PDA

View Full Version : பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வீரச்சாவு



அமரன்
02-11-2007, 08:43 AM
இலங்கை விமானப்படையின் வான்வெளித்தாக்குதல்களினால் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைத் தலைவர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஐந்துபேர் வீரச்சாவு அடைந்துள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அறிவித்துள்ளதாக சங்கதி, பதிவு ஆகிய தமிழ் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிகேடியர்: தமிழ்ச்செல்வன் துளித்துளியாக....


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/6bd0edc3.jpg

1984 இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் தினேஸ் என்னும் பெயருடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
விடுதலைப்புலிகளின் நான்காவது தமிழக பயிற்சி முகாமில் போரியல் யுக்திகளைப் பயின்றதோடு அல்லாமல் அமைப்பின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் பிரத்யேக இணைப்பாளராகவும் செயல்பட்டார்.
1987 மே மாதம் தென்மராட்சி (யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்பகுதி) இராணுவ கோட்டப்பொறுப்பாளராக நியமனம் பெற்றார்.
1991 இல் யாழ்ப்பாண மாவட்டத்துக்கே இராணுவ சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். சிறப்பாகவே செயல்பட்டார்.
நிதானமான போக்கும், தீர்க்கமான சிந்தனையும் கொண்ட இவரது சில நகர்வுகள் சர்ச்சைக் கிளப்பினாலும் அதன் தூரநோக்கை உணர்ந்தவர்களாலும், இவரின் மதிநுட்ப இராணுவ, அரசியல் நகர்வுகளாலும் இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் என்னும் உயர்ந்த அந்தஸ்துக்கு இட்டுச்செல்லப்பட்டார். புலிகளின் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஆனபின்னரும், இலங்கை அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு இட்டு வந்த "ஓயாத அலைகள்" தாக்குதல் நடவடிக்கையின் ஒரு கட்டளைத்தளபதியாக பங்காற்றியமை இவரின் நுணுக்கமான இராணுவ நகர்வுகளுக்கு ஒரு சான்று.
புலிகளின் அமைப்பினர் முன்னெடுத்த சகல சமாதான முன்னகர்வுகளிலும், தேசத்தின் குரல் ஆன்டன் பாலசிங்கம் அவர்களுடன் தோள்கொடுத்து, அரசியல் தடைக்க்ற்களை சளைக்காது போராடி அகற்றும் அளப்பரிய சேவையை செவ்வனே செய்தார். தேசத்தின் குரல் அவர்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுத்த தமிழின ஒழிப்பின் உண்மைத்தன்மையை, இனவாதத்தின் கோர முகத்தை வெளிக்கொணரும் அரசியல் களத்தில், தேசத்தின் குரல் உயிரோடு இருந்த காலத்தில் பதில் தளபதியாகவும், அவர்தம் பூதவுடல் மறைந்தபின் தளபதியாகவும் சாணக்கியத்துடனும், தீரத்துடனும் செயலாற்றினார்.

அமரன்
02-11-2007, 08:46 AM
இவருடன் லெப்.கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப் ஆட்சிவேல், லெப் வாகைக்குமரன் ஆகியோரும் வீரச்சாவடைந்துள்ளனர் என்று ஊர்ஜிதப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக புலிகளின் தலைமைசெயலகச் செயலர் திரு.சோ.சீரன் அவர்களின் கையொப்பத்துடனான புலிகள் அமைப்பின் அறிக்கை.

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
கிளிநொச்சி
2007.11.02

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,
செயலர்,
தலைமைச் செயலகம்



தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகுக்கு எடுத்துச்சொல்லும் மகத்தான சேவையில் ஈடுபட்ட, இதயசுத்தியுடன் பாடுபட்ட இவர்களுக்கு கனத்த இதயத்துடன் வீரவணக்கம் செலுத்துகின்றேன்.

ராஜா
02-11-2007, 08:51 AM
அதிர்ச்சியூட்டும் செய்தி..!

இதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கணிக்க முடிகிறது.. கொழும்பில் கூட குண்டு வெடிக்கலாம்.

நுரையீரல்
02-11-2007, 08:53 AM
இந்தச்செய்தியை சற்று முன்பு தான் சன் டி.வியில் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. வீர மரணமடைந்த அனைவரின் ஆத்மா சாந்தியடையவும் அவர்களது கனவு நிறைவேறவும் ஆழ்மனதில் பிராத்திப்போமாக.

அமரன்
02-11-2007, 08:53 AM
அதிர்ச்சிதான் அண்ணா...! அனுராதபுர விமானத்தளத் தாக்குதலினால் இலங்கை அரசின் உளவு வானூர்திகள் அழிக்கப்பட்டு விட்டன என்று செய்திகள் வெளியாகின. அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு துல்லியமான தாக்குதல்? கறுப்பு ஆடுகள் சில புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளனவா?

இல்லை என்பதை பிந்திய செய்திகள் உறுதிப்படுத்தி உள்ளன. சமாதான முகமூடி தரித்து, சரித்திரத்தில் தம்பெயரைப் பதிக்க நினைக்கும் கயவர்கள், சரித்திய நாயகர்கள் நிலம் போனபோது அவர்களை வரவேற்க, அவர்களுடன் கலந்தாலோசிக்க அமைக்கப்பட்ட சமாதானச் செயலகவளாகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளதாம். கோழைத்தனத்தினால் கூட சாய்க்க முடியாதது விடுதலை வேட்கை என்பதை இவர்கள் உணரவே மாட்டார்களா? இன்னும் உணர்த்தத்தான் வேண்டுமா?

ஓவியன்
02-11-2007, 08:57 AM
இந்த செய்தியை இப்போது விடுதலைப் புலிகள் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்...

தளபதி "தினேஸாக" தமிழீழ போராட்டத்தில் மிளிர்ந்தவர், பின்னர் கால் ஊனமுற்றும் தளராமல் "தமிழ்செல்வனாகி" தான் நேசித்த மக்களுக்காக ஓயாமல் அரசியல் ரீதியாகப் போராடியவர்.

ஈழப் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக தீர்க்க முனைந்த இரண்டாவது சக்தியும் ஓய்ந்துவிட்டது, உண்மையில் மிகப் பெரிய சோகமே....

கொள்கைக்காக வாழ்ந்து, கொள்கைக்காகவே சாவைத் தழுவிய பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுக்கும் அவருடன் உயிர் நீத்த போராளிகளுக்கும் என் இதய அஞ்சலிகள்!

அமரன்
02-11-2007, 08:59 AM
தளபதி தினேஸ் என்ற நாமத்துடன் இரணுவத் தளபதியாக இருந்த கால கட்டத்தில் சில சர்ச்சைகளில் சிக்குண்டவர். போராட்டம் தாண்டியும் பிரத்யேகமாகவும் நல்ல மனிதர்.

ஓவியன்
02-11-2007, 09:00 AM
அதிர்ச்சியூட்டும் செய்தி..!
இதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கணிக்க முடிகிறது..

உண்மைதான் அண்ணா!,அரசியல் முறை மூலம் தீர்வு காண இருந்த இறுதிக் கதவும் மூடப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

ஓவியன்
02-11-2007, 09:04 AM
தளபதி தினேஸ் என்ற நாமத்துடன் இரணுவத் தளபதியாக இருந்த கால கட்டத்தில் சில சர்ச்சைகளில் சிக்குண்டவர். போராட்டம் தாண்டியும் பிரத்யேகமாகவும் நல்ல மனிதர்.

ஆமாம் அமரன், ஆனையிறவுத் தளம் மீதான புலிகளின் முதலாவது வலிந்த தாக்குதலின் போது இவர் முன்னெடுத்த சில முடிவுகள் விமர்சிக்கப்பட்டாலும் அதற்கு முன்னரான களச் செயற்பாடுகளிலும் அதன் பின்னருமான அரசியல் நடவடிக்கைகளிலும் பிரிகேடியர் தமிழ்செல்வனின் பங்கு ஈழ அரசியலைப் பொறுத்தவரை கணிசமானதே..

அக்னி
02-11-2007, 09:34 AM
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும்,
அவருடன் வீரமரணமடைந்த மற்றைய மாவீரர்களுக்கும்,
என்னுடைய வீரவணக்கங்கள்...

யவனிகா
02-11-2007, 09:37 AM
வருந்தவைக்கும் செய்தி.வீர மரணம் எய்தியவர்களுக்கு அஞ்சலி.

Narathar
02-11-2007, 09:39 AM
அரசியல் துறை பொருப்பாளரது வீரமரணத்துக்கு மன்றம் சார்பில் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளின் அரசியல் நகர்வில் அதீத அக்கரை காட்டியவர்,

ஒரு போராட்டாக்குழுவின் பொறுப்புள்ள பதவியில் இருந்தாலும், ஊடகவியலாளர்களின் சகல ( சில சமயம் கிறுக்குத்தனமான ) கேள்விகளுக்கும் புன்னகை மாறாமல் பதில் சொல்லும் திறமை பெற்றவர்.

விடுதலைப்போராட்டத்துக்கே ஒரு அரசியல் அந்தஸ்த்தை எற்படுத்தியவர்,

உண்மையில் இவரது இழப்பு புலிகளுக்கு மட்டுமல்ல....
தமிழ் கூறும் நல்லுலகிற்கும் தான்

பூமகள்
02-11-2007, 09:43 AM
பிரிகேடியர் தமிழ்செல்வன் அவருக்கும் அவரோடு வீர மரணம் அடைந்தவருக்கும் எனது ஆழ்ந்த மன இறங்கலையும் அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறேன்.

s_mohanraju
02-11-2007, 09:47 AM
மிகவும் வருத்தமான செய்தி, தமிழீழ மக்களுக்கு பேரிழப்பு.

தமிழீழத்துக்கான முயற்ச்சிகளில் மேலும் ஒரு முட்டுகட்டை போட்டதுபோல் ஆகிவிட்டது.

எத்தனை முட்டுக்கட்டைகள் போட்டலும் தமிழீழ தாகத்தை தனித்துவிட முடியாது என்பதே என் கருத்து

நேசம்
02-11-2007, 10:42 AM
இலங்கை அரசு தாக்குதலில் வீரமரணம் அடைந்த பிரிகேடியர் தமிழ்செல்வன் மற்றும் வீரர்களுக்கு வீரவணக்கங்கள்

சாராகுமார்
02-11-2007, 11:35 AM
வீரமரணம் அடைந்த வீர புலிகளுக்கும்.அன்பர் தமிழ்செல்வன் அவர்களுக்கும் வீர வணக்கம்.ஆழ்ந்த அனுதாபங்களை ஈழ தமிழர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அறிஞர்
02-11-2007, 12:58 PM
ஈழத்திற்காக உயிர் கொடுக்கும் வீரர்களின் மறைவு.. நம்மை துக்கத்தில் ஆழ்த்துகிறது....

குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும்.. ஆழ்ந்த அனுதாபங்கள்..

அன்புரசிகன்
02-11-2007, 12:58 PM
இலங்கை வான்படையின் இந்த தாக்குதல்களால் விடுதலைப்புலிகள் போர் மூலமான முடிவுக்கு அரசு இட்டுச்செல்வது உறுதியாகிக்கொண்டிருக்கிறது... இலங்கையிலிருக்கும் இனப்பிரச்சனையை அரசியல் ரீதியில் முடிவுகாணவேண்டும் என்ற எண்ணம் கொண்ட 2 மனிதரையும் விடுதலைப்புலிகள் இழந்துள்ளனர். இவரின் இழப்பிற்கு தமிழரிலும் சிங்களவர் நிச்சயம் பயம் கொண்டே ஆகவேண்டும். காரணம் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தளபதி ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) 3வது ஈழப்போர் தமிழீழப்பகுதியில் மட்டுப்படுத்தப்படமாட்டாது என்று கூறியிருந்தார். அவற்றிற்கு சான்றாக அண்மைக்கால யால - திஸ்ஸமஹாராம - அநுராதபுரம் - அம்பாந்தோட்டை போன்ற தாக்குதல்கள் சான்று பயக்கும்....

