PDA

View Full Version : வெளிச்சம்



கஜினி
02-11-2007, 09:49 AM
இந்த ஏழை வீட்டிலும்
வெளிச்சம்
தெருவில் தீபாவளி.

யவனிகா
02-11-2007, 09:55 AM
நல்ல கவிதை.வெளியே வெளிச்சம்...மனம் வறுமையால் இருண்டல்லவா கிடக்கிறது ஏழைகளுக்கு!

ஏழை வீட்டிலும் தீபாவளி
கூரைப் பொத்தலில் வழியே
காணக் கிடைக்கிறது
யாரோ அனுப்பிய ராக்கெட்.

Narathar
02-11-2007, 09:59 AM
தீபத்திருநாளில்
ஒரு பக்கட் வான வேடிக்கை வாங்கும் பணத்தில்
ஒரு ஏழைச்சிறுவனின் பசியாற்ற கங்கணம் கட்டுவோம்

கஜினி
02-11-2007, 10:02 AM
நல்ல கவிதை.வெளியே வெளிச்சம்...மனம் வறுமையால் இருண்டல்லவா கிடக்கிறது ஏழைகளுக்கு!

ஏழை வீட்டிலும் தீபாவளி
கூரைப் பொத்தலில் வழியே
காணக் கிடைக்கிறது
யாரோ அனுப்பிய ராக்கெட்.

ஆம் அக்கா. அவர்கள் வாழ்விலும் வெளிச்சம் பிறக்கவேண்டும்.

கஜினி
02-11-2007, 10:03 AM
தீபத்திருநாளில்
ஒரு பக்கட் வான வேடிக்கை வாங்கும் பணத்தில்
ஒரு ஏழைச்சிறுவனின் பசியாற்ற கங்கணம் கட்டுவோம்

உங்களது ஆதங்கம் நிச்சயம் நிறைவேற வேண்டும்.நன்றி நாரதர் அவர்களே.

பூமகள்
02-11-2007, 10:19 AM
நல்ல குறுங்கவி..!! வாழ்த்துகள் கஜினி.
"ஏழைகளின்
கனவு மெய்பட வேண்டும்..!
கைவசமாவது விரைவில் வேண்டும்..!
தனமும் இன்பமும் வேண்டும்..!
தரணியிலே பெருமை வேண்டும்..!!
மண் பயனுற வேண்டும்..!
வானகமிங்கு தென்பட வேண்டும்..!
உண்மை நின்றிட வேண்டும்!"
என்ற வரிகளுக்கு ஏற்ப, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடிவெடுத்து ஒரு ஏழைக் குழந்தையின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றுவோமே...!!

கஜினி
02-11-2007, 10:21 AM
மிக்க நன்றி பூமகள் அவர்களே. உங்கள் பின்னூட்டக்கவி அருமை. ஏழைகளின் கனவு மெய்ப்பட வேண்டும்.

ஓவியன்
02-11-2007, 11:22 AM
வீதியில் வீணே வெடிக்கும் வெடிக்கு செலவான பணம், பணமாக அன்றி உணவாக வருமெனின் எத்தனை வீட்டு விளக்குகள் பிரகாசிக்கும்...

நாம் அனைவரும் உணரும் நிலை வருமா........???

வரவேண்டுமென ஏங்கி கஜனி வடித்த கவிதை, காலத்தால் பிறந்தது...

பாராட்டுக்கள் கஜனி!!!

இதே பாணியிலான இன்னும் சில குறுங்கவிகளை இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12668) இந்த திரியிலும் காணலாம்.

கஜினி
02-11-2007, 11:44 AM
நன்றி ஓவியன் அவர்களே.

அறிஞர்
02-11-2007, 01:45 PM
இலவச வெளிச்சம் - ஒரு நாள்
நிரந்த வெளிச்சம் எங்கும், என்றும் நிறைய வேண்டும் என்பதே எம் ஆவல்...

அமரன்
02-11-2007, 06:16 PM
வெளிச்சம் மட்டுமா...

அடுத்தவன் சந்தோஷிக்க
கொளுத்திய பட்டாசின் பரிசாக
உடலில் ஏற்படும் காயம்.

சில வீட்டுக் கூரைகளின்
கார்த்திகைதீபக் கொண்டாட்டம்..!

அதனால்
மனதில் ஏற்படும் ரணம்..!

அப்பப்பா வேண்டாம்
இப்படி ஒரு தீபாவளி..!

கஜினியின் தீபாவளி
வலியுடனான கொண்டாடக்களி....!

கஜினி
03-11-2007, 09:21 AM
மிக்க நன்றி நண்பர்களே.

சுகந்தப்ரீதன்
03-11-2007, 10:03 AM
குறுங்கவி அருமை கஜினி.. வாழ்த்துக்கள்..!