PDA

View Full Version : மௌன அஞ்சலி!!



தென்னவன்
03-11-2007, 02:22 PM
நான் இறந்ததற்கு அவள்
மௌன அஞ்சலி செலுத்தினாள்..

ஆனால் அவளுக்கு தெரியாது
நான் இறந்தது அவளுடைய
மௌனத்தினாள் தான் என்று!!!

அமரன்
03-11-2007, 04:10 PM
மௌனம் பேசியது....அவள்
மௌன அஞ்சலி வாயிலாக
மௌனத்தில் இடுக்குகளில்
மௌனமாக ஒரு மொழி..!

புரிந்தவன் ஞானி
புரியாதவன் மௌனி..!

வீரர்களுக்கான மௌன அஞ்சலிக்கே
தாழும் என் தலை..
மற்றப்படி
புன்னகையுடனான தட்டல் மட்டுமே...!

பூமகள்
03-11-2007, 06:19 PM
மௌனத்தினால்
மரிக்கலாமோ?
முட்டிப் போராடி
பேச வைத்திருந்தால்
வீர மரணமாயிருக்குமே..!!

மௌனத்துக்கான ஒப்புதல்
முத்தாய்ப்பான கருவில்
மனம் ஒப்பவில்லையே..!!

வாழ்த்துகள் தென்னவன்..!! இரண்டாவது குறுங்கவியும் அருமை.
இன்னும் கொடுங்கள்..!!

ஓவியன்
03-11-2007, 06:20 PM
மெளனம் வார்த்தைகளிலும்
கடினமானது, காத்திரமானது
ஏன் மர்மமானதும் கூட
தக்க விதத்தில் பயன்படுத்தின்
மெளனத்தினால் எதனையும்
சாதிக்கலாம்.....!!

பல காதல்களின்
வெற்றிக்கும், தோல்விக்கும்
இந்த மெளனமே
காரணமாகிவிடுகிறது.....!!

நல்ல கவிதை, நச் ரகம் தென்னவன் தொடர்ந்து இவ்வாறான பல படைப்புக்களைத் தாருங்கள்.

சாம்பவி
03-11-2007, 07:42 PM
மௌனத்தையும் தப்பு தப்பாய்
மொழி பெயர்த்ததின் விளைவு தான் இந்த
மௌனாஞ்சலியோ.... !



[COLOR=DarkRed]மௌனத்தினால்
மறிக்கலாமோ?
முட்டிப் போராடி
பேச வைத்திருந்தால்
வீர மரணமாயிருக்குமே..!!


மரித்தலையும்
மறித்து...
மரிக்க வைப்பது
தகுமோ தாயே... !

தென்னவன்
04-11-2007, 06:30 PM
புரிந்தவன் ஞானி
புரியாதவன் மௌனி..!

காதலில் புரிந்தவர்களும் புரியாதவர்களும் அனைவருமே மௌனி தான் என்னைப்பொருத்தவரை...
என் கவிக்கு கவியால் விமர்சித்தமைக்கு நன்றிகள் அமரன்...

தென்னவன்
04-11-2007, 06:32 PM
நன்றிகள் பூமகளுக்கும் ஓவியன் மற்றும் சாம்பவி அவர்களுக்கும்..


மரித்தலையும்
மறித்து...
மரிக்க வைப்பது
தகுமோ தாயே... !

நச் சாம்பவி!!!