PDA

View Full Version : அவசர உதவி தேவை



தங்கவேல்
03-11-2007, 01:04 PM
நான் வின்டோஸ் எக்ஸ் பி பயன் படுத்துகிறேன். காலையில் இரு யூசர் அக்கவுன்ட் உருவாக்கி வைத்தேன். பவர் கட் ஆனதால் சிஸ்டம் ஆப் ஆகிவிட்டது. மீண்டும் இயக்கி பார்த்தால் அட்மினிஸ்ட்ரேட்டர் மறைந்து விட்டது. மற்ற யூசர் அக்கவுன்ட் வேலை செய்கின்றது. எனக்கு அட்மினிஸ்ட்ரேட்டரை பயன் படுத்த வேண்டும். அதை எப்படி செய்வது ?

praveen
03-11-2007, 02:41 PM
அட்மினிஸ்ட்ரேட்டர் உள்ளே மறைந்து இருக்கிறார். லாகின் பிராம்ப்ட் வந்து இரண்டு யூசர் பெயர் கேட்டு இருக்கும் போது ctrl + Alt + Del மூன்றையும் ஒரு சேர அழுத்துங்கள்.

பின் வரும் விண்டோவில் யூசர் நேமில் Administrator என்று கொடுத்து அதற்குரிய பாஸ்வேர்டு (சாப்ட்வேர் பதியும் போது கொடுத்தது, அல்லது பின்னர் மாற்றியது) கொடுத்து உள் செல்லுங்கள்.

தங்கவேல்
04-11-2007, 01:22 AM
பிரதீப் நன்றி... நேற்றிலிருந்து சரியான டென்ஷன். நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர்களுக்கும் தெரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. உடனடியாக தமிழ் மன்றம் நினைவுக்கு வர, இப்போது மகிழ்ச்சிக்கடலில் இருக்கின்றேன். அதனால் உங்களுக்கு 300 ஐ பணம் கொடுத்து இருக்கின்றேன். தேங்ஸ்பா.

தங்கவேல்
04-11-2007, 01:08 AM
பிரதீப் நீங்கள் சொன்ன மாதிரி செய்து அட்மினிஸ்ட்ரேட்டரை பிடித்து விட்டேன். கணிணியை ஆப் செய்து விட்டு திரும்பவும் வந்தால் அட்மினிஸ்ட்ரேட்டரை காணவில்லை. திரும்பவும் கன்ட்ரோல் கீயை அழுத்திய பிறகுதான் வருகிறது. அதை எப்படி ஆக்டிவாக கொண்டு வருவது ? உதவுவீர்களா ?

praveen
04-11-2007, 03:59 AM
ஆங்கில பதிவை விரைவில் நேரம் கிடைக்கும் போது தமிழாக்குகிறேன். பொறுத்தருள்க.

Open your registry and find or create the key below.

Create a new DWORD value, or modify the existing value, called "Administrator" and set it according to the value data below.

Exit your registry; you may need to restart or log out of Windows for the change to take effect.

Registry Settings
System Key: [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\
SpecialAccounts\UserList]
Value Name: Administrator
Data Type: REG_DWORD (DWORD Value)
Value Data: (1 = show Administrator)

தங்கவேல்
04-11-2007, 04:32 AM
there is no data name like administrator pradeep.

அன்புரசிகன்
04-11-2007, 04:58 AM
பிரவீன் இவ்வாறு தானே கூறியிருக்கிறார். இல்லாவிட்டால் ஒன்றை உருவாக்குங்கள்.

பிரவீன் கூறியது...:
Open your registry and find or create the key below.

Create a new DWORD value, or modify the existing value, called "Administrator" and set it according to the value data below.

praveen
04-11-2007, 05:52 AM
நேரமின்மையால் தமிழில் செய்ய இயலாத காரணத்தால் தங்கவேல் அவர்களுக்கு உடனடி பதில் கருதி PM செய்து விட்டேன்.

அன்புரசிகன் கூறியதே சரியானது, அதை நான் PMல் கூறி நணபர் செய்து அகமகிழ்ந்து பதில் PM செய்திருந்தார்.

தங்கவேல்
05-11-2007, 05:44 AM
சரி செய்து விட்டேன் பிரதீப். நன்றி அய்யா... அன்புரசிகான் நன்றி... அப்ப அப்ப இதுமாதிரி கேட்பேன். உதவுவீர்கள் தானே ?

praveen
05-11-2007, 06:08 AM
இதை உதவியாக நினைக்கவில்லை, இந்த குறள் படி

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன்
களைவதாம் நட்பு.

அன்புரசிகன்
05-11-2007, 06:25 AM
உண்மைதான் பிரவீன்.

தங்கவேல் அவர்களே... எதிர்பார்த்திருக்காதீர்கள். எனக்கு தெரிந்ததை மட்டும் தான் கூறுவேன். சிலவேளை உதவுவது கூகிள் தான்....
என்னிடம் உள்ள கணிணி அறிவு அனைத்தும் கேள்வி ஞானங்களும் அனுபவ கல்வியும் தான். எதனையும் முறைப்படியாக கற்றவில்லை.