PDA

View Full Version : பெண் குழந்தைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம்:



mgandhi
03-11-2007, 12:04 PM
பெண் குழந்தைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம்: மத்திய அரசு முடிவு
பாராளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரும் சூழ்நிலை நிலவுவதால் மக்களையும் அரசு ஊழியர்களையும் கவரும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. 6-வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்தி மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப் படுத்த பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார்.

அது போல பெண் குழந்தைகளுக்கு உதவ பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி நடுத்தர வகுப்பு பெற்றோர்களை கவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பெண் குழந்தைகளுக்காகவே பிரத்யேக இன்சூரன்ஸ் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இது தவிர பெண்குழந் தைகள் பிறந்ததும் ரொக்கப் பணம் கொடுக்கும் திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாது பெண்களுக்கு உதவி செய்யும் திட்டமும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெறும் நிலையை எட்டி உள்ளன.

முதல்கட்டமாக பரீட்சார்த் தமாக சில மாவட்டங்களில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு உதவும் திட்டத்தை அமல் படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இத்த கைய திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் சமூதாயத்தில் மேம்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பல மாநிலங் களில் பெண்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கிடையே 10-ம் வகுப்புக்கு பிறகு பள்ளிக்கு போகாத பெண்கள் எண்ணிக்கை 65 சதவீதமாக உள்ளது.

புதிய திட்டப்படி பல்வேறு நிதி உதவிகள் கிடைப்பதால் பெண்கள் தொடர்ந்து உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும்.
மாலை மலர்

விகடன்
03-11-2007, 12:53 PM
இந்தத்திட்டம் வெற்றியளித்துவிட்டால் பெண்சிசுக் கொலைகளும் நலிந்து நாளடைவில் மறைந்துவிடும் .