PDA

View Full Version : குப்பைத்தொட்டி....!



அமரன்
03-11-2007, 08:53 AM
வலுவற்ற
வளமான எச்சங்களின்
வளமான எச்சங்களுக்கு
இலவச வாடகை தாயாக...
வெறும்.....சதைப்
பிண்டம் கண்ட தாயாக...

மக்கள் இறக்கிவைத்த
சுமைகளைச் சுமக்கும்
மந்திரிவீட்டு தோட்டக்காரனாக....
மனதுக்குள்....மருகும்
பூந்தோட்டக் காவல்காரனாக....

கட்டுப்படுத்த முடியாதவர்கள்
கட்டுப்படுத்த முயலும்போது
தடுப்பாக உதவிய பின்
சுவரின் தாங்கியாக....
நிறைவேறாத
ஆசையான ஆயுத தாங்கியாக....

எத்தனையோ அவதாரங்கள்
எடுக்கும் நான்
இல்லாமல் போய்விட்டால்
நாறுமோ...மாறாக மாறுமோ...
நாடு...!

கஜினி
03-11-2007, 09:29 AM
குப்பைத்தொட்டிக்கான கவிதை அருமை அமரரே. குப்பைத் தொட்டி இல்லாமல் போனால் நாறுமோ மாறாக மாறுமோ நாடு. நல்ல கேள்வி. அருமை.

அமரன்
03-11-2007, 09:42 AM
மிக்க நன்றி கஜினி. குப்பைத்தொட்டி இன்னும் பேசவேண்டும் என நினைத்தபோது ஹாட் ஆவி திரள் திரளாக வந்தது. படிப்பவர்களுக்கு கொட்டாவி வந்துவிடும் என்பதால் நிறுத்திக்கொண்டது.

சுகந்தப்ரீதன்
03-11-2007, 10:01 AM
அண்ணா.. குப்பை தொட்டியும்கூட கவிதை எழுத தகுந்தது என்பதை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி.. நன்றாக உள்ளது கவிதை வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!

அமரன்
03-11-2007, 03:19 PM
ஏப்பா... சுகந்தா...!
இந்தக் குப்பைத்தொட்டியும் கவிதை எழுதுகிறதே என்று யாரைச் சொல்கின்றாய். என்னை இல்லை என்று நினைக்கின்றேன்.
எட்டிப்பார்த்ததுக்கு நன்றிப்பா..!

யவனிகா
03-11-2007, 03:25 PM
குப்பைத் தொட்டியின் புலம்பல்கள் கவிதையாகின்றன,பாராட்டுகள் அமரன்.கொட்டாவி எல்லாம் வரவில்லை.இன்னும் கேட்கும் ஆவல் தான் வருகிறது.

பூமகள்
03-11-2007, 03:32 PM
குப்பைத் தொட்டியின்
உள்ளத் தரைதொட்டு
உண்மை விளம்பிய
கவிதை ரீங்காரமாய்
ஒலிக்கிறது இன்னமும்..!

சத்தம் கேட்டு
சித்தம் மாறுமோ
சீர்கொண்ட நாடாக
சீர்கெட்ட நாடு??

பாராட்டுகள் அமரன் அண்ணா.
கவி, கவிக்கரு அருமையோ அருமை..!!

அமரன்
03-11-2007, 03:55 PM
குப்பைத் தொட்டியின் புலம்பல்கள் கவிதையாகின்றன,பாராட்டுகள் அமரன்.கொட்டாவி எல்லாம் வரவில்லை.இன்னும் கேட்கும் ஆவல் தான் வருகிறது.
நன்றி யவனிகா. இப்படிச் சொல்வீர்கள் என்று அறியும் கூர்திறன் இருந்திருந்தால் இன்னும் இம்சைப்படுத்தி இருப்பேனே...

அமரன்
03-11-2007, 04:00 PM
குப்பைத் தொட்டியின்
உள்ளத் தரைதொட்டு
உண்மை விளம்பிய
கவிதை ரீங்காரமாய்
ஒலிக்கிறது இன்னமும

சும்மா சொல்லக்கூடாது
விசைப்பலகையில் நர்த்தனமிடும்
விரல்நுனி வழிச் சங்கீதம்
எனக்கு எப்போதும் ரீங்காரமே...!

ரீங்காரத்துக்கு நன்றி பூ.

ஓவியன்
03-11-2007, 06:30 PM
குப்பையை கொட்டினாலும்
எச்சிலை கொப்பளித்தாலும்
எட்டி உதைத்தாலும்
தப்பாமல் கடமை செய்து
தான் நாறினும்
நாம் நாறாமல் பார்க்கும்
சேவகனுக்கு அமரன்
வடித்த கவிதை அருமை...

வித்தியாசமான கரு
வித்தியாசமான களம்
வழக்கமான
வார்த்தை விளையாடல்
பாராட்டுக்கள் அமரன்...!!

நேசம்
03-11-2007, 08:13 PM
நான் இல்லமால் போய்விட்டால் - குப்பைதொட்டியின் புலம்பலை கவிதையாக தந்த அமரன் ஜி க்கு வாழ்த்துக்கள்