PDA

View Full Version : வௌவால் காவியம்

பூமகள்
03-11-2007, 12:31 PM
அன்பு மன்ற உறவுகளே...!!

சமீபத்தில் செய்தி ஒன்றில் கேட்ட விசயம் என்னை இக்கவி எழுத இசைத்தது.

வௌவால்களின் மீது இரக்கம் காட்டி அதற்கு அடைக்களம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் ஒரு தம்பதிகளைப் பற்றி சொன்னார்கள். உலகிலேயே பெரும்பான்மையினரால் வெறுக்கப்படும் ஒரு உயிரியான வௌவால்கள் மேல் கருணை காட்டிய முதல் தம்பதிகள் அவர்கள் தானாம்.

இயற்கையின் படைப்பில் பலருக்கும் பிடிக்காத வௌவாலும் ஒன்று..!

இயற்கை அன்னைப் படைத்துவிட்டதால் பாவம் வௌவால் என்ன செய்யும்??

வௌவாலை நினைத்து கவி படைக்க எண்ணி காவியமாக சற்று நீண்டுவிட்டது. பொறுத்தருள்க மக்களே..!!

http://img30.picoodle.com/img/img30/6/11/3/poomagal/f_FlyingFoxBam_0e4f05a.jpg

வௌவால் காவியம்

பகலவன் துயில விரையும்
மாலை ஆறஞ்சு நேரம்..!
பாழடைந்த மண்டபம் அருகில்
தனிமைப் பயணம்..!

சட்டென்று குதித்தது
சருகுகள் இடையே அந்த
சின்ன கரிய வௌவால்..!

மெல்ல என் கண்ணோக்கி
மெதுவாக தமிழ் பகர்ந்தது...!

"நீர் கவியென்று யாமறிவோம்."
நிதானமாக சொல்ல விழைந்தது.

"எவையெல்லாமோ கவிக்கரு
எய்தி முக்தி அடைகையில்
எம்மையும் வைத்து பாடுவீரோ??!!"
கெஞ்சி நின்று கேள்வி கேட்டது
பிஞ்சு குட்டி வெண்ணுள்ள வௌவால்..!!

பார்த்து புன்னகைத்து
பகலவனின் பளிங்கு
வெளிச்சம் அணையுமுன்
பக்கத்தில் அமர்ந்து
பையில் துலாவி
காகித பதிவில்
எழுத முனைந்தேன்..!

காத்திருந்தது தலைகீழாக
கள்ளமில்லா வௌவால்..!

"எலியும் பறவையும்
எடுத்து வைத்ததுபோல்
இறக்கையும் எலி உருவமுமாய்
உண்டான விசித்திரம்..!!

வேகத்திலும் விசையறிந்து
திசை குறி தப்பாது
பறக்கும் அற்புதம்..!!

சந்துபொந்தில் இல்லை
உறக்கம்... அந்தரத்தில்
அரும்பும் தூக்கம்..!!

தண்ணீர் தேசத்தில்
எலி நாயகருக்காய்
கண்ணீர் விட
வைத்தார் வைரக் கவிஞர்..!!

வருந்தி வாழும்
வௌவாலுக்கும் காவியம்
வடிப்போம் வள்ளல்
நெஞ்சுடையீர்..!

தலைகீழாய் பிறந்து
நேராய் நீ வாழ்கையில்
தலைகீழாய் வாழும்
தாயுள்ள வௌவால்
நேராய் கேட்கிறது
அன்பு வைக்க ஏன்
அருளில்லையென்று..!"

எழுதுகோலின் இடைபற்றி
சிந்தித்துக் கிடக்கையில்
சங்கடம் சொல்லி
தன்கடன் முடித்து
துக்கத்தில் அழுதது
துள்ளும் வௌவால்..!

சாத்தானின் கூட்டமென்று
சாத்திரம் சொல்லி
சற்றும் புத்தியின்றி
கல் கொண்டு
தன்னை சாத்தி
சங்கடப்படுத்தும்
சங்கதி சொன்னது..!

"மண்ணில் இருக்கும்
மண் புழு கூட
உழவரின் நெஞ்சில்
புதல்வராய் இருக்கையில்
தம் உயிர் மட்டும்
தாழ்வா??" என்று
வௌவால் வடிவாக
கேட்பது போல்
எழுதி முடித்தேன்.

வாசித்துக் காட்டி
வரிகள் விளக்கையில்
வடிந்தது வெள்ளம்
வௌவாலின் கண்களில்...!

வருந்திப் பதைத்து நான்
ஏனென வினவ..

வருத்தமில்லை அது
வௌவாலின் நன்றி
நவிலல் என்று
வகையாய் உரைத்து
புகையாய் பறந்தது..!

praveen
03-11-2007, 12:49 PM
வவ்வாலை பற்றி வித்தியாசமான கவிதை, எனக்கு வவ்வால் கண்டால் உமட்டி கொண்டு வரும். உங்கள் கவிதை படித்ததும், சற்று சிநேகமாக தெரிகிறது. இருந்தாலும் வவ்வால் இருக்கும் இடத்தில் ஒரு துர்நாற்றம் நினைத்தாலே குடலை புரட்டுகிறது.

