PDA

View Full Version : முரண்



ஆதி
31-10-2007, 05:34 PM
என் குணங்கள்
முள் முளைத்து
கீறிவிடுகின்றன் உன்னை...

அரக்கத்தனம் வழியும்
அந்த பொழுதுகளில்
பேய்க்குரல் கொண்டு
அலறும் என்னை
எப்படி சகிக்கிறாயோ...

நீ எண்ணிய கணவனின்
அம்சம்
ஒரு விழுக்காடாவது
என்னிடம் உள்ளதா ?

ஒவ்வொரு பெண்ணுக்கும்
கணவன் நிறைவேற்ற வேண்டிய
விருப்பங்கள் இருக்கும்..
அதில் எத்தனை
நான் நிறைவேற்றி இருக்கிறேன் ?

உன் கனவு கோட்டையின்
எத்தனை சுவர்களை
நான் தகர்த்திருக்கிறேனோ ?

என் கோபம் உடைத்து
கண்ணாடித் துண்டுகளாய்
உன் வெறும் மனதில்
வீசிய வார்த்தைகளை எண்ணுகையில்
இதயத்தை மெல்ல அறுக்கிறது
நீ அழுத கண்ணீர் துளிகள்...

நீயோ-
வழக்கம் போல்
என்னை எழுப்பி
எதுவுமே நடக்காத தோரணையில்
காப்பி தருகிறாய்
சிரித்த முகத்துடன்.....

-நட்புடன் அன்பன் ஆதி

பூமகள்
31-10-2007, 05:46 PM
வணக்கம் ஆதி..!!
வந்தவுடனே ஒரு கவிதை... முரணாக வந்து விழுந்திருக்கிறது முரணான பகுதியில்!!
இக்கவி இருக்க வேண்டிய இடம் புதிய கவிதைகள், பாடல்கள் பகுதி.
மன்றத்தின் பொறுப்பாளர்கள் இக்கவியை தகுந்த இடத்திற்கு மாற்ற உதவுவார்கள்.
கவியும் கருத்தும் அற்புதம்..!!
விரிவான பின்னூட்டம் பின்பு தருகிறேன்.

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.. ஆதி!!

ஆதி
31-10-2007, 05:57 PM
தவறான பகுதியில் துவங்கிவிட்டேனென சுட்டிகாட்டியதற்கு நன்றி பூமகள்..
இனி இப்படி நிகழாமல் கவனித்து கொள்கிறேன்..

-நட்புடன் ஆதி

அறிஞர்
31-10-2007, 06:43 PM
அருமையான வரிகள் ஆதி....

மனைவி கூட இருக்கும்பொழுது...
பாராட்டாத, அவரின் விருப்பத்தை மதிக்காத
பலர் இன்னும் இப்புவியில் இருக்கிறார்கள்...

அமரன்
31-10-2007, 07:25 PM
இதுதான் பெண்மை என்பது. எப்படி இம்சித்தாலும் பெண்மைக்குள் இருக்கும் பொறுமையை அதிகமாகின்றது. சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. இதைத்தான் சிலர் பெண்ணடிமைத்தனம் என்ற பெயரில் எதிர்க்கின்றார்கள். இப்படி இல்லாத பட்சத்தில் அடங்காப்பிடாரி என்று பட்டம் கட்டுகின்றார்கள். இருப்பதையும் இல்லாததையும் நான் தாய்மையாக நினைத்து பெருமிதம் கொள்கின்றேன். அப்பப்போ அறுவைச்சிகிச்சையும் அவசியம் அல்லவா?

பெண்ணினத்தின் ஒவ்வொரு நிலையும் எதையாவது பிறப்பிக்கின்றது. எதையாவது வளர்க்கின்றது. எதையாவது செப்பனிடுகிறது. ஆணுக்கு இணையாக இருந்து அவனை மேம்படுத்த துணையாக இருக்கும் நிலைதான் இது.

இது தப்பில்லை. இப்படி இல்லாது விட்டாலும் தப்பில்லை. பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதுமில்லை. இப்படி இல்லாதவல் பெண் இல்லை என்பதுமில்லை....இது முரண் இல்லை. முன்னுதாரணம். மன்றத்தில் ஆதியின் ஆதிக்கவிதை நல்ல கருத்துடன் அமைந்து சிறக்கின்றது. பாராட்டுகின்றேன் ஆதி.

