PDA

View Full Version : பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுவிகடன்
03-11-2007, 06:17 AM
பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிப் படையிலிருந்து 108 சிறிலங்கா படையினர் நீக்கம்

பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அமைதிப் படையில் இடம்பெற்றிருந்த 950 சிறிலங்காப் படையினரில் 108 பேரை சிறிலங்காவுக்கு ஐ.நா. திருப்பி அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பேச்சாளர் மைக்கேல் மொண்டஸ் கூறியதாவது:

ஹெய்ட்டியில் அமைதிப் படையில் இடம்பெற்றிருந்தோர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்கா அரசாங்கமும் மிகவும் கவலையடைகிறது.

வயது குறைந்த சிறுமிகளுக்கு பணம் கொடுத்த இக்கொடூர செயலை சிறிலங்கா படையினர் செய்துள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக 108 சிறிலங்கா படையினர் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்கா தெரிவித்துள்ளது சிறிலங்காப் படையினரால் பாதிக்கப்பட்டோருக்கு ஐ.நா. உதவும் என்றார் அவர்.

தகவல்: புதினம் இணையத்தளம்

இதுவரை காலங்களில் தமிழீழத்தில் இராணுவக்க் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இப்படிப்பட்ட அநியாயங்கள் நடக்கிறது என்று எத்தனைட்டடவை சொல்லியும் கண்டுகொள்ளவில்லை இலங்கை அரசு. முதன் முதலாக கிரிஷாந்தி வளக்கு அதுவும் அம்பலமானதால் அரசாங்கம் பொருட்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. அதில் எத்தனையோ இடர்பாடுகள் இருந்தபோதிலும் மன்னாரில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய திரு இளன்ன்செழியன் அவர்களின் தலையீட்டால் பல உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும், அவை நிறைவேற்றி முடிக்கப்பட்டுவிட்டனவா? என்பது இன்றுமே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

அதற்கு பின்னர் பல நிகழ்வுகள் வந்திருந்தாலும் அவை தட்டிக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சர்வதேசமும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த நிகழ்வால் இலங்கை அரசாங்கத்தில் இராணுவத்திலிருக்கும் காமுகர்கள் அம்பலமாகிவிட்டன்னர். இனிமேலாவது சர்வதேச சமூகம் இப்படிப்பட்ட நிகழ்வுகளை நம்பும் என்று எதிர்பார்க்கலாம்.

என்ன ஒரு இழப்பும் தனக்கு வரும்வரையில் அதன் வலி புரிவட்து கடினந்தான்.

நேசம்
03-11-2007, 07:33 AM
தமிழீழத்தில் உள்ள தங்கள் கட்டுபாட்டில் இத்தைகைய அட்டுழியங்களை செய்த சிங்களர்கள் அங்கே போய் தங்கள் புத்தியை காட்டுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கு.உலக நாடுகள் புரிந்து கொண்டால் சரி..!

சுகந்தப்ரீதன்
03-11-2007, 07:47 AM
என்ன ஒரு இழப்பும் தனக்கு வரும்வரையில் அதன் வலி புரிவட்து கடினந்தான்.
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை.. அதனால்தான் இந்த மாதிரி கொடூர செயல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன இன்றைக்கும்...! யார் அழுதால் எனக்கென்ன நான் வாழ்ந்தால் போதும் நலமாக என்ற போக்கு நாளுக்குநாள் பெருகிவருவது வருத்தத்தைதான் அளிக்கிறது.. இந்த கண்ணோட்டம்தான் அப்பாவிகளின் வாழ்வையே அழிக்கிறது.. இனியாவது இதை உலகம் உணர்ந்தால் சரி..!

விகடன்
03-11-2007, 07:56 AM
தமிழீழத்தில் உள்ள தங்கள் கட்டுபாட்டில் இத்தைகைய

ஐயா சாமி..
என்னுடைய கட்டுப்பாட்டில் எந்தப் பிரதேமமும் கிடையாது.
வில்லங்கத்தில் மாட்டி விட்டுடாதீர்கள்.

தமீழீழம் முழுவதும் அண்ணன் பிரபாகரன் கட்டுப்பாட்டிற்கு வரவேண்டும் என்பது பரலது ஆசை. அதில் சில பகுதி ஏதோ இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பது தற்போதைய தற்காலிய விதி.

நேசம்
03-11-2007, 08:00 AM
ஐயா சாமி..
என்னுடைய கட்டுப்பாட்டில் எந்தப் பிரதேமமும் கிடையாது.
வில்லங்கத்தில் மாட்டி விட்டுடாதீர்கள்.நீர்தான் வில்லங்கத்தை இழுத்து விடுவிர் போலிருக்கு. தங்கள் என்று சொன்னது சிங்கள இராணுவத்தைதான்.