வாத்தியார் வந்தால் பழம் தின்னி வவ்வாலை நினைத்து சப்பு கொட்டுவார் என்று நினைக்கிறேன். :) பார்ப்போம் அவர் என்ன சொல்கிறார் என்று.

பூமகள்
03-11-2007, 12:59 PM
உயிர்களின் படைப்பு அவரவர் கையில் இல்லையே..!!
இயற்கை அவ்வண்ணம் படைத்ததற்கு பாவம் வவ்வால் என்ன செய்யும்..??

உங்களின் முதல் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி..!! :)
நன்றிகள் பிரவீண் அண்ணா.

ஓவியன்
03-11-2007, 01:49 PM
பூமகள் கவிப்பயணத்திலே வித்தியாசமான படிக்கல்லை எட்டிக் கொண்டு நிற்பதை பறைசாற்றி நிற்கிறது உங்கள் "வெளவால்" காவியம்..!

மனதார்ந்த பாராட்டுக்கள்...!!

எந்த உயிரிலும் உயர்வு தாழ்வில்லை ஆண்டவன் படைப்பிலே என்று உறைத்து நிற்கும் கவிதை....

உருவத்தில் தொடங்கி கண்ணால் பார்க்காது "கழி" ஒலி அலைகள் மூலம் பறக்கும் விஞ்ஞான வித்தை தெரிந்த கெட்டிக்கார குட்டிப் பயல் இந்த வெளவால் எனக் கூறி, சாத்தானென, இரத்தக் காட்டேரி என கட்டுக்கதை பல இட்டுக் கட்டி அந்த பிஞ்சு ஜீவனை பொல்லா ஜீவனாக்கிய மனிதர் கண்டு கொதித்து வெளவாலை கண்ணீர் மல்க வைத்த கவி என்னையும் வசப்படுத்தியது.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!

இங்கே எனக்கொரு சந்தேகம் நான் "வெளவால்" என்று தான் எழுதுவேன் பாடசாலையில் படித்த போதும் அப்படித்தான் படித்த ஞாபகம், ஆனால் நீங்கள் "வவ்வால்" என எழுதி இருக்கிறீர்கள். இந்த இரண்டிலும் எது சரியானது என யாராவது கூறினால் உதவியாக இருக்குமே...??

நேசம்
03-11-2007, 02:23 PM
இறைவனின் ஒவ்வொரு படைப்புகளிலும் ஒரு அர்த்தம் இருக்கும்.அதே மாதிரி தான் வெளவால் இனமும்.பூமகளின் வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
பேச்சு வழக்கில் வவ்வால் என்று சொல்வார்கள் ஒவியன் அவர்களே

praveen
03-11-2007, 02:37 PM
இங்கே எனக்கொரு சந்தேகம் நான் "வெளவால்" என்று தான் எழுதுவேன் பாடசாலையில் படித்த போதும் அப்படித்தான் படைத்த ஞாபகம், ஆனால் நீங்கள் "வவ்வால்" என எழுதி இருக்கிறீர்கள். இந்த இரண்டிலும் எது சரியானது என யாராவது கூறினால் உதவியாக இருக்குமே...??

பெரியார் சீர்திருத்த எழுத்தினால்,

ஓளவையார் - அவ்வையார் ஆனார்
வெளவால் - வவ்வால் ஆனது

ஓள என்ற எழுத்து அவ் என்று ஆனது.

(எனது கணிப்பு சரியாக இருந்தால் ஓவியனுக்கு வயது 40 க்கு மேல் இருக்கும்)

நேசம்
03-11-2007, 02:39 PM
(எனது கணிப்பு சரியாக இருந்தால் ஓவியனுக்கு வயது 40 க்கு மேல் இருக்கும்)

பிரவிண் அவர்கள் எதையும் குறைவாக தான் மதிப்பிடுவார் போல் தெரிகிறார்

praveen
03-11-2007, 02:48 PM
பிரவிண் அவர்கள் எதையும் குறைவாக தான் மதிப்பிடுவார் போல் தெரிகிறார்

மண்ணிக்கவும் நான் அவர் தமிழை வைத்து தான் சொன்னேன்.. அவர் அறிவை வைத்து என்று சொன்னால் 100 வயதிருக்கும். அவரை புகைப்படத்தை பார்த்ததில் சொல்கிறேன் 20 வயதிருக்கும் என்று.

பூமகள்
03-11-2007, 03:18 PM
பூமகள் கவிப்பயணத்திலே வித்தியாசமான படிக்கல்லை எட்டிக் கொண்டு நிற்பதை பறைசாற்றி நிற்கிறது உங்கள் "வெளவால்" காவியம்..!

