PDA

View Full Version : பிஎஸ்என்எல் செல்போன்களுக்கு புதிய சலுகை



mgandhi
01-11-2007, 03:58 AM
பி.எஸ்.என்.எல். செல்போன்களுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு

தஞ்சாவூர்,நவ.1-

ரீசார்ஜ் கூப்பன் மற்றும் டாப்அப் கார்டுகளின் மதிப்பு இன்று முதல் மாற்றப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல். அறிவித்து உள்ளது.

பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

தஞ்சை பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு மாவட்ட பொது மேலாளர் சத்யநாராயணா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல். முறைப்படுத்தப்பட்ட பிரீபெய்டு ரீசார்ஜ் மற்றும் டாப்அப் கூப்பன்களின் மதிப்பு கீழ்கண்டவாறு இன்று (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகின்றது.

ரூ.5 ஆயிரம் (வரி உள்பட ரூ.5 ஆயிரத்து 618) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன் டாக்வேல் ரூ.6 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.6 ஆயிரத்து 700-க்கு வழங்கப்படுகிறது. 365 நாட்களுக்கு பதிலாக 450 நாட்கள் வரை பேசிக்கொள்ளலாம். ரூ.3 ஆயிரம் (வரி உள்பட ரூ.3,371) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு 365 நாட்களும், ரூ.2 ஆயிரத்து 500 (வரி உள்பட ரூ.2,809) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு டாக்வேல் ரூ.2 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.2 ஆயிரத்து 50-ம், 300 நாட்கள் வரை பேசிக்கொள்ளலாம்.

ரூ.2 ஆயிரம் (வரி உள்பட ரூ.2247) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு ரூ.2,400 ரூபாய்க்கு, 180 நாட்கள் வரை பேசிக்கொள்ளலாம். ரூ.1000 (வரி உள்பட ரூ.1124) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு ரூ.822-க்கு பதிலாக ரூ.900 ரூபாய்க்கு 120 நாட்கள் பேசிக்கொள்ளலாம். ரூ.500 (வரி உள்பட ரூ.562) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு ரூ.361-க்கு பதிலாக 500 ரூபாய்க்கு 45 நாட்களுக்கு பதிலாக 50 நாட்கள் வரை பேசிக்கொள்ளலாம். ரூ.300 (வரி உள்பட ரூ.337) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு ரூ.175-க்கு பதிலாக 300 ரூபாய்க்கு 30 நாட்களும், ரூ.200 (வரி உள்பட ரூ.225) ரீசார்ஜ் கூப்பனுக்கு ரூ.60-க்கு பதிலாக 130 ரூபாய்க்கு 30 நாட்களும் பேசிக்கொள்ளலாம்.

டாப்அப் கார்டு

ரூ.150 (வரி உள்பட ரூ.169) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு 75 ரூபாய்க்கு 30 நாட்களும், ரூ.100 (வரி உள்பட ரூ.112) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு 30 ரூபாய்க்கு 30 நாட்களும், ரூ.70 (வரி உள்பட ரூ.79) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு 30 ரூபாய்க்கு 15 நாட்களும், ரூ.50 (வரி உள்பட ரூ.56) மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பனுக்கு 25 ரூபாய்க்கு 10 நாட்களும் டாக்வேல் வழங்கப்படுகிறது.

டாப்அப் கார்டு ரூ.562-க்கு 600 ரூபாயும், ரூ.225 கார்டுக்கு 220 ரூபாயும், ரூ..112 கார்டுக்கு 100 ரூபாயும், ரூ.56 கார்டுக்கு 50 ரூபாய்க்கும், எலக்ட்ரானிக் டாப்அப் ரூ.22 கார்டுக்கு 18 ரூபாய்க்கும், ரூ.11 கார்டுக்கு 8 ரூபாய்க்கும் டாக்வேல் வழங்கப்படுகிறது.

கட்டண சலுகை

லைப்டைம் ஆனந்த் தவிர மற்ற பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 1-11-2007 முதல் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை எஸ்.எம்.எஸ். மற்றும் பேச 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. எக்சல் சுமோ பிளானில் ரூ.249-க்கு ரூ.30 டாக்வேல்வுடன் 365 இலவச எஸ்.எம்.எஸ். சலுகையுடன் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. தமிழகத்திற்குள் பேச 1 நிமிடத்திற்கு 99 பைசா. விரைவில் லொகேஷன் பேஸ்டு மற்றும் இன்ஸ்டென்ட் மெசேஜ் பிரசண்ட் சர்வீஸ் தொடங்கப்பட உள்ளது. மேலும் விவரம் அறிய அந்தந்த பகுதி வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும். செல்நம்பர் 94861-03246, தஞ்சாவூர் 275300, மன்னார்குடி 04367-224600, திருவாரூர் 04366-251921, பட்டுக்கோட்டை 04373-252400, பாபநாசம் 04374-220899, ஒரத்தநாடு 04372-234100.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

நன்றி தினதந்தி

ராஜா
01-11-2007, 05:41 AM
மிகப் பயனுள்ள தெளிவான விவரங்கள்..

நன்றி மோகன் காந்தியாரே..!

மன்மதன்
01-11-2007, 06:29 AM
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இது இனிய செய்தி..