கட்டுமானப் பொருட்களின் செறிவைக்கூட்டி அளவைக் குறைத்து இருந்தால் சிறப்பு இன்னும் பெருக்கம் அடைந்திருக்குமோ..?

ஆதி உங்கள் தனிமடல்பெட்டியை பாருங்கள். தனிமடல் பற்றி அறிய மன்றவழிகாட்டியை பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198)

ஓவியன்
04-11-2007, 02:10 AM
முரண் என்ற தலைப்பில் வந்த முன்னுதாரணக் கவி...!! (நன்றி அமர்..!!).

குடும்பம் என்பதே ஒரு அழகிய பறவைக் கூடு போன்றது....
நம்பிக்கை, விட்டுக்கொடுப்பு, அன்பு, உரிமை, உடமை என்ற குச்சிகளால் பார்த்துப் பார்த்துக் கட்டவேண்டும்....!!

அழகாக கூடுகட்டத் தெரிந்தவன் பாக்கியசாலி, இல்லை இந்தக் கவி நாயகி போல் நற்பண்பு மிகு மனைவி அமைந்தும் அவளை விட்டுக் கொடுக்காது வாழ எத்தனிப்பவன் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியா "துர்பாக்கியசாலி" யே...!!

நல்லதொரு கவிதைக்கு என் மனதார்ந்த பாராட்டுக்கள் ஆதி, இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள்.

யவனிகா
04-11-2007, 03:27 AM
நல்ல கவிதை..பொதுவாகவே பெண் கவிகள் ஆண்களின் அலட்சியப் போக்கைக் கவிதைச் சாட்டையெடுத்து விளாசித்தீர்க்கும் போது...ஆண் ஒருவனின் மென்மையான...செயலுக்காய் வருத்தப்படும் மனதை படம் பிடிக்கும் இந்தப் படைப்பு நல்லதொரு படைப்பு!

ஆதி
05-11-2007, 08:39 AM
ஊக்கதிற்கும் வாழ்த்துக்களுக்கும் அனைவருக்கும் நன்றி

இளசு
08-11-2007, 09:50 AM
குறைகளும் நிவர்த்திகளும்
மீண்டும் மீண்டும் மாறி மாறிவர
நித்தம் நடக்கும் பரமபதம் இல்லறம்..
இவ்வகைச் சலனங்களால் இல்லங்கள்
இருக்கின்றன இன்னும் ஆசிரமங்களாகாமல்...

பாராட்டுகள் ஆதி!

அக்னி
10-11-2007, 10:41 PM
அடக்கியே ஆளும் ஆண்மை...
அடங்கியே வாழும் பெண்மை...
இரண்டுமே ஒவ்வா, வாழ்விற்கு...

குற்றம் இல்லாமல்,
எதற்கு அழும்வரை வதைக்கவேண்டும்..?
குற்றம் இல்லையேல்,
எதற்கு அழுகையில் முகம் மறைக்க வேண்டும்..?

ஆண்மையின் மிஞ்சிய வன்மையும்,
பெண்மையின் மிஞ்சிய மென்மையும்,
இல்லறத்தை மூடும் கருமைகளே...

பாராட்டுக்கள் ஆதி...
பின்னூட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் ஒளிர்கின்றன... அனைவருக்கும் பாராட்டுக்கள்...

சூரியன்
11-11-2007, 04:50 AM
கவிதையின் தலைப்பையும்,
கவிதையையும் அழகாக தந்துள்ளீர்.
பாராட்டுக்கள் ஆதி.

ஆதி
12-11-2007, 02:33 AM
குளிர் நாள் சூரியன் போல் வந்து தந்த இதமான வார்த்தைகளுக்கு நன்றி..

நேசம்
12-11-2007, 02:45 AM
மனித படைப்பில் பெண் ஏன் உயர்வாக போற்றப்படுகிறாள் என்பதை பார்க்கும் போது அவளீன் பொறுமை,சகிப்புதன்மை, விட்டு கொடுத்தல் போன்ற குணங்கள் ஆண்களை காட்டிலும் கூடுதலாக இருப்பது தான்.இதை கண்டு கண்வன் வருத்த படுவதை கவிதையாக தந்த ஆதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் − பாரட்டுக்கள்

ஆதி
13-11-2007, 06:40 AM
நேசமான வாழ்த்துகளுக்கும் ஊக்கத்திற்கும்.. நன்றி..