PDA

View Full Version : இரத்ததானம் கொடுக்கலாமா?



xavier_raja
30-10-2007, 11:20 AM
இது சமீபத்தில் நான் ஒரு புத்தகத்தில் படித்தது.. பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..


யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்?

л A குரூப்:

இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத்தான் கொடுக்க வேண்டும்.

л B குரூப்:

இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும்.

л AB குரூப்:

இவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம்.

л O குரூப்:

இவர்களுக்கு O குரூப் இரத்தம் தான் கொடுக்கவேண்டும்.

Сஆர்எச்Т என்று சொல்கிறார்களே அது என்ன?

இரத்தத்தில் கி,ஙி,ளி வகையைத் தவிர, பார்க்க வேண்டிய மற்றொரு ஆன்டிஜனும் இருக்கிறது. ரிசங் என்ற ஒரு குரங்கிலிருந்து இந்த ஆன்டிஜன் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு ஆர்எச் என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்எச், இரத்த சிவப்பு