மனதார்ந்த பாராட்டுக்கள்...!!
மிகுந்த நன்றிகள் அண்ணா. எல்லாம் தங்களின் ஆசி தான்..! :)

எந்த உயிரிலும் உயர்வு தாழ்வில்லை ஆண்டவன் படைப்பிலே என்று உறைத்து நிற்கும் கவிதை....

உருவத்தில் தொடங்கி கண்ணால் பார்க்காது "கழி" ஒலி அலைகள் மூலம் பறக்கும் விஞ்ஞான வித்தை தெரிந்த கெட்டிக்கார குட்டிப் பயல் இந்த வெளவால் எனக் கூறி, சாத்தானென, இரத்தக் காட்டேரி என கட்டுக்கதை பல இட்டுக் கட்டி அந்த பிஞ்சு ஜீவனை பொல்லா ஜீவனாக்கிய மனிதர் கண்டு கொதித்து வெளவாலை கண்ணீர் மல்க வைத்த கவி என்னையும் வசப்படுத்தியது.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!
உண்மை தான் அண்ணா. அண்மையில் தொலைக்காட்சி செய்தியில் ஒரு செய்தி கேட்டேன்.
வௌவால்களின் மீது இரக்கம் காட்டி அதற்கு அடைக்களம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் ஒரு தம்பதிகளைப் பற்றி சொன்னார்கள். உலகிலேயே பெரும்பான்மையினரால் வெறுக்கப்படும் ஒரு உயிரியான வௌவால்கள் மேல் கருணை காட்டிய முதல் தம்பதிகள் அவர்கள் தானாம்.
அந்த செய்தியின் தாக்கத்தால் தான் இந்த கவியை எழுதினேன்.

இங்கே எனக்கொரு சந்தேகம் நான் "வெளவால்" என்று தான் எழுதுவேன் பாடசாலையில் படித்த போதும் அப்படித்தான் படைத்த ஞாபகம், ஆனால் நீங்கள் "வவ்வால்" என எழுதி இருக்கிறீர்கள். இந்த இரண்டிலும் எது சரியானது என யாராவது கூறினால் உதவியாக இருக்குமே...??தாங்கள் உரைத்தது தான் சரி அண்ணா. நான் பேச்சு வழக்கில் தான் அப்படி எழுதிவிட்டேன்.
நான் படித்ததும் "வௌவால்" என்று தான். :D

பூமகள்
03-11-2007, 03:39 PM
இறைவனின் ஒவ்வொரு படைப்புகளிலும் ஒரு அர்த்தம் இருக்கும்.அதே மாதிரி தான் வெளவால் இனமும்.பூமகளின் வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
பேச்சு வழக்கில் வவ்வால் என்று சொல்வார்கள் ஒவியன் அவர்களே
மிகுந்த நன்றிகள் அண்ணா. சரியாக சொன்னீங்க. :icon_b:
நான் பேச்சு வழக்கில் போட்டுட்டேன். ஓவியன் அண்ணா தான் நக்கீரர் போல் வந்து தமிழை காப்பாற்றினார். :icon_b: :icon_rollout:
வௌ என்ற எழுத்தையே மறந்துட்டேனோ?? :icon_ush:

ஓவியன்
03-11-2007, 03:49 PM
பெரியார் சீர்திருத்த எழுத்தினால்,
ஓளவையார் - அவ்வையார் ஆனார்
வெளவால் - வவ்வால் ஆனது

ஓள என்ற எழுத்து அவ் என்று ஆனது.

அப்படியா பிரவீன் தகவலுக்கு நன்றி!, நான் படித்ததெல்லாம் ஈழத்தில் தானே அங்கே இந்த வார்த்தைகள் மாற்றப்படவில்லை இப்போதும் வெளவால், ஒளவை என்றே நாம் எழுதுகிறோம்...

(எனது கணிப்பு சரியாக இருந்தால் ஓவியனுக்கு வயது 40 க்கு மேல் இருக்கும்)

ஆமா ஒரு பேரன் கூட உண்டு...!! :icon_rollout:

பூமகள்
03-11-2007, 06:07 PM
(எனது கணிப்பு சரியாக இருந்தால் ஓவியனுக்கு வயது 40 க்கு மேல் இருக்கும்)

அவர் அறிவை வைத்து என்று சொன்னால் 100 வயதிருக்கும். அவரை புகைப்படத்தை பார்த்ததில் சொல்கிறேன் 20 வயதிருக்கும் என்று.
இதற்கு பெயர் தான் :icon_rollout:(பல்டியோ) ப்ரவீண் அண்ணா??

ஓமானில் ஓவியன் அண்ணாவுக்கு ரொம்பவும் குளிருதாம்..!! :D:D

ஓவியன்
03-11-2007, 06:15 PM
அவரை புகைப்படத்தை பார்த்ததில் சொல்கிறேன் 20 வயதிருக்கும் என்று.

ஹீ!,ஹீ!!!

