PDA

View Full Version : "கம்ப்யூட்டர்கேம்' இனால் மன அழுத்தம்.



mgandhi
02-11-2007, 06:40 PM
"கம்ப்யூட்டர் கேம்' விளையாடினால் மன அழுத்தம் போய்விடுமாம்
டொரன்டோ : "கம்ப்யூட்டர் கேம்' விளையாடினால், மன அழுத்தம் போய்விடும் என்று, கம்ப் யூட்டர் "வீடியோ கேம்' வல்லுனர்கள் கண்டு பிடித் துள்ளனர்.

கனடாவில் உள்ள மான்ட் ரீல் மெக் கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளனர். இதற் காக, "மைண்ட் ஹேபிட்ஸ் கேம்' ஒன்றை வடிவமைத் துள்ளனர். இதற்காக தனி வெப்சைட்டையும் உருவாக்கியுள்ளனர்.மன அழுத்தம் பாதிக்கப்பட்ட யாரும், இந்த கம்ப்யூட்டர் கேம் விளையாடினால் போதும், அவர்களின் முகத் தில் சந்தோஷம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, மன அழுத்தம் குறைகிறது. அதற்காக, "அட்வென்சர்' செய்யக்கூடிய வீடியோ கேம் களை தேர்வு செய்ய வேண் டாம். சிறிதான "வீடியோ கேம்'களை விளையாடினாலே போதும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.தங்கள் ஆய்வுக்காக, 75 பேரிடம் தாங்கள் வடிவமைத்த வீடியோ கேம்களை தந்து விளையாட வைத்துள்ளனர். அவர்கள் 10 நிமிடம் விளையாடியதும், சுலபமான முறையில் ஜெயிக்க முடிந் தது. அப்போது அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட் டது. அதன் விளைவாக மன அழுத்த அளவு குறைந்துள் ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வாரம் வரை, அவர்கள் இப்படி, "கம்ப்யூட்டர் கேம்' விளையாட வைக்கப்பட்டு, அவர்களின் மன அழுத்தம் கணக்கிடப்பட்டது. வாரத்தின் இறுதியில், அந்த அளவு வெகுவாகக் குறைந்திருந்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து வல்லுனர்கள் கூறுகையில், "எந்த ஒரு வீடியோ கேம், கம்ப்யூட்டர் கேம்கள், மனதுக்கு இதமான உணர்வுகளை அளிக்கக்கூடியவை தான். சில கேம்களில் தான் பராக்கிரமத்தைக் காட் டும் வகையில் அதன் போக்கு இருக்கும். அதற்காக, இளைஞர்கள் மூளையை கசக்கி விளையாட வேண்டியிருக் கும். ஆனால், மனதை இதமாக்கக்கூடிய வகையில் சில "கேம்'களை விளையாடினால், அவர்களின் முகபாவம் மாறுகிறது; முகத்தில் மகிழ்ச்சி தவழ்கிறது. அப்போது, மன அழுத்தம் குறைய ஆரம்பிக்கிறது' என்று கூறியுள்ளனர்.

ramanan4u
03-11-2007, 04:19 AM
தகவலுக்கு நன்றி தோழனே

இது உண்மை தான். நானும் வேலை முடிந்து வந்தவுடன் சிறிது நேரம் கணனி விளையாட்டுக்களை விளையாடுவேன் பின்னர் ஒரு மன நிறைவு தென்படும். நீங்களும் ஒரு முறை முயன்று பாருங்கள்

விகடன்
03-11-2007, 05:09 AM
முதல்வேலையாக கணினியில் நில மின் விளையாட்டுக்களை பதிந்துவைத்திடவேண்டியதுதான்.

தகவலிற்கு நன்றி காந்தி

பூமகள்
03-11-2007, 05:39 AM
நல்லதொரு தகவல்..! இன்னும் அந்த பக்கமே போனதில்லை..! விளையாடிப் பார்த்திடுவோமே!!
நன்றிகள் காந்தி அண்ணா.