சிங்கள மக்கள் கிலிகொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை அரசு வழிகோலுகிறது....

வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு எனது அகவணக்கங்கள்...

iniya
02-11-2007, 01:08 PM
போரில் இழப்புகள் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான்..இருநதாலும் ஏனோ இதயம் தாங்க முடியவில்லை!
கண்ணீரைத் தவிர வார்த்தைகள் வர மறுக்கின்றன தமிழ்ச்செல்வன் அண்ணா !

ஓவியன்
02-11-2007, 01:39 PM
உண்மைதான் இனியா, எப்போதும் சிரித்த முகத்துடனிருக்கும் சுப தமிழ்செல்வனை இனிக் காண முடியாது என்பதை மனம் ஜீரணிக்க முடியுதில்லையே..

மீனாகுமார்
02-11-2007, 01:45 PM
மிகவும் அதிர்ச்சியான செய்தி. சுதந்திர ஈழம் பெற இன்னுமோர் தியாகம். இவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.

praveen
02-11-2007, 02:04 PM
வருத்தமான செய்தி, முதலில் வழக்கம் போல இலங்கை அரசு அவிழ்த்து விடும் புரளி என்று நினைத்தேன். ஆனால் உண்மை என்று நமது மன்றத்து நண்பர்கள் மூலம் அறியும் போது மனது வலிக்கிறது. இன்னும் எவ்வளவு வீரர்களின் தியாகத்தால் நிறைவேறுமோ என்று நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.

@அமரன், திரியில் அவர் புகைப்படமும் அவர் பற்றிய இன்னும் சில செய்திகள் இட்டு முதல் பதிவில் புதுப்பியுங்கள்.

ipsudhan
02-11-2007, 02:24 PM
முதலில் கல்வி மறுக்கப்பட்டது

எங்கட உரிமைகள் பறிக்கபட்டன

வாழ்வாதாரங்கள் நசுக்கபட்டன

இன்று எங்களின் உயிர்கள் கொன்று விதைக்கபடுகின்றன,

என்று தணியும் இந்த சுதந்திர வேள்வியும்

ஒவ்வொரு உயிர் பறிக்கப்படும் போதும்

இதயம் பொசுங்க எழும் வினாவும்

சூரியன்
02-11-2007, 04:05 PM
மிகவும் அதிர்ச்சியான தகவல்..
இப்போரில் உயிர் நீத்த அனைவரின் ஆத்மாவும் சாந்தியடைய பிராத்திப்போமாக..

அமரன்
02-11-2007, 04:31 PM
@அமரன், திரியில் அவர் புகைப்படமும் அவர் பற்றிய இன்னும் சில செய்திகள் இட்டு முதல் பதிவில் புதுப்பியுங்கள்.
நிச்சயமாக பிரவீன். அவரது வீரச்சாவு தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையும், அவரைப்பற்றிய தகவல்கள் சிலவும் இணைத்துள்ளேன்.

iniya
02-11-2007, 04:51 PM
http://www.kaavalan.com/1.jpg

http://www.kaavalan.com/2.jpg

http://www.kaavalan.com/3.jpg

http://www.kaavalan.com/1234.jpg

ஓவியன்
02-11-2007, 05:00 PM
விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தின் புதிய அரசியல் துறைப் பொறுப்பாளராக இதுவரை தமிழீழக் காவல் துறைப் பொறுப்பாளராக இருந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான திரு பா.நடேசன் அவர்களை நியமித்துள்ளார்கள்.

நன்றி-பதிவு.. (http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1194035691&archive=&start_from=&ucat=2&)

உதயசூரியன்
02-11-2007, 05:48 PM
சுப தமிழ் செல்வன் வீர மரணம்

--------------------------------------------------------------------------------

சுப தமிழ் செல்வன் வீர மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியின் மீது சிறிலங்க விமானப்படை விமானங்கள் இன்று காலை நடத்திய தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்!

இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் செயலர் சோ. சீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை 6 மணியளவில் எமது அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களும், லெஃப்டினன்ட் கர்னல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் *மிகுதன், கேப்டன் நேதாஜி, லெஃப்டினன்ட் ஆட்சிவேல், லெஃப்டினன்ட் வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்க வான்படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதை தமிழீழ மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், பன்னாட்டு சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்குப் பிறகு அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவராக திகழ்ந்த தமிழ்ச்செல்வன், சிறிலங்க அரசுடன் ஜெனீவா பேச்சில் கலந்துகொண்ட புலிகளின் குழுவிற்கு தலைமையேற்று பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
நன்றி வெப் உலகம்

சுப தமிழ் செல்வன் வீர மரணம்- அஞ்சலி

கொஞ்ச நாள் முன்பு நடந்த விமான தள போரில்... இறந்த ராணுவ வீரர்களை... செஞ்சுலுவையிடம் முறை படி ஒப்படைத்தனர்.. புலிகள்..

ஆனால்

இறந்த தமிழ் புலிகளை... நிர்வாண படுத்தி...
அவர்களின் கண்கள் மற்றும்.. மர்ம உறுப்பினை அறுத்து.. அதை தமிழர்கள் வாழும் பகுதியில் டிராக்டரில் வைத்து ஊர்வலம் நடத்தி.. குப்பைகளை கொட்டுவது போல் நடு ரோட்டில் கொட்டி சென்ற.. அதை உலக மெல்லாம் காணும் வகையில் படம் எடுத்து காட்டிய...மனிதாபமற்ற அயோக்கிய சிங்கள ராணுவமே... ப்யம் எப்பொழுதும் உங்களின் ஆடை. அதன் வெளிபாடு தான் இந்த காட்டு மிராண்டி தனம்...

அரசியல் பிரிவு என்பது சமாதன புறாக்கள் போன்றது..

அதையும் கொன்று விட்டாய்...

எறும்பை கொல்வது கூட பாவம் என்னும் புத்த மதத்தின் மதிப்பு குறையும் உங்களால்...

வீர மரணம் அடைந்த சுப தமிழ் செல்வன் உட்பட இறந்த அனைவருக்கும் எங்களது.. இதய அஞ்சலியையும்...
இலங்கை ராணுவத்துக்கு கண்டனைத்தையும் தெரிவித்து கொள்கிறோம்...

ஒரு தமிழன் இறந்தால்.. ஆயிரம் தமிழன் உருவாகுவான்....

வாழ்க தமிழ்

Mano.G.
03-11-2007, 01:14 AM
மலேசிய நேரம் நள்ளிரவில்
12மணிக்கு தொலைகாட்சியில்
செய்திகள் காணும் பொழுது
கண்ட செய்தி,
மனதை கனக்க செய்த செய்தி

இந்த அறப்போரில் உயிர் நீத்த
அனைவரின் ஆன்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திப்போம்


மனோ.ஜி

தங்கவேல்
03-11-2007, 01:46 AM
பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்பது கடவுளின் மீதானா நம்பிகையினை அதிகப்படுதுகின்றது. உல்கெங்கிலும் எவ்வளவோ இறப்புக்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சிலர் தான் வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். விடுதலைபுலிகளின் வரலாற்றில் இவருக்கும் ஒரு இடம் உண்டு.

வரலாறு படைப்போரே பிறந்தவராக இருக்கின்றார்கள்...
மனது கனக்கின்றது..

விகடன்
03-11-2007, 03:15 AM
வீர காவியங்களாகிவிட்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன், லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் அனைவரிற்கும் எனது வீர வணக்கங்கள்

விகடன்
03-11-2007, 03:18 AM
தேசத்தின் குரலின் மறைவு கடந்து ஓர் வருடம் கூட பூர்த்தியாகவில்லை, அதற்கிறையில் இன்னோர் இடியான செய்தி.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, போர்வழித்தீர்வே என்று சொல்வதற்கு இணங்க இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.