அது என்னோட தம்பியின் படமுங்கோ...!! :D:D:D

அறிஞர்
03-11-2007, 06:17 PM
வவ்வால் பூவின் கையில்.... அழகாய் அவதிப்படுகிறது....

அருமை பூ.... நல்ல கவிஞராய் உருவெடுக்கிறீர்கள்.. கிடைக்கும் படம் வைத்து கவிதை... அழகாய் எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்...

பூமகள்
03-11-2007, 06:29 PM
வவ்வால் பூவின் கையில்.... அழகாய் அவதிப்படுகிறது....

அறிஞர் அண்ணா... பூ என்னிக்கி வௌவ்வாலை கையில் பிடிச்சது?? :eek: இது கொஞ்சம் அதிகமா தெரியவில்லை உங்களுக்கு??:confused:

அருமை பூ.... நல்ல கவிஞராய் உருவெடுக்கிறீர்கள்.. கிடைக்கும் படம் வைத்து கவிதை... அழகாய் எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்...
மிகுந்த நன்றிகள் அண்ணா.
சின்னதொரு திருத்தம்..!!

பூ படத்துக்காக கவி எழுதலை..!!
கவிக்காகவே படம் தேடிப் பதிக்கிறேன்..!!

இந்த கவி எழுத காரணம் இந்த சுட்டி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=292901&postcount=9)யில் சொல்லியிருக்கேனே அண்ணா.

அமரன்
03-11-2007, 07:37 PM
பகலவன் துயில விரையும்
மாலை ஆரஞ்சு (நிறம்-6.05) நேரம்..!
பாழடைந்த மண்டபம் அருகில்
தனிமைப் பயணம்..!
தொடரும் தமிழ் உடலுகுக்கு
பொருந்தாத தலையாக அஞ்சு.!

ஆறும் ஐந்தும் பதினொன்று,
ஆறு ஐந்துகள் முப்பது,..!
சொல்லும் கணிதம்
காலம் கணிக்கும்போது
ஆறைந்து (ஆறஞ்சு) என்பதே வழக்கு...!
********************************************************
பிறப்பில் பேதமில்லை.
பிறந்தது வேகவில்லை...!

வேகிவிட்டால்....வேகமாக
விவேகமாகும் சிந்தனை...!

பேதங்கள் மறைக்கும்
வேதங்கள் பிறக்கும்...!

பாலஸ்தினியக் கவிதைதொகுப்பில்
வௌவால்களின் என்னும் தலைப்பில்
படித்த கவிதை நீட்டுகிறது தலை
தூசிகளுக்குள் புதையுண்டு கொண்டு...!

அதிலிருந்த கருத்துச் செறிவு
இதன் செறிவைக் குறைக்கிறது...
பார்வையில் அது படாதிருந்தால்..இது
உச்ச வன்னமிலத்தை ஊற்றி இருக்கும்...!

பிச்சி
04-11-2007, 09:45 AM
வவ்வாலுக்கும் கவிதை படித்த பூ அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

வெண்ணுள்ள வவ்வால்.. கேட்பதற்கே ஆனந்தம்

அன்புடன்
பிச்சி

பூமகள்
06-11-2007, 05:00 PM
தொடரும் தமிழ் உடலுகுக்கு
பொருந்தாத தலையாக அஞ்சு.!

ஆறும் ஐந்தும் பதினொன்று,
ஆறு ஐந்துகள் முப்பது,..!
சொல்லும் கணிதம்
காலம் கணிக்கும்போது
ஆறைந்து (ஆறஞ்சு) என்பதே வழக்கு...!

ஆரஞ்சு சுளையில் களையோ??
அவதியில் நிறத்தையும் நேரத்தையும் ஒன்றாக்க
எண்ணி குழப்பிவிட்டேனோ??

நக்கீரரின் கண்களில்
முதல் பத்தியே
பத்திக் கொண்டதே..!!

சுட்டியமைக்கும்
குட்டியமைக்கும்
நன்றிகள்..!

பிறப்பில் பேதமில்லை.
பிறந்தது வேகவில்லை...!

வேகிவிட்டால்....வேகமாக
விவேகமாகும் சிந்தனை...!

பேதங்கள் மறைக்கும்
வேதங்கள் பிறக்கும்...!

பாலஸ்தினியக் கவிதைதொகுப்பில்
வௌவால்களின் என்னும் தலைப்பில்
படித்த கவிதை நீட்டுகிறது தலை
தூசிகளுக்குள் புதையுண்டு கொண்டு...!

அதிலிருந்த கருத்துச் செறிவு
இதன் செறிவைக் குறைக்கிறது...
பார்வையில் அது படாதிருந்தால்..இது
உச்ச வன்னமிலத்தை ஊற்றி இருக்கும்...!
வௌவாலின் செறிவின்றி செயலிழந்திருக்குதோ??
கலையிழந்திருக்குதோ??
வௌவால்கள் நிஜ தரிசனம் கிடைக்காததால்
நிழல் எண்ணி வரைந்ததாலோ??

வளரத்துடிக்கும் பூவை
தட்டிக் கொடுத்து தேற்றியும்
குட்டி வழி நடத்தியும்
தூணாக்கிய தமையன்
தான் இருக்கிறீர்களே..!!

வளர்க்க உதவும் நீராகவும்
வெயிலாகவும் உங்கள்
பின்னூட்டம் இருக்கிறது..!
நன்றிகள்..!!

மதி
06-11-2007, 05:15 PM
பூமகள்..எப்போதோ கவிதை திரிகளை எட்டிப்பார்ப்பதுண்டு.
தலைப்பை பார்த்தே வந்தேன்.. வௌவால் காவியம். யாரும் ஏறெடுத்துப் பார்க்காத ஒரு ஜீவனின் மீது தங்கள் வித்தியாசமான பார்வை..சற்றே சிந்திக்க வைக்கிறது.

அதை ஏன் யாருக்கும் பிடிப்பதில்லை. ஒரு வேளை மனிதர் பயப்படும் அந்தகாரத்தில் வசிப்பதாலிருகுமோ?..வித்தியாசமான கோணத்தில் நல்ல கவிதை.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

ஆதவா
06-11-2007, 05:28 PM

உங்களுக்கு சீக்கிரமே கல்யாண நடக்க,,,,,

பூமகள்
06-11-2007, 05:36 PM
வவ்வாலுக்கும் கவிதை படித்த பூ அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
வெண்ணுள்ள வவ்வால்.. கேட்பதற்கே ஆனந்தம்

பிச்சிப் பூக்கள் என் பதிவில் மலர்ந்தது கண்டு ஆனந்தம்.

மன்றத்தில் அடிக்கடி பிச்சிப் பூ மலர வேண்டுமென்பதே என் எண்ணம்..!!

தங்கை பிச்சி...!

வருக மீண்டும்..!!
தருக பா இன்னும்..!!

பூமகள்..எப்போதோ கவிதை திரிகளை எட்டிப்பார்ப்பதுண்டு.
தலைப்பை பார்த்தே வந்தேன்.. வௌவால் காவியம். யாரும் ஏறெடுத்துப் பார்க்காத ஒரு ஜீவனின் மீது தங்கள் வித்தியாசமான பார்வை..சற்றே சிந்திக்க வைக்கிறது.
அதை ஏன் யாருக்கும் பிடிப்பதில்லை. ஒரு வேளை மனிதர் பயப்படும் அந்தகாரத்தில் வசிப்பதாலிருகுமோ?..வித்தியாசமான கோணத்தில் நல்ல கவிதை.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
மிக்க நன்றிகள் மதி அண்ணா.

தலைப்பு பார்த்ததும் காத தூரம் ஓடும் மக்களுக்கிடையில்...

தலைப்பு பார்த்து வந்து படித்து பின்னூட்டமிட்டமைக்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.

மதி
07-11-2007, 01:33 AM
உங்களுக்கு சீக்கிரமே கல்யாண நடக்க,,,,,

ஆதவா..இதென்ன கலாட்டா...?
இப்படியெல்லாம் வாழ்த்துகிறாய்...!

ஆதவா
07-11-2007, 03:47 AM
ஆதவா..இதென்ன கலாட்டா...?
இப்படியெல்லாம் வாழ்த்துகிறாய்...!

பின்னே.. இரவெல்லாம் கண்விழித்து பதிவு போடறீங்களே????:D

மதி
07-11-2007, 08:32 AM
பின்னே.. இரவெல்லாம் கண்விழித்து பதிவு போடறீங்களே????:D
ஓ..அதுவா..வெட்டியாய் வீட்டில் ஓய்வெடுக்கையில் இரவென்ன பகலென்ன்..? :):):):)

ஷீ-நிசி
07-11-2007, 08:46 AM
வவ்வாலுக்கான கவிதை முதல் தடவை படிக்கிறேன்..

மிக நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் பூமகள்!

இளசு
07-11-2007, 07:41 PM
ஷீ,
நானும் வௌவாலுக்காகப் பாடப்பெற்ற கவிதை வாசிப்பது இதுவே முதல்.

(அமரன் படித்தது பாலஸ்தீனியக் கவிதை)..
தமிழில் இது முதல் என நினைக்கிறேன்.

எலி பற்றிய தண்ணீர்தேசம்..
கருணை காட்டிய தம்பதியர் நேசம்
என ஊக்கிகள் இனம்காட்டிய
பாமகளின் மனவளத்துக்குப் பாராட்டுகள்!

வௌவால்...
வேம்ப்பயர் மூடநம்பிக்கைகளால்
பாதிக்கப்பட்ட பரிதாப இனம்..

பறக்கும் ஒரே பாலூட்டி..
விழியின்றி ஒலியுணர்வால் மட்டுமே
தடுப்புக்கம்பிகள் தவிர்க்கும் வாகன ஓட்டி!

