது, அவளை ஓங்கி
அறையலாமானு தோணும்.

ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?

அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க
கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!
_____________________________
டாக்டர்:
குழந்தை மணிக்கணக்கா அழுதிட்டிருந்திருக்கு..
இப்ப கொண்டு வந்திருக்கீங்களே?

அம்மா: அதுவும் என்னை மாதிரியே டி.வி. சீரியல் பார்த்து
அழுதிட்டிருக்காக்கும்னு இருந்துட்டேன்.. டாக்டர்!
_________________________

என் மாமியாரை எல்லா டாக்டர்கிட்டேயும் காட்டியாச்சு.
ஒரு பிரயோஜனமும் இல்லை

அப்படியா?

ஆமா, எப்படியாவது பிழைக்க வெச்சுடறாங்க!
_________________

அன்புரசிகன்
04-11-2007, 10:29 AM
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பர்.. இது என்ன கழகமோ????

(வேறெங்காவது இருந்த எடுத்திருந்தால் நன்றி சொல்ல மறவாதீர்கள்)

alaguraj
04-11-2007, 10:33 AM
மாப்பிள்ளை ஏன் மிரண்டுபோய் இருக்காரு?

பொண்ணைப் பாடச் சொன்னா
சின்ன வீடா வரட்டுமா,
பெரிய வீடா வரட்டுமானு பாடிச்சாம்!

_____________________

உனக்கா இளகின மனசுனு சொல்றே?

ஆமா... என் புருஷனை அடிக்கும்போது
எக்குத்தப்பா அவருக்கு ரத்த காயம் ஆயிடுச்சுன்னா
எனக்கு கண்ணு கலங்கிடும்!

நன்றி: மதுரை மன மகிழ்மன்ற மலர்

alaguraj
04-11-2007, 10:36 AM
காயா, பழமானு மருமகளை ஏன் கேட்டே...
முழுகாம இருக்காளா?

பேசாம இருக்கா!

யவனிகா
04-11-2007, 11:05 AM
அடடடா...நீங்க அழகு ராசாவா? அசத்தல் ராசாவா? சிரிப்பா சிரிக்குது உங்களின் சிரிப்புகள்.

அன்புரசிகன்
04-11-2007, 11:08 AM
அடடடா...நீங்க அழகு ராசாவா? அசத்தல் ராசாவா? சிரிப்பா சிரிக்குது உங்களின் சிரிப்புகள்.

உங்க வீட்டுல நடக்குறத தானே அவர் இங்கு பதியுறாரு..... :D

lolluvathiyar
04-11-2007, 11:32 AM
அனைத்து ஜோக்களுமே சூப்பர் பாராட்டுகள்.

இப்போ என்ன புத்தகம் எழுதுறீங்க.. பேய்களுடன் வாழ்வது எப்படிங்கிற புத்தகம்...

அதுவும் இந்த ஜோக் என்னை மிகவும் சிரிக்க வைத்து விட்டது. உடனே என் மனைவிக்கு போன் பன்னி சொல்லிவிட்டேன். இன்னும் வீட்டுக்கு போகல. நாளைக்கு ரெஸ்பான்ஸ் எழுதரேன்

அன்புரசிகன்
04-11-2007, 11:40 AM
அதுவும் இந்த ஜோக் என்னை மிகவும் சிரிக்க வைத்து விட்டது. உடனே என் மனைவிக்கு போன் பன்னி சொல்லிவிட்டேன். இன்னும் வீட்டுக்கு போகல. நாளைக்கு ரெஸ்பான்ஸ் எழுதரேன்

அதுக்கு முதல்ல உங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு கையாவது மன்றத்தில் பதிக்கக்கூடிய நிலையில் இருக்கவேண்டுமே....

alaguraj
04-11-2007, 11:59 AM
உடனே என் மனைவிக்கு போன் பன்னி சொல்லிவிட்டேன். இன்னும் வீட்டுக்கு போகல.

என்ன வாத்தியாரே இப்படி ஒரு காரியத்த பண்ணலாமா...போஸ்ட் போட்ட நானே வீட்டுக்கு சொல்லல.....
அடிவாங்காம எப்படியாய்யா தப்பிக்க போறீர்?...தேவையா இந்த விபரீத விளையாட்டு....

நாளைக்கு வந்து விளக்கமா உங்க அனுபவத்த எழுதுங்க....(திரும்ப வந்தா...)

alaguraj
04-11-2007, 12:00 PM
அதுக்கு முதல்ல உங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு கையாவது மன்றத்தில் பதிக்கக்கூடிய நிலையில் இருக்கவேண்டுமே....

அனுபவசாலி சொல்லும்போது கோட்டுங்குங்கய்யா.....

நேசம்
04-11-2007, 12:06 PM
நல்ல குடும்ப நகைச்சுவை.அன்பு மற்றும் வாத்தியார் அனுபவங்களை பிரதிபலிப்பதாக இருப்பது என்று அறியும் போது கூடுதல் சிறப்பாக இருக்கிறாது

அன்புரசிகன்
04-11-2007, 12:22 PM
அனுபவசாலி சொல்லும்போது கோட்டுங்குங்கய்யா.....