நேசம்
03-11-2007, 03:25 AM
இறந்த தமிழ் புலிகளை... நிர்வாண படுத்தி...
அவர்களின் கண்கள் மற்றும்.. மர்ம உறுப்பினை அறுத்து.. அதை தமிழர்கள் வாழும் பகுதியில் டிராக்டரில் வைத்து ஊர்வலம் நடத்தி.. குப்பைகளை கொட்டுவது போல் நடு ரோட்டில் கொட்டி சென்ற.. அதை உலக மெல்லாம் காணும் வகையில் படம் எடுத்து காட்டிய...மனிதாபமற்ற அயோக்கிய சிங்கள ராணுவமே... ப்யம் எப்பொழுதும் உங்களின் ஆடை. அதன் வெளிபாடு தான் இந்த காட்டு மிராண்டி தனம்...


சிங்களர்களுக்கு ஏற்பட்ட தோல்வி அவர்களை இந்த அளவிற்கு நிதானம் இழக்க செய்தது என்பதை நினைக்கும் போது வேதனையாகவும் வெட்கபட செய்கிறது.இந்த மாதிரி காட்டுமிராண்டித் தனத்தை இந்தியா அரசு தடுத்து நிறுத்த தமிழகத்தில் ஆளும் கட்சி உள்பட எதிர்கட்சிகள் ஒற்றுமையாக வலியுறுத்த வேண்டும்.

விகடன்
03-11-2007, 03:49 AM
சு. ப. தமிழ்ச்செல்வனின் இறுதி உரை

தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இதயம்
03-11-2007, 05:38 AM
உலக தமிழர்களையும், நடுநிலையாளர்களையும் பெரும் அதிர்ச்சியிலும், துன்பத்திலும் ஆழ்த்திய வேதனைச்செய்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்களின் வீர மரணம். வெற்றியை நோக்கிய விடுதலைப்போராட்ட பாதையில் வீரமரணம் என்பது தவிர்க்க இயலாதது என்றாலும் இயக்கத்தில் பெரும்பங்கு வகித்த இவரின் மரணம் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க இயலாத உண்மை. அவரை இழந்து வாடும் இயக்கத்திற்கும், குடும்பத்தினருக்கும் மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ramanan4u
03-11-2007, 07:18 AM
செல்வா எங்கு சென்றாய்?: சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சுகந்தப்ரீதன்
03-11-2007, 07:32 AM
இருந்தாலும் இத்தனை வேகமாக இரங்கல் செய்தியை வெளியிட்டு இருக்க வேண்டாம்...இன்னும் இரண்டு நாள் கழித்து வெளியிட வேண்டியதுதானே..?

ramanan4u
03-11-2007, 11:37 AM
இழப்பு நமக்கு புதிதல்ல நண்பா...... வெல்வது உறுதி....
அவரின் இழப்பு நமக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று தான்....
நம்மை வெல்ல துடிக்குது கயவர்கள் கூட்டம்.....
கடலின் அலையையை கைகளால் தடுக்க முடியாது என்பதை அந்த சிங்கள நரிகள்
கூட்டம் விரைவில் அறியும்....
நம்
பெற்றோரை இழந்தோம் தமிழ் ஈழத்திர்க்காக...
நாம்
பெற்ற குழந்தையையும் இழப்போம் தமிழ் ஈழத்திர்க்காக....
பெற்ற தீருவோம் தமிழ் ஈழத்தை நம்மை இழந்தாவது....

இறப்பது நாமாக இருப்பினும்..
பிறப்பது தமிழ் ஈழமாக இருக்கட்டும்...

வெற்றி நமதே ......

தமிழ் ஈழம் பிறப்பது உறுதி....

ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.....

mgandhi
03-11-2007, 12:11 PM
http://www.maalaimalar.com/images/news/Article/3-11-2007/03karuna.jpg
தமிழ்ச்செல்வனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பிரபாகரன்

ipsudhan
03-11-2007, 02:26 PM
செல்வா எங்கு சென்றாய்?: சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

என்று அதில் கூறப்பட்டுள்ளது.


