PDA

View Full Version : _.-=:இயக்கமற்ற சூழல்::=-._ System idle Process ஏன்



suraj
01-11-2007, 06:43 AM
_.-=:இயக்கமற்ற சூழல்::=-._

ஏன் இது ஏற்படுகிறது.

நான் பல ஆங்கில தளங்களில் உலவிட்டேன் ஆனால் சில வற்றிற்கு சரியாக மற்றும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

1. System idle process- 95-100% . இது ஏன் வருகிறது.
2. இது கணினிக்கு நன்மையா? தீமையா?

நன்றி.

அன்புரசிகன்
01-11-2007, 06:59 AM
உங்கள் கணிணி idle நிலைக்கு செல்வது என்னைப்பொறுத்தவரைக்கும் நல்லதே... ஆனால் நீங்கள் எதை வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள் என்று புரியவில்லை...

95-100 என எங்குள்ளது..? எனக்கு தெரியவில்லை...

சாதாரணமாக உங்கள் கணிணி screen server வரும் தருணத்தில் அது idle நிலையை அடையும் என்று நினைக்கிறேன்...

suraj
01-11-2007, 07:36 AM
சாதாரணமாக உங்கள் கணிணி screen server வரும் தருணத்தில் அது idle நிலையை அடையும் என்று நினைக்கிறேன்...
இல்லை நண்பரே! நான் screen server டிசேபிள் செய்துள்ளேன்.


95-100 என எங்குள்ளது..? எனக்கு தெரியவில்லை...
டாஸ்க் மெனேஜரில்
http://i83.photobucket.com/albums/j313/suraj_pic/tamilmantram.jpg

நன்றி

praveen
01-11-2007, 08:08 AM
நான் தான் ஏற்கெனவே பதில் சொன்னேனே, மறுபடியும் அதே கேள்வி அதே பதில், உங்கள் சிஸ்டம் தற்போதைய வேலைக்கு செலவழித்ததை போக மீதி இன்னும் எவ்வளவு வேலை சி.பி.யூ மூலம் செய்ய முடியும் என்பதை காட்டுவது.

ஒரு DVDயை DIVX ஆக மாற்றுங்கள் அல்லது ஒரு பெரிய போல்டரை ஹை கம்ப்ரஸன் மோடில் வைத்து சுறுக்குங்கள் (அது எப்படி என்று கேட்டு ஒரு திரி பதிந்து விடாதீர்கள்). அப்படி மாறிக்கொண்டிருக்கும் போது பாருங்கள் அது அப்போதும் 90-95 லே இருக்கிறதா என்று.

இது மொத்தம் 100ல் வேலை செய்தது போக ஐடிலாக இருக்கும் அளவு பற்றியது. வீன் பயம் வேண்டாம். உங்கள் கணினியில் வைரஸ்/ஹேக்கர் டூல் அல்லது தேவையில்லாமல் சிஸ்டம் ரீசோர்ஸை எடுத்து கொள்வது போன்ற மென்பொருள் இல்லை என்று எடுத்து கொள்ளுங்கள்.

சாம்பவி
01-11-2007, 10:41 AM
system idle process என்பது கணினி., வேலை ஏதும் இன்றி , வெட்டியாய் .... சும்மா இருக்கும் நேரத்தை அளவிடும் கவுண்ட்டர் அவ்வளவே... ( நம்ம பொள்ளாச்சி கவுண்டர் இல்லீங்கோ... ! .. இது counter !!!! ) !

task manager இல் அது காட்டும் எண்கள், இந்த சும்மா இருக்கும் தருணத்தின் அளவே அன்றி.. idle process இயங்க எடுத்துக் கொள்ளும் நேரம் அல்ல... ! ( மற்ற செயல்பாடுகள் அவை இயங்க எடுத்துக் கொள்ளும் கால அளவையும், இன்ன பிற resourceகளின் அளவையும் காட்டுகின்றன... மற்றபடி microsoft is notoriously well known for keeping misleading names என்பது தெரிந்த விஷயம் தானே...! )


மற்ற செயல்பாடுகளின் (processes) இயக்கத்தைப் பொறுத்து இது கூடவும் குறையவும் செய்கிறது...
வைரஸ்களின் கடைக் கண் பார்வை படுமேயானால் இவை வெகு வேகத்தில் ,
அண்டார்டிக் தேசத்து பாதரசமாய் படுத்து விடும்... !
இது அபாயத்தின் அறிகுறி... !

உங்கள் கணினி 97 சதவீதம் சும்மா இருக்கிறதென்றால், சந்தோஷப்படுங்கள்... !அலாவுதினின் அற்புத விளக்கு பூதம் மாதிரி தங்களின் ஆணையை சிரமேற்கொண்டு இன்னும் இன்னும் செய்யக் காத்திருக்கிறது என்று பொருள்.

சும்மா இருத்தல் சுகம் என்று சும்மாவா சொன்னார்கள்... !