PDA

View Full Version : புலிகள் ஆதரவு நிலை: கருணாநிதிக்கு ஜெ. கண்டmgandhi
04-11-2007, 07:38 AM
புலிகள் ஆதரவு நிலை: கருணாநிதிக்கு ஜெ. கண்டனம்

தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து முதலமைச்சர் கருணாநிதி கவிதை எழுதியதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலை புலிகள் இயக்கத்துடன் கருணாநிதிக்கு உள்ள தொடர்பை இது வெளிப்படுத்தி உள்ளதாகக் கூறியுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு உதவி அளித்து வருவதாக, தான் கூறி வந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும், இந்திய அரசியல் சாசனப்படி பதவி ஏற்றுக் கொண்ட ஒரு முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அன்புரசிகன்
04-11-2007, 08:00 AM
இது எதிர்பார்த்த ஒன்றுதான். இன்று யாரை சொல்லி தனது அரசியலை நடாத்துகிறாரோ அவர் தான் விடுதலைப்புலிகளை வளர்த்துவிட்டது என்ற உண்மையை அனைத்து ஜெயலலிதாவின் தொண்டர்களும் உணர்வார்களோ தெரியாது... தெரிந்துகொண்டால் தான் அரசியல்வாதிகளின் திருகுதாளங்கள் பிடிபட்டுவிடுமே....

நுரையீரல்
04-11-2007, 08:35 AM
அவரு கூட வெள்ளைத் தொப்பியும், கருப்பு கண்ணாடியும் போட்டிருப்பார் தானே. ஐயோ ஸாரி பெயர் நினைவில் வரவில்லை அன்புரசிகரே.........

எங்க அம்மா இப்ப புரட்சித் தலைவியாக்கும்.... புரட்சி செய்த தலைவர் பெயரை வைத்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இல்லை.

ஆமா....... தலைவனும், தலைவியும் செய்த புரட்சி என்னவோ....... இதுக்கும் infraction குடுக்காதீங்க அன்புரசிகன். (இதெப்படியிருக்கு... குடுக்காதீங்கனு சொன்னா நீங்க குடுக்க முடியாதே....)

அன்புரசிகன்
04-11-2007, 08:46 AM
இது எனக்கு தேவையற்ற ஒன்றுதான்...

எனக்கு அவர்கள் என்ன புரட்சி செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் புரட்சி தலைவரை சொல்லி அரசியல் நடக்கிறது என்பதை நான் தொலைக்காட்சிகளில் பார்த்த தேர்தல் பரப்புரை செய்திகள் மற்றும் நான் சென்னை வந்தபோது பார்த்த சுவரொட்டிகளையும் வைத்து புரிந்துகொண்டேன்...

அரசியல் வாதிகளின் சுவரொட்டிகளால் பிரதேசம் குப்பையாக மாறுகிறது போன்ற பிரதிகூலங்கள் இருந்தாலும் சிலருக்கு அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்னற....

1. சுவரொட்டி தயாரிப்பாளர்கள்
2. சுவரில் வர்ணம் தீட்டுவோர்
3 சுவரொட்டி ஒட்டுவோர்...
4. ஒட்டும் பசை விற்பனையாளர்கள்...

வீட்டிற்கொரு கழுதை வளர்த்தால் கழுதை தானாக வளர்ந்துவிடும்.... :D

lolluvathiyar
04-11-2007, 08:53 AM
இதில் கன்டனம் செய்ய என்ன இருகிறது. கருனாநதி விடுதலை புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லையே. ஒரு தடை செய்ய பட்ட இயக்கத்தின் உருப்பினர் இறப்பிற்க்கு அஞ்சலி செலுத்தினால் அது தவறில்லையே. அதுவும் தமிழ் செல்வன் சுமூக பேச்சுவார்த்தைக்கு உதவி செய்தவராச்சே.


அவர் தான் விடுதலைப்புலிகளை வளர்த்துவிட்டது .

ஒரு காலத்தில் ஆதரவு தந்தால் அதற்காக சாகுவரை ஆதரவு தந்தாக எடுத்து கொள்ள கூடாது. அன்றைய சூல்நிலை வேறு இன்றைய சூல்நிலை வேறு. இந்திரா காந்தி ராஜிவ் கூட ஆதரவு தந்தவர்கள்தான்.

ஓவியா
04-11-2007, 08:56 AM
கலைஞர் கருணாநிதி ஒரு சிறந்த கவியாசிரியர், அவர் கவிதை எழுதுவதில் என்ன குற்றம்??? எழுதுவது அவர் சுதந்திரமல்லவா???

அன்புரசிகன்
04-11-2007, 08:57 AM
ஆரம்பத்திலிருந்து சாகும்வரை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கொடுத்தவர் தான் புரட்சித்தலைவர். ஆனால் அதற்கு என்னிடம் எந்தவித ஆதாரமும் இல்லை.

வசீகரன்
04-11-2007, 09:13 AM
தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து முதலமைச்சர் கருணாநிதி கவிதை எழுதியதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

நன்றாகத்தான் இருக்கிறது... ஒரு லட்சிய போராளியின் மறைவீர்க்கு
நமது தூக்கத்தை கவிதை அஞ்சலியாக தெரிவித்தாள் அது கண்டனத்திர்க்கு உரியதா..?
இழப்பும் தூக்கமும்..... இன்று அவரை இழந்து தவிப்பவர்களுக்கள்ளவா தெரியும்....!

என்ன பாவம் செய்தார்கள் நமது சகோதரர்கள்....! இன்று நாம் அவர்களின் தூக்கத்தை
பரிமாறாக்கூட இங்கே கண்டனத்திற்கு ஆளாக வேண்டி
இருக்கிறது

வசீகரன்

விகடன்
04-11-2007, 11:09 AM
இதிலிருக்கும் பெரியவர்களைத் தெரிகிறதா அன்பர்களே?


http://www.tamilmantram.com/photogal/images/2522/medium/1_MGR_and_Paraba.jpg

தமிழ்சுவடி
04-11-2007, 02:24 PM
உங்களுடன் இருக்கும் கபட வேடதாரி கருந்துண்டு, வார்த்தைபுலியை நீங்கள் தானே பொடாவில் போட்டீர்கள். இன்று அவர் உங்களது கட்சியின் விளக்க வுரை ஆற்றுகிறாரே அவரை பற்றி ஏதும் உங்கள் கருத்தில்லையா? ஜெ.

ஓவியன்
04-11-2007, 03:12 PM
ம்ஹூம் என்ன சொல்ல...??

சாதாரணமாக நம் எதிரி இறந்தால் கூட மரியாதை செலுத்துவது தான் வழமை, உலகத்திலே கல்யாண வீடென்றாலும் பகையாளி வீடு மிதிக்க மாட்டார்கள், சாவு வீட்டில் மட்டுமே பகை மறந்து உதவ வருவார்கள். அதுதான் மனித பண்பும் கூட....

நிலமை அப்படியிருக்க கொள்கைக்காக உயிர் நீத்த ஒருவரது மறைவிலும் "அரசியல்" நினைக்கவே மனது பாரமாக இருக்கிறது நண்பர்களே........

இலக்கியன்
04-11-2007, 03:31 PM
ஆரம்பத்திலிருந்து சாகும்வரை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கொடுத்தவர் தான் புரட்சித்தலைவர். ஆனால் அதற்கு என்னிடம் எந்தவித ஆதாரமும் இல்லை.

அதற்கான ஆதாரம் இங்கு உள்ளது தேசியத்தலைவரே மறைந்த முதல்வர் பற்றிய கருத்தை இங்கு சொல்கின்றார்
ஒலி கொஞ்சம் தெளிவு குறைவாக உள்ளது மன்னிக்கவும்http://www.youtube.com/watch?v=NBmgPVokPUM

இலக்கியன்
04-11-2007, 03:37 PM
ஒரு காலத்தில் ஆதரவு தந்தால் அதற்காக சாகுவரை ஆதரவு தந்தாக எடுத்து கொள்ள கூடாது. அன்றைய சூல்நிலை வேறு இன்றைய சூல்நிலை வேறு. இந்திரா காந்தி ராஜிவ் கூட ஆதரவு தந்தவர்கள்தான்.

இந்திரா காந்தி அம்மையார் ஈழத்தமிழ்ர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பது சரியானது. அவருக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் இன்றும் ஒரு ந்ன் மதிப்பு உன்டு. ராஜீவ் காந்தி அவர்களுடைய கொள்கை சிங்களவர்களுக்கு சாதகவே அமைந்தது என்பது கண்கூடு

mgandhi
04-11-2007, 04:25 PM
கலைஞரின் பதில்

முதல்-அமைச்சர் கரு ணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வருமாறு:-

கேள்வி:- தமிழ்ச்செல்வன் மறைவுக்கு நீங்கள் மனிதாபிமானத்துடன் இரங்கல் தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறாரே?

பதில்:- பாவம், ஆட்சியில் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் அல்லற்படுகிறார். எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் மறைந்தாலே இரங்கல் தெரிவிப்பது மனித நேயப் பண்பாடு என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தெரியும்.

அந்த அடிப்படையில்தான் அ.தி.மு.க.விலே இருந்த நாவலர் மறைந்த போது கூட, நான் தேடிச்சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன். இலங்கையிலே கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் நான் இரங்கல் தெரிவித்தேன்.

ஏன், ஜெயலலிதாவுடன் இன்றளவும் தோழமை கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஜெயலலிதா இல்லத்திற்குச் சென்று வந்த ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழ்ச்செல்வன் மறைவுக்காக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து கண்டிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தால் அதற்கு ஜெயலலிதா ஒப்புதல்.

அதே தமிழ்ச்செல்வன் மறைவுக்காக நான் அறிக்கை விடுத்தால் என்னுடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமா? எப்படியாவது ஆட்சி கவிழ்க்கப்படாதா? தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து சுரண்ட முடியாதா என்று ஜெயலலிதா, தவியாய் தவிக்கிறார். என்ன செய்வது? ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் மக்கள் ஆதரவு வேண்டுமே?


இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.