கலைஞர் இப்போது என்ன சொல்ல வருகிறார்?,

இலங்கை அரசின் இந்த காட்டுமிராண்டிதனத்தை கண்டிக்கிறாரா?,

தற்போது ஈழ பிரச்சனையில் அவரின் நிலை என்ன?

anyway நன்றி கலைஞரே , இந்த இரங்கல் அறிக்கையின் மூலம் எங்களின் அனுதாப ஓட்டுகள்தானே உங்களுக்கு வேண்டும்?

praveen
03-11-2007, 02:34 PM
கலைஞர் இப்போது என்ன சொல்ல வருகிறார்?,

இலங்கை அரசின் இந்த காட்டுமிராண்டிதனத்தை கண்டிக்கிறாரா?,

தற்போது ஈழ பிரச்சனையில் அவரின் நிலை என்ன?

anyway நன்றி கலைஞரே , இந்த இரங்கல் அறிக்கையின் மூலம் எங்களின் அனுதாப ஓட்டுகள்தானே உங்களுக்கு வேண்டும்?

இது தான் நம்மவர்களிடம் இருக்கும் குறைபாடு, ஒரு துக்க வீட்டிலும் சொந்தங்களிடம் அடித்து கொண்டு / வசவு பேசி கொண்டிருப்பது.

ஒரு வீரனின் வீரமரணம் குறித்த திரியில் திரியின் தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் ஒரு பதிவு போட்டு இந்த திரியை தடம் பிறள செய்ய வேண்டுமா?.

இது தான் அந்த வீரருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியா?. தனியாக ஒரு திரி அரசியல் பேச ஆரம்பித்து கொள்ளுங்கள். உங்கள் பாழாய் போன நாற்றம் பிடித்த அரசியலை இங்கே கொண்டு வராதீர்கள்.

உதயசூரியன்
03-11-2007, 04:52 PM
காந்தி மற்றும் இனியா..மிக்க நன்றி..!

ஏங்கிய கண்களுக்கு..விருந்தாக்கி..
அவரின் இறுதி நாட்களில் கலந்து கொண்ட திருப்தியை கொண்டு வந்தமைக்கு...!!

சிறு வயதில்..பெரும் சாதனை புரிபவர்கள் என்றுமே.. ஈழத்து தமிழர்கள்..

காசுக்காக வாழாமல்.. தமிழ் மண்ணுக்காக வாழ்பவர்கள் அவர்கள் தான்...

கட்டு படுத்தி கொண்டு இருக்கும் கலைஞரையும் கண் கலங்கி கரை புரள செய்து விட்டாய்..
செல்வா..
தமிழ் செல்வா...

மீண்டும் பிறக்க வேண்டும் உன் மண்ணிலே..
சுதந்திர யாழ் நாட்டிலே...

வாழ்க தமிழ்

ipsudhan
03-11-2007, 05:29 PM
இது தான் நம்மவர்களிடம் இருக்கும் குறைபாடு, ஒரு துக்க வீட்டிலும் சொந்தங்களிடம் அடித்து கொண்டு / வசவு பேசி கொண்டிருப்பது.

ஒரு வீரனின் வீரமரணம் குறித்த திரியில் திரியின் தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் ஒரு பதிவு போட்டு இந்த திரியை தடம் பிறள செய்ய வேண்டுமா?.

இது தான் அந்த வீரருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியா?. தனியாக ஒரு திரி அரசியல் பேச ஆரம்பித்து கொள்ளுங்கள். உங்கள் பாழாய் போன நாற்றம் பிடித்த அரசியலை இங்கே கொண்டு வராதீர்கள்.

MR.Ramanan4u பதித்த செய்திக்கு: தமிழக முதல்வரின் நிலை இப்படியா தினமும் வெளியிடும் 100 அறிக்கைகளில் ஒரு இரங்கல் அறிக்கையாக இருக்க வேண்டும்.இங்கு அரசியல் பேச வேண்டுமானால் எவ்வளொவோ எழுதியிருப்பேன்,

இதில் தலைப்பிற்க்கு சம்பந்தமில்லாமலோ தடம் புரள செய்ய வேண்டிய அவசியமோ இல்லை,அதற்கு நேரம் கூட எனக்கு கிடையாது.
நீங்கள்தான் உங்கள் பாழாய்போன, நாற்றம் பிடித்த அரசியல் என்று அதீத உணர்ச்சி வசப்பட்டுள்ளீர்கள்.

உதயசூரியன்
03-11-2007, 05:31 PM
இரங்கல் செய்யும் இடத்தில் சண்டையிடும் பழக்கம் கூடாது..

உதயசூரியன்
03-11-2007, 05:32 PM
தமிழ்ச்செல்வனின் இழப்பால் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்தது.

சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில்,அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தொ*ல்.திருமாவளவன் தலைமையேற்றார். தமிழ்ச்செல்வனின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முழககங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி, ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி, தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகி பாலு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சநதித்த திருமாவளவன் கூறியதாவது : தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக தமிழர்களுக்கு*ம் இழப்பாகும். ஈழப்பிரச்சனை*க்கு அரசியல் தீர்வே இறுதியானது என்று சொன்னவர் த*மி*ழ்செ*ல்வ*ன்.

அவரது இழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணு*ம் *விவகார*த்*தி*ல் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வ*லியுறு*த்த*க்கோ*ரி முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைப்போம்.

மனிதநேயமற்ற சிங்கள இனவெறியர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓவியா
03-11-2007, 05:39 PM
மண்ணுக்காக வீரமரணமெய்திய மாவீரர் தமிழ்ச்செல்வன் அண்ணாவிற்க்கும் மற்றும் இவருடன் மாவீரர்கள் லெப்.கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப் ஆட்சிவேல், லெப் வாகைக்குமரன் ஆகியோருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.


அன்புடன்
ஓவியா.

ramanan4u
03-11-2007, 06:16 PM
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03/11/2007.

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காண முடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

ramanan4u
03-11-2007, 06:20 PM
தோழரே இதில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. இது ஒரு முதலமைச்சரின் அறிக்கை அவ்வளவு தான்

அன்புரசிகன்
04-11-2007, 06:10 AM
பதிலடி வார்த்தைகளால் அல்ல செயல்களால் தான். சிங்களதேசம் எதிர்பாராத அனைத்து அதிர்ச்சிகளையும் புலிகள் புகட்டுவர் என விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் பிபிசி இன் சர்வதேச ஒளிபரப்பு சேவைக்கு தெரிவித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்....

சில காலங்களுக்கு முன் இதே பிபிசி சர்வதேச ஒளிபரப்பிற்கு பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் கொடுத்த செவ்வியில் 3ம் ஈழப்போரின் பிரதிபலிப்பு தமிழீழ எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படமாட்டாது என்ற கூற்றை அது நினைவு கூர்ந்தது...

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் கூற்றை நனவாக்க தமிழ் நாயகன்கள் தயாராகிவிட்டார்கள் என்பது அண்மைக்கால விடுதலைப்புலிகளின் அதிர்ச்சி வைத்தியங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துககாட்டுகிறது...

அமரன்
04-11-2007, 06:20 AM
அனைத்து ஊடகங்களும் புலிகளின் அமைப்பின் அரசியல் தலைவர், அரசியல்துறைப்பொறுப்பாளர் என்ற பதம் பயன்படுத்தும்போது பி.பி.சி விடுதலைப்புலிகளின் சமாதானக் குழுத்தலைவர் என்னும் பதம் பாவித்திதது. அந்த தருணத்தில், செவிமடுத்த அனைவருக்கும் சமாதானத்தின் எதிர்ர்பும், சமாதான நகர்வுகளின் அடுத்தகட்டமும், தாக்குதலின் பாரதூரமும் புரிந்து இருக்கும். நன்றி ரசிகன் பகிர்வுக்கு.

சுட்டிபையன்
04-11-2007, 11:27 AM
விடுதலைபுலிகளுக்கும், உலக வாழ் ஈழத்தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு, மறைந்த பிரிகேடியர் உட்பட அனவருக்கும் வீர அஞலிகள், நிச்சையம் இதற்க்காண விலையை சிங்கள தேசம் கொடுக்க வேண்டி இருக்கும், அது பாரிய அடியாகவே இருக்கும்