PDA

View Full Version : சூதாட்டத்தில் மனைவி இழப்பு பீகாரில் விசி



mgandhi
04-11-2007, 03:19 AM
சூதாட்டத்தில் மனைவி இழப்பு பீகாரில் விசித்திரம்

மகாபாரதத்தில் பாண்டவர்கள் போல, இப்போதும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த சாக்செட் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா சங்கர் சவுத்ரி. அதே கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் சிங் என்பவருடன் சூதாட்டம் ஆடினார்.விளையாட்டில், பணம் எல்லாம் போனதும், வீட்டில் இருந்த பொருட்களை இழந்தார்; அடுத்து, நிலத்தை இழந்தார். கடைசியில், விளையாட்டு வெறியில் மனைவியை "பகடையாக' வைத்து ஆடினார். மனைவியையும் இழந்தார்."இப்போதே உன் மனைவியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று, வீட்டில் பழியாய் கிடந்தார், சூதாட்டத்தில் வெற்றி பெற்ற மனோஜ் சிங். நல்லவேளை, அன்றைய தினம், துர்கா பூஜைக்காக, பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்தார் உமா சங்கரின் மனைவி சுனான்யா தேவி. மனைவியை இழப்பதில் உமா சங்கருக்கு விருப்பமில்லை. அதற்கு ஈடாக பணத்தை தந்து விடுவதாக கூறிப் பார்த்தார். ஆனால், மனோஜ் விடுவதாக இல்லை. விவகாரம், கிராம பஞ்சாயத்துக்கு போனது."இருவரும் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும். மனோஜ் சிங்குக்கு உமா சங்கர் ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டும்' என்று பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டது.பீகார் மாநில கிராமங்களில் இப்படி நடப்பது சகஜம் தான் போலும். இன்னொரு கிராமத்தில், திருமணமான பெண், விளையாட்டாக தன்னையே "பகடை'யாக வைத்து, சூதாடினார். சூதாட்டத்தில் அவருக்கு எதிராக விளையாடிய கிராமத்து இளைஞர் வெற்றி பெற்றார். உடனே, அந்த பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.இரண்டு நாளில், பஞ்சாயத்தார் போய், அந்த பெண்ணை மீட்டு, அவரின் கணவனிடம் ஒப்படைத்தனர்.
நன்றி தினமலர்

அன்புரசிகன்
04-11-2007, 03:49 AM
இது வேற கண்றாவி நடக்கிறதா???

நேசம்
04-11-2007, 03:54 AM
ஒரு பெண் தன்னையெ வைத்து, அட கலிகாலம் முத்தி விட்டது என்று தான் நினைக்க வேண்டும்.

தங்கவேல்
04-11-2007, 04:38 AM
பீகாரில் யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் ? அட அட என்ன ஒரு அற்புதமான ஆட்சி அது ? மீண்டும் பாண்டவர்கள் காலம். அற்புதம். எல்லாம் அவனின் விருப்பம்..விதி...

lolluvathiyar
04-11-2007, 05:20 AM
பிகாரில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அது ஒரு வித்தியாசமான மாநிலம். அங்குள்ள சட்டம் திட்டங்கள் புதிராக இருக்கும். ஆனாலும் பட்டினி சாவு இல்லாத மாநிலம் என்று நினைகிறேன்.

அமரன்
04-11-2007, 06:24 AM
கொடுமையான செய்தி. இப்படியானோரை கட்டிவைத்து அடிக்கனும்.

அன்புரசிகன்
04-11-2007, 06:29 AM
கொடுமையான செய்தி. இப்படியானோரை கட்டிவைத்து அடிக்கனும்.

அமரா... நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள். கட்டிவைத்து அடித்தால் திருந்தும் காலம் அல்ல இது...

போட்டுத்தள்ளிவிடவேண்டியதுதான். விசக்கிருமிகளை வைத்திருந்தால் அது மற்றவர்களுக்கும் வருத்தங்களைப்பரப்பும்.

விகடன்
04-11-2007, 06:50 AM
மகாபாரதக் கதையின் தாற்பரியத்தை விளங்கியவந்தான் தன் மனைவியை சூதிலவைக்கமாட்ட்டான்.

அதே தர்மரின் கதாபாத்திரத்தில் மூழ்கி தன்னை மறந்தவன் அவர் செய்தவற்றை தானும் செய்யத்தானே எத்தனிப்பான். இதற்கு ஒப்பாக இன்னொன்றை சொல்வதாயின்,
உலக அழகி போடும் சவர்க்காரம், கவர்ச்சி நடிகைகள் போடும் சவர்க்காரம், பவுடர் என்றெல்லாம் பார்த்து அதே போல் தாமும் பாவிக்கும் பெண்களும் இப்போதும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆகையால் ஒரு கதையினை அனைவரும் ஒரேமாதிரியாக விளங்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை சொல்லியாக வேண்டும்...
ஒரு ஆசிரியை தனது மாணவர்களுக்கு மதுபானத்தின் தீங்கை சொல்வதற்காக ஒரு குவளையில் மதுசாரம் எடுத்து அதனுள் ஒரு புழுவை போட்டுவிட்டு அது துடி துடித்து மரணிப்பதை சிறார்களிற்க்கு காட்டினார். அது இறந்த பின்னர் " இதிலிருந்து என்ன பிள்ளைகளே விளங்கிக் கொள்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு பிள்ளைகள் பலர் "மதுசாரம் உயிரை கொள்ளும்" என்று சொன்னாலும் ஓரு சிலர் "மதுசாரம் குடித்தால் வயிற்றிலிருக்கும் பூச்சி புழு எல்லாம் செத்திடும்" என்றும் சொன்னார்கள்.

ஆகவே ஒவ்வொரு விடயத்தையும் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை.

அதே போலத்தான் சூதும். அந்த வாலிபன் யுதிஷ்டரின் வழியை அட்சரம் பிசகாமல் (பன்னாடை போல தீயனவற்றை மட்டும்) பின்பற்றுபவனாக இருக்கலாம்.