ஓவியன்
03-11-2007, 08:21 AM
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதென்று சும்மாவா சொன்னார்கள், இங்கே ஆடிய ஆட்டத்தை அங்கேயும் போய் அரங்கேற்றியிருக்கிறார்கள் போல....!!!:sprachlos020:

அன்புரசிகன்
03-11-2007, 08:56 AM
சும்மாவா சொன்னாங்க... பட்டால் தான் புரியும் என்று....

பார்ப்போம்... இதிலாவது ஜ.நா ஏதாவது நடவெடிக்கை எடுக்குமா என்று....

ஆனால் எனக்கு ஐநா மீதிருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது...

விகடன்
03-11-2007, 09:34 AM
பார்ப்போம்... இதிலாவது ஜ.நா ஏதாவது நடவெடிக்கை எடுக்குமா என்று....

ஆனால் எனக்கு ஐநா மீதிருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது...

சீ...சீ...
என்ன பழக்கம் இது அன்பு ரசிகன். எதிலும் ஒரு நம்பிக்கை வேண்டும்.

ஐக்கிய நாடு நடவடிக்கை எடுக்கும். தமிழர் மீது, அவர்கள் அபிலாசைகள் மீது, உரிமைகள் மீது எதுவித கவனமும் எடுக்காத நடவடிக்கைகளை எடுக்கும்.

எப்படீட விராடன் உன்னால முடியுது என்றுதானே கேற்கின்றீர்.
அதுவா...
கடந்த காலங்களை புரட்டிப்பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது. :lachen001:

ராஜா
03-11-2007, 10:17 AM
சும்மாவா சொன்னாங்க... பட்டால் தான் புரியும் என்று....

பார்ப்போம்... இதிலாவது ஜ.நா ஏதாவது நடவெடிக்கை எடுக்குமா என்று....

ஆனால் எனக்கு ஐநா மீதிருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது...

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே மாம்ஸ்..

ஐநா ஒரு அமெரிக்க அடிவருடி. முதுகெலும்பற்ற பிறவி.

சதாம் மீது தன் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்கா போர் தொடுத்தபோது, இன்று ஒரு கருப்பு நாள் என்று மட்டும் சொல்லி வாய்மூடிக்கொண்ட அவலத்தை அனைவரும் அறிவர்.

விகடன்
04-11-2007, 07:11 AM
பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகளின் 108 சிறிலங்காப் படையினரை ஐக்கிய நாடுகள் சபை நீக்கியிருக்கும் நிலையில் உலகிலேயே மிக ஒழுக்கமான இராணுவம் எமது இராணுவம்தான் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்ச, "எமது ஒழுக்கமான இராணுவத்தைப் பற்றி சிலர் அரசியல் இலாபங்களுக்காக அவதூறுகளையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தெரிவிக்கின்றனர்" என்றார் அவர்.

தகவல்: புதினம் (http://www.puthinam.com/full.php?203uUBjdb3cD8H534de2Qoc0a03odCcd4dcFEt7320eKWOIKbe2494kc4ccbakYW3e) இணையத்தளம்

அன்புரசிகன்
04-11-2007, 07:19 AM
இந்த செய்தியை மன்றத்தினால் நடாத்தவிருக்கும் நகைச்சுவைபோட்டி இல 04ல் பதித்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு முதல் பரிசு நிச்சயம் கிடைத்திருக்கும் விராடா.... அநியாயமாக ஒரு பதக்கத்தை நழுவவிட்டுவிட்டீர்களே....

விகடன்
04-11-2007, 07:29 AM
அந்த நேரத்தில் மகிந்த இப்படியாக சொன்னாரோ தெரியவில்லை . சொல்லொயிருந்தாலும் இன்றுதானே என் கண்களில் பட்டது. பரவாயில்லை அன்பு.
இனிமேல் இப்படியான தகவல்களை நகைச்சுவைப் பகுதியில் பதிக்கிறேன்.

அக்னி
10-11-2007, 10:17 PM
நல்ல முரண்...

சிங்கள பேரினவாதத்தின் பார்வையில், பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூட ஒழுக்கத்திற்கான விருதுகளாகத் தெரிகின்றன.
ஜனாதிபதி மகிந்த அவர்களின் ஒப்புதல் வாக்குமூலமாகக் கொள்ளலாமோ..?

ஐ.நா. விற்காகச் செல்லும்போதே இந்நிலை என்றால், அவிழ்த்து விட்டிருக்கும் நிலையில் எப்படியிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ???