PDA

View Full Version : நல்லெண்ணெய்mgandhi
01-11-2007, 07:47 PM
பண்டைய பண்பாடுகளில் உணவு உள்பட அனைத்திலும் ஒரு காரணம், நன்மை இல்லாமல் இல்லை. உதாரணம் எள்ளிலிருந்து பெறப்படும் நல்ல எண்ணெய் இன்று வழக்கத்திலிருந்து மறைந்துவிடும் நிலையில் உள்ளது.

எண்ணெய் வகைகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது நல்லெண்ணெய். இது மற்ற எண்ணெய்கள் போல் இரத்தத்தில் கொழுப்பு சேர விடுவதில்லை, மாறாக கொழுப்பை அகற்றி இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. முன்பெல்லாம் இந்த எண்ணெய் மட்டுமே உணவில் சேர்த்து கொள்ளப்பட்டது. இன்று மாற்று எண்ணெய்களே அதிகம் புழக்கத்தில் உள்ளது. கிராமப் புறங்களில் பால் சுரக்கும் பசுக்களுக்கு எள் புண்ணாக்கு சிறிதளவும் அத்துடன் தேங்காய், கடலை புண்ணாக்கும் சேர்த்து கொடுப்பார்கள். அதிகம் எள் புண்ணாக்கு கொடுத்தால் மாட்டின் இரத்தத்தில் உள்ள கொழுப்பை திரித்து பால் வழியே கொண்டு வந்து விடும். பால் கொழுப்பு நிறைந்து தரமானதாக இருக்கும், ஆனால் மாடு இளைத்துவிடும். இதனால் எள் புண்ணாக்கு அதிகம் கொடுக்க மாட்டார்கள்.

பூப்பெய்தும் இளம் பெண்களுக்கு சுத்தமான நல்ல எண்ணெய் குடிப்பதற்கு கொடுப்பார்க*ள். ஏனென்றால் இது (மூல) அண்ட அணு உற்பத்தி உறுப்புகளை சீராக செயல்பட வைக்கும், கருப்பையில் அழுக்கை அகற்றும் தன்மை வாய்ந்தது. நல்ல எண்ணெய் குளியல் மூல சூட்டை தணிக்கும், உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி மயிர் கண்களை சுத்தமாக வைத்திருக்கும். இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக இருக்கும்.

கோயில்களில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றும் வழக்கமும் ஒரு சிறப்பு அம்சமேயாகும். தீபம் எரிந்த எண்ணெய் பசை (ஆவி நிலையில்) கருவறையின் சுவர்களில் உள்ள கல்லின் மீது படியும், அத்துடன் கற்பூரம் எரிந்த சுடர் படிந்து கொள்ளும். இவை கல்லின் குணத்துடன் சேர்ந்து இறைவனை வழிபட கருவறைக்குள் செல்லும் அனைவருக்கும் இது ஆரோக்கியத்தை அளிக்க வல்லதாகும்.
இதனால் தான் இதர்க்கு 'நல்லெண்ணெய்' என பெயர் வந்தது.

ஓவியன்
01-11-2007, 08:14 PM
பலனறிந்து, குணமறிந்து தான் பெயர் வைக்கப்பட்டது போலும் "நல்ல என்ணை" என...

நல்ல எண்ணை புகழ் அறிய வைத்தமைக்கு நன்றிகள் பல...

நேசம்
01-11-2007, 08:41 PM
. இவை கல்லின் குணத்துடன் சேர்ந்து இறைவனை வழிபட கருவறைக்குள் செல்லும் அனைவருக்கும் இது ஆரோக்கியத்தை அளிக்க வல்லதாகும்.
இதனால் தான் இதர்க்கு 'நல்லெண்ணெய்' என பெயர் வந்தது.
முன்னோர்கள் ஏதும் செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும்.நல்ல எண்ணெய் பற்றி நல்ல விசயம் தந்த காந்தி அவர்களுக்கு நன்றி

யவனிகா
02-11-2007, 12:25 PM
நல்ல தகவல்கள்.நல்லெண்ணையைக் கொப்பளித்தல் மறந்து விட்டீர்களே? அதுவும் உடலுக்கு நல்லது தானே?

கஜினி
02-11-2007, 12:31 PM
நல்லெண்ணைல இவ்வளவு இருக்கா. உண்மைலேயே நல்ல எண்ணைதான்.

அமரன்
02-11-2007, 06:06 PM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே...!
ஊரில் இருக்கும்போது சமையல் தொடங்கி தலைக்கு வைப்பது ஈறாக நல்லெண்ணெய்தான். உடலில் என்ன ஒரு குளிர்ச்சி. மீட்டிய அண்ணனுக்கு நன்றி.

மாதவர்
04-11-2007, 02:33 PM
நல்ல தகவல்

இளந்தமிழ்ச்செல்வன்
05-01-2008, 08:51 PM
எள்+நெய் மிகவும் நல்ல பலன்களை அளிப்பதால் நல்ல + எள்+ நெ ய்= = நல்ல எண்ணெய் என்று மறுவியது என்பர்.

aren
06-01-2008, 12:00 AM
நிச்சயம் அனைவரும் நல்லெண்ணெயை மறுபடியும் உபயோகிக்க ஆரம்பிக்கவேண்டும்.

Dewakar
08-01-2008, 08:53 AM
நன்றி மோகன் காந்தி அவர்களே உங்களின் நல்லெண்ணை பற்றிய நல்ல செய்திக்கு...

என்றும் அன்புடன்
ரமேஸ்

ஓவியன்
08-01-2008, 09:01 AM
NANDRI MOHAN GHANDHI AVARGALE UNGALIN NALLA ENNAI PATRI NALLA CHEITHIKKU

ENDRUM ANBUDAN
RAMESH

வாருங்கள் திவாகர்...!!

இங்கே ஆங்கிலப் பதிவுகளுக்கு அனுமதி கிடையாது. ஆகவே, மன்றம் பற்றி அறியவும் தமிழில் தட்டச்சு செய்யவும் இந்த திரியினை சுட்டுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198

பின்னர் புதியவர்கள் அறிமுகப்பகுதியில் உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தைத் தந்து நம்முடன் இணைந்திருங்கள்.

அனுராகவன்
24-01-2008, 11:11 PM
வாவ்..
நான் என்னமோ தலைக்கும்,பூஜைக்குதான் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன்.
ம்ம் இவ்வளவு இருக்கா....வியப்புதான்.
ம்ம் என் நன்றி

இராஜேஷ்
10-05-2008, 05:19 AM
ம்ம் திபவளிக்கு எடுக்கும் குளியலை நியாபகப் படுத்துகிறது

அன்புடன்
இராஜேஷ்