நல்ல குடும்ப நகைச்சுவை.அன்பு மற்றும் வாத்தியார் அனுபவங்களை பிரதிபலிப்பதாக இருப்பது என்று அறியும் போது கூடுதல் சிறப்பாக இருக்கிறாது

இது ரொம்ப ஓவர். அப்புறமா எனக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாய்ங்க... எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லீங்கோ....
நான் சொன்னா என் வருங்கால மனைவி... நில்லுன்னா நிப்பா... இருன்ன இருப்பா.. சமை என்றால் சமைப்பா... அவளை அன்பால் கட்டிப்போட்டுவிடுவேன்.... :D :D :D

மனோஜ்
04-11-2007, 03:28 PM
அருமையான குடுப்பசோக்கு ஆனா என்ன பன்றது இதஎல்லா படிச்சு தான் பாக்க வேண்டி இருக்கு வாழ்கையில நடக்க இன்னு 2 வருடம் ஆகும் நன்றி அழகுராஜ்

நேசம்
04-11-2007, 06:56 PM
இது ரொம்ப ஓவர். அப்புறமா எனக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாய்ங்க... எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லீங்கோ....
நான் சொன்னா என் வருங்கால மனைவி... நில்லுன்னா நிப்பா... இருன்ன இருப்பா.. சமை என்றால் சமைப்பா... அவளை அன்பால் கட்டிப்போட்டுவிடுவேன்.... :D :D :D

உங்கள் பின்னூட்டத்தில் எழுத்து பிழை ஏற்பட்டது. சரி செய்து கொள்ளுங்கள்.
சரியான வரி

"நில்லுன்னா நிப்பேன்.... இருன்ன இருப்பேன்... சமை என்றால் சமைப்பேன்"

சரிதானே அன்பு

அன்புரசிகன்
04-11-2007, 07:33 PM
உங்கள் பின்னூட்டத்தில் எழுத்து பிழை ஏற்பட்டது. சரி செய்து கொள்ளுங்கள்.
சரியான வரி
"நில்லுன்னா நிப்பேன்.... இருன்ன இருப்பேன்... சமை என்றால் சமைப்பேன்"
சரிதானே அன்பு

பிழை (X)

நேசம்
05-11-2007, 03:47 AM
பிழை (X)

தவறை ஒத்துக்கொள்ளுவதற்கு மனம் வேண்டும் தான். அதுக்கு இப்படியா....!!!

alaguraj
05-11-2007, 05:59 AM
ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய் என்று ஒரு பழமொழி....

அன்பு, மனோஜ்..உங்கள் திரு-மணத்திற்கு எனது வாழ்த்துக்கள்...

திருமணம் ஒரு தண்ணீரில்லாத கிணறு, அதில் படி கூட கிடையாது என்று தெரிந்தும் எல்லோரும் விழ முயற்ச்சிக்கின்றனர், விழுந்தவர்கள் வெளியேற முயற்ச்சிக்கிறனர்.....

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.....-இது லொள்ளுவாத்தியாரின் மனச்சாட்சி...

அன்புரசிகன்
05-11-2007, 06:31 AM
திருமணம் ஒரு தண்ணீரில்லாத கிணறு, அதில் படி கூட கிடையாது என்று தெரிந்தும் எல்லோரும் விழ முயற்ச்சிக்கின்றனர், விழுந்தவர்கள் வெளியேற முயற்ச்சிக்கிறனர்.....

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.....-இது லொள்ளுவாத்தியாரின் மனச்சாட்சி...

யாழில் உடுவில் (எனது ஊர்) பிரதேச தண்ணீரில்லாத கிணற்றில் விழுந்தால் கை கால் முறிவுடன் தப்பிக்கலாம்... ஆனால் அளவெட்டி இணுவில் போன்ற பிரதேசத்தில் தண்ணீரில்லாத கிணற்றில் விழுந்தால் கைகால் முறியமுன்னரே உயிர் போய்விடும்... அவ்வளவு ஆளம்... (இவை யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்....)

ஆனால் ஒரு விடையம். யாழ் கிணறுகளில் கனவிலும் நீரில்லாமல் காண முடியாது. எத்தனையோ கிணறுகள் கழுவும் போது தண்ணீர் இறைக்கும் உசிலி மோட்டார் இயற்திரம் பாவித்தும் நீர் வற்றாமல் போனதுண்டு....

அடி காணமுடியாத நீர் கொண்ட கிணறும் யாழ்ப்பாணத்தில் நிலாவரையில் தான் உண்டு...

அழகு... உங்கள் மனச்சாட்சி கூறுவது என்னவோ???

அக்னி
12-11-2007, 12:58 AM
சில முன்னரே வாசித்த துணுக்குகளாய் இருந்தபோதிலும்,
திகட்டவில்லை...
தொடர்ந்தும் பகிர்ந்து கொள்ளுங்கள் அழகுராஜ் அவர்களே...

மலர்
13-11-2007, 02:52 AM
உனக்கா இளகின மனசுனு சொல்றே?
ஆமா... என் புருஷனை அடிக்கும்போது
எக்குத்தப்பா அவருக்கு ரத்த காயம் ஆயிடுச்சுன்னா
எனக்கு கண்ணு கலங்கிடும்!

அடிக்கிற கைதான் அணைக்கும்....

அப்படித்தானே அழகு ராஜ்.....

தொடர்ந்து கொடுங்கள் அழகு .....

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....

மலர்
13-11-2007, 02:57 AM
இது ரொம்ப ஓவர். அப்புறமா எனக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாய்ங்க... எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லீங்கோ....:D :D :D

இது விளம்பரம் மாதிரில்ல தெரியுது......:D:D