PDA

View Full Version : நகைச்சுவை

sadagopan
31-10-2007, 08:25 AM
மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

****

ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.

ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.

****

நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.
நபர் : ??!!

****

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.

****

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

*******

lolluvathiyar
31-10-2007, 10:09 AM
அருமையா ஜொக்கள் சடகோபன் அதுவும் முதல் ஜோக் சூப்பரோ சூப்பர் நிரைய கனவன்மார்கள் ரசித்து சிரித்திருப்பார்கள். வாழ்த்துகள் தொடர்ந்து நல்ல ஜோக்களை தாருங்கள்

நேசம்
31-10-2007, 10:15 AM
அருமையான நகைச்சுவை துணுக்கள். வாழ்த்துக்கள்

நுரையீரல்
31-10-2007, 10:19 AM
சடகோபன் அவர்களின் ஜோக்குகள் உண்மையாலுமே சிரிக்க வைத்தது. அதிலயும் குறிப்பாக வாத்தியாரையும், என்னையும் (அவரின் மாணவர்) சிரிக்க வைத்த ஜோக் முதல் ஜோக்.

கஜினி
31-10-2007, 10:27 AM
நீங்களும் கண்டிப்பா சிரிச்சிருப்பீங்களே லொள்ளு சார். ஹாஹா. எல்லாமே நல்ல நகைச்சுவைகள். கடைசி நகைச்சுவையில் எதார்த்தம் இருந்தது.

யவனிகா
31-10-2007, 11:22 AM
சடகோபன் உண்மையச் சொல்லுங்க! முதல் ஜோக்கு உங்க வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் தானே!

மனோஜ்
31-10-2007, 02:14 PM
அருமையே அருமை அசத்தலுக்கு நன்றி

sadagopan
13-11-2007, 07:58 AM
ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?
திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு, என் மாமியார் படத்தை மாட்டி வெச்சிருந்தேன்.
************************************************
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
************************************************
என்னுடைய அலாரக்கடிகாரம் முதல்முறையாக இன்று என்னை எழுப்பியது.
எப்படி?
என் மனைவி அதைக்கொண்டு என் மண்டையில் ஓங்கி ஓர் அடி கொடுத்தாள்.
**************************************
ஒருவர் : வாங்க, வாங்க!
மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!
ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!
மற்றவர் : சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!

***************************************
நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
****************************************
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

*******************************************

மனோஜ்
13-11-2007, 08:17 AM
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
அப்பா சொல் கேட்கும் அருமைபிள்ளை சூப்பர்
ஆனா மத்தது எதுவும் கேட்கமாட்டான்
நன்றி சடகோபன்

மலர்
13-11-2007, 09:08 AM
மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

சூப்பர் சடகோபன்....
உங்க மனைவி உங்களை கொல்லாமலா விட்டாங்க......???

மலர்
13-11-2007, 10:05 AM
நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

ஆகா அவரும் நம்ம வாத்தியாரு மாதிரி தானா

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

அப்பா சொல்லை தட்டாத நல்ல புள்ளை..
மலர மாதிரி....

xavier_raja
13-11-2007, 10:38 AM
சூப்பரான ஜோக்குகள், அதிலும் அந்த முதல் ஜோக் ஆஹா, எத்தனை பேருடைய வயித்தெரிச்சலை கொட்டிக்கொண்டதோ :)

மன்மதன்
13-11-2007, 12:48 PM
நல்ல ஜோக்ஸ்.. இதில் பல சிரிப்புகள் எஸ்.எம்.எஸ்ஸாக உலாவுகிறது...