நீர்முழ்கிக்கப்பல், அல்ட்ராசவுண்ட் கருவிகளின்
இயற்பியல் முன்னோடி..

ரேபீஸ் நோய்ப் பரப்புவதில்
நாய், நரிகளின் கூட்டணி..

வைட்டமின் பி-12 குறைபாடு வரக்கூடிய
ஒரே மிருகம் - பழந்தின்னி வகை வௌவால் மட்டுமே!
ஏனெனில் அது அது தீவிர சைவம்!

பல விசேட சேதிகளுக்குச் சொந்தக்காரர் - வௌவால்!
ஆனாலும் பொது வெறுப்பு -விலக்குக்கு ஆளான விலங்கு - வௌவால்!

விளிம்புநிலை விலங்குக்காக பரிந்தியற்றிய
இந்த முதல் தமிழ்க்கவிதையால் என் மனதில் உயர்ந்துவிட்டார் - பூமகள்!

பூமகள்
08-11-2007, 03:40 PM
ஷீ,
நானும் வௌவாலுக்காகப் பாடப்பெற்ற கவிதை வாசிப்பது இதுவே முதல்.
(அமரன் படித்தது பாலஸ்தீனியக் கவிதை)..
தமிழில் இது முதல் என நினைக்கிறேன்.

மிகுந்த நன்றிகள் இளசு அண்ணா..!

எனக்கு மிகுந்த வியப்பாக உள்ளது இந்த செய்தி.. நிச்சயம் கவிஞர்கள் பாடு பொருளாக வௌவாலை ஆக்கியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன்..!

உங்களின் வரிகள் புதுத் தெம்பையும் இன்னும் புதுக்கருவில் எழுத வேண்டுமென்ற ஊக்கத்தையும் அளவில்லாமல் வழங்கிவிட்டது..!

மிகுந்த மகிழ்ச்சி அண்ணா.

எலி பற்றிய தண்ணீர்தேசம்..
கருணை காட்டிய தம்பதியர் நேசம்
என ஊக்கிகள் இனம்காட்டிய
பாமகளின் மனவளத்துக்குப் பாராட்டுகள்!
சின்னஞ்சிறியப் பிஞ்சினான பூவை பாமகளாய் பார்த்து பாராட்டியமை கண்டு என்னவென்று சொல்வேன்..

என் மனநிலையை விளக்க தமிழ் வார்த்தைகள் இல்லை இளசு அண்ணா.

வௌவால்...
வேம்ப்பயர் மூடநம்பிக்கைகளால்
பாதிக்கப்பட்ட பரிதாப இனம்..

பறக்கும் ஒரே பாலூட்டி..
விழியின்றி ஒலியுணர்வால் மட்டுமே
தடுப்புக்கம்பிகள் தவிர்க்கும் வாகன ஓட்டி!

நீர்முழ்கிக்கப்பல், அல்ட்ராசவுண்ட் கருவிகளின்
இயற்பியல் முன்னோடி..

ரேபீஸ் நோய்ப் பரப்புவதில்
நாய், நரிகளின் கூட்டணி..

வைட்டமின் பி-12 குறைபாடு வரக்கூடிய
ஒரே மிருகம் - பழந்தின்னி வகை வௌவால் மட்டுமே!
ஏனெனில் அது அது தீவிர சைவம்!

பல விசேட சேதிகளுக்குச் சொந்தக்காரர் - வௌவால்!
ஆனாலும் பொது வெறுப்பு -விலக்குக்கு ஆளான விலங்கு - வௌவால்!

நான் சொல்ல மறந்த செய்திகளை கொடுத்து மேலும் தெளிவாக்கி சிறப்பாக்கிவிட்டீர் கவியை..!!

கவிதை அருமை இளசு அண்ணா.

சைவ வௌவால்..!
அசைவ வௌவால்..!
மாக்ரோ வௌவால்..!
மைக்ரோ வௌவால்..! - என வௌவாலின் புராணம் பாட எத்தனித்தால் கவிதை அடுத்த ஊர் வரை நீளும் என்ற காரணத்தால் சுருக்கிப் படைத்தேன்...!

நான் சொல்லத்தவறிய பல முக்கிய கருத்துகளை உங்கள் பின்னூட்டத்தில் கண்டு மகிழ்ச்சி..!! :)

வௌவால் கவி எழுதி சில பின்னூட்டங்களைக் கண்டதும் ஏதோ தொடக்கூடாத ஒன்றை கவியாக உருவாக்கிவிட்டேனோ என்று பயந்தேன். ஆனாலும், தைரியமாய் இருந்தேன்.

என் கோணத்தில் சிலரேனும் சிந்திப்பர் என்ற நம்பிக்கையில்..! கருத்து கண்டதும் நிம்மதி அடைந்தேன். :)

விளிம்புநிலை விலங்குக்காக பரிந்தியற்றிய
இந்த முதல் தமிழ்க்கவிதையால் என் மனதில் உயர்ந்துவிட்டார் - பூமகள்!
இந்த வரிகள் படித்ததும் மகிழ்ச்சியில் கண்கள் பனித்தேவிட்டன.:traurig001:

சற்று அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வரிகள் அல்ல இவை...!

என் மனத்தில் உண்மையால் உணர்ந்த உணர்வுகளை பகிர்கிறேன்..!
மிக்க நன்றிகள் இளசு அண்ணா..!! :icon_rollout:

மன்மதன்
08-11-2007, 06:05 PM
வௌவால் காவியம் படைத்த வால் தங்கைக்கு பாராட்டுகள்.. இதன் மூலம் (இளசு கூறிய) மேட்டர்கள் பல தெரியவந்தது.. நன்றி பூ தங்கை.. இளசு அண்ணா..

யவனிகா
08-11-2007, 07:17 PM
வௌவாலுக்காய் கவி பாட களம் இறங்கிய பூவுக்கு வாழ்த்துக்கள். நல்ல கரு. வரிகளும் நன்று.

அக்னி
09-11-2007, 10:12 PM
மனித விலங்கு போட்ட,
தீண்டத்தகா விலங்கில்,
மாட்டியதில் ஓர் விலங்கு,
வௌவால்...

இரவில் விழித்து,
தலைகீழாய்த் தொங்கித்
தவமிருந்தும்..,
மாறாச் சாபம்...

பேசினாலும் புரியாத
மிகையொலி...
பார்த்தாலும் தெரியாத
இருவிழி...

சில வேளை
பூக்களுக்குப் புரியுமோ
இதன் மொழி...
அதனால்தான்
வௌவால் காவியம்,
வந்ததோ..,
பூமகள் வழி...

கோலத்திற்குப் புதிதாய் புள்ளி போடாமல்,
சுற்றியிருக்கும் ஆயிரமாயிரம் புள்ளிகளைக் கண்டு பயன்படுத்துவது,
பார்வையில் படும் திறமை...
அது உங்கள் கவிதையாக...
மிகுந்த பாராட்டுக்கள் பூமகள்...

புதுமைக்காவியத்திற்காக 500 iCash.

இளசு
10-11-2007, 08:16 AM
சபாஷ் அக்னி..

சொல்வளம், கட்டு சொக்கவைக்கிறது!

அக்னி
10-11-2007, 07:56 PM
சபாஷ் அக்னி..

சொல்வளம், கட்டு சொக்கவைக்கிறது!
உங்கள் வாழ்த்துக் கிட்டுவது, எனக்குப் பெருமை...
மிக்க நன்றி அண்ணா...

ஜெயாஸ்தா
13-11-2007, 02:46 PM
பதினைந்து நாட்கள் மன்றத்திற்கு வரவில்லை.... எக்கசக்கமான பதிவுகள் வந்துவிட்டது.....

வெளவாலுக்காக கவிதை படைத்த பூவுக்கு பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் (சேலம் அருகே என்று நினைக்கிறென்) ஒரு தோப்பில் சுமார் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உள்ளன. இந்த வெளவால்களை அந்த ஊர் மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். அந்த ஊர் மக்கள் தீபாவளியை கூட வெடித்துக் கொண்டாடுவது இல்லை. காரணம் வௌவால்களுக்கு அது தொந்தரவாக அமைந்து விடும் என்பதால்....!

அப்புறம் வெளவால் சாப்பிடும் வழியேதான் தன் கழிவுகளையும் வெளியேற்றும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பூமகள்
19-11-2007, 05:47 PM
வௌவால் காவியம் படைத்த வால் தங்கைக்கு பாராட்டுகள்.. இதன் மூலம் (இளசு கூறிய) மேட்டர்கள் பல தெரியவந்தது.. நன்றி பூ தங்கை.. இளசு அண்ணா..
வால் தங்கை என்று புதுப் பட்டம் கொடுத்த மன்மதன் அண்ணாவுக்கு ஜெ...!! :icon_rollout:
பின்னூட்ட ஊக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா. :)

வௌவாலுக்காய் கவி பாட களம் இறங்கிய பூவுக்கு வாழ்த்துக்கள். நல்ல கரு. வரிகளும் நன்று.
மிக்க நன்றிகள் அக்கா..!

வௌவால் பற்றி மேலும் நல்ல செய்திகளை அறிய இதோ சுட்டி..!

http://cocoschools.org/bats/index.htm

பூமகள்
19-11-2007, 05:57 PM
மனித விலங்கு போட்ட,
தீண்டத்தகா விலங்கில்,
மாட்டியதில் ஓர் விலங்கு,
வௌவால்...
தீண்டாமை விலங்கிற்கும்
அறிமுகம்..!

இரவில் விழித்து,
தலைகீழாய்த் தொங்கித்
தவமிருந்தும்..,
மாறாச் சாபம்...
தலைகீழே நேராய்..!!!
நம் நேர் அதற்கு முரண்..!

பேசினாலும் புரியாத
மிகையொலி...
பார்த்தாலும் தெரியாத
இருவிழி...
டெசிபல் கேட்கா மனிதச்செவி
நுண்ணொலி உணரும்
வௌவால் செவி..!
கண்கள் இருந்தும்
காட்சியிழப்பு..!

சில வேளை
பூக்களுக்குப் புரியுமோ
இதன் மொழி...
அதனால்தான்
வௌவால் காவியம்,
வந்ததோ..,
பூமகள் வழி...
எதிரில் பார்க்காத
பூவுக்கு புரியுமா
வௌவால் மொழி?
பூமனம் புரிந்ததால்
பூத்ததே இக்கவி..!

கோலத்திற்குப் புதிதாய் புள்ளி போடாமல்,
சுற்றியிருக்கும் ஆயிரமாயிரம் புள்ளிகளைக் கண்டு பயன்படுத்துவது,
பார்வையில் படும் திறமை...
அது உங்கள் கவிதையாக...
மிகுந்த பாராட்டுக்கள் பூமகள்...
புதுமைக்காவியத்திற்காக 500 iCash.
அக்னி அண்ணாவின் பின்னூட்டத்தின் சிறப்பு..!
அக்னி கவி வரிகளின் தொகுப்பு...!!

பாராட்டி பாராட்டி களைக்கும் அளவு பின்னூட்ட வேந்தர்... அக்னியார்..!
இ-பண அன்பளிப்புக்கும் பின்னூட்ட ஊக்கத்துக்கும் நன்றிகள் அக்னியாரே...!!

அக்னி
20-11-2007, 01:12 AM
எதிரில் பார்க்காத
பூவுக்கு புரியுமா
வௌவால் மொழி?
பூமனம் புரிந்ததால்
பூத்ததே இக்கவி..!

பூக்கள் விரியும் ஓசையும் மிகையொலி என்பார்கள்...
உண்மையா என்று எனக்குத் தெரியாது.
அதனால் தான் "பூக்களுக்குப் புரியுமோ" என்று கேட்டேன்...
ஆனால், பூமகளின் இளகிய மனம் நொந்ததால் வந்த கவி எனப் புரிகின்றேன்...
மிகையான பாராட்டுதலுக்கு நன்றி...

ஓவியன்
20-11-2007, 05:29 AM
ஆமாம்!

பூக்கள் மலரும் ஓசை மனிதரின் செவிப் புல வீச்சுக்கு எட்டாத உயர் மீடிறன் அளவைக் கொண்டதென படித்த ஞாபகம்..!!

பூமகள்
20-11-2007, 05:34 AM
வெளவாலுக்காக கவிதை படைத்த பூவுக்கு பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் (சேலம் அருகே என்று நினைக்கிறென்) ஒரு தோப்பில் சுமார் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உள்ளன. இந்த வெளவால்களை அந்த ஊர் மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். அந்த ஊர் மக்கள் தீபாவளியை கூட வெடித்துக் கொண்டாடுவது இல்லை. காரணம் வௌவால்களுக்கு அது தொந்தரவாக அமைந்து விடும் என்பதால்....!

அப்புறம் வெளவால் சாப்பிடும் வழியேதான் தன் கழிவுகளையும் வெளியேற்றும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெகு நாட்கள் கழித்து வந்தாலும் பூமகளின் கவிதைக்கு மறக்காமல் பின்னூட்டமிட்டு மகிழ்வித்த அன்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தாங்கள் கூறியது உண்மை தான். வௌவாலைப் பற்றி என் தந்தையும் இதையே தான் சொன்னார். இயற்கையின் விசித்திரமான படைப்புத்தான் வௌவாலோ??!

வாழ்த்தி பின்னூட்டமிட்டமைக்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.

பூமகள்
20-11-2007, 05:35 AM
ஆமாம்!

பூக்கள் மலரும் ஓசை மனிதரின் செவிப் புல வீச்சுக்கு எட்டாத உயர் மீடிறன் அளவைக் கொண்டதென படித்த ஞாபகம்..!!
ஓவியன் அண்ணா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ;) :)

kavinila
20-11-2007, 11:46 AM
நான் படித்து ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று..அதனல்தானோ என்னவோ என் கவிதையிலும் சொல்லிவிட்டேன். பூமகளின் வரிகள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்

பூமகள்
20-11-2007, 12:45 PM
நான் படித்து ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று..அதனல்தானோ என்னவோ என் கவிதையிலும் சொல்லிவிட்டேன். பூமகளின் வரிகள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
இதனைக் கேட்டு உள்ளம் மட்டற்ற உவகை கொண்டு கூத்தாடுகிறது.
உங்களின் கவிதையில் என் கவிதை பற்றி சொல்லியிருப்பது எனக்கு பெருமையும் சந்தோசத்தையும் தருகிறது. இதற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் கவிநிலா அன்பரே...! :icon_rollout:

உங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள். :)