PDA

View Full Version : கருணா கைது



Mano.G.
04-11-2007, 02:33 AM
தமிழீல புலிகள் குழுவிலிருந்து பிரிந்து
அவர்களுக்கு எதிராக செயல் பட்ட
கருணா லண்டனில் கைது செய்யப்பட்டதாக
செய்தி.

இந்த சுட்டியை தட்டி பாருங்கள்

http://uk.reuters.com/article/worldNews/idUKKIM35390520071103?feedType=RSS&feedName=worldNews


http://www.iht.com/articles/ap/2007/11/03/europe/EU-GEN-Britain-Sri-Lanka-Rebel.php





மனோ.ஜி

ராஜா
04-11-2007, 03:16 AM
இனவாத சிங்கள அரசால் வடிவமைக்கப்பட்ட திசைதிருப்பும் செயலாக இது இருக்கலாம்.

புலிகள் அமைப்புக்குள் ஊடுருவியிருக்கும் புல்லுருவிகள் மீது விழப்போகும் கவனத்தை திசைதிருப்ப, துரோகி கருணாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வதுபோல் நாடகம் ஆடி, 5 மாவீரர்களின் மறைவுக்கு கருணா காரணமாக இருக்கலாமோ என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.

அமரன்
04-11-2007, 06:15 AM
கைது வேளையில் கையில் பல போலி பாஸ்போட்டுகள் வைத்திருந்தார் என்பது அவர்மீதுள்ள குற்றச்சாடு. ஸ்ரீலங்கா அரசாங்கமே அவரை இலண்டனுக்கு அனுபிவைத்ததாக செய்திகள் அடிபட்டன. இப்போ போலிகடவுச்சீட்டுடன் அவர். வேறு யாரையாவது இலண்டன் கொண்டுவரும் சட்டவிரோத முகவராக செயல்பட்டாரா? அல்லது அடிபட்ட செய்திகளைப் பொய்யாகி அவரே சட்டவிரோதமாத்தான் நுழைந்தாரா? தெளிவுபடுத்துமா இங்கிலாந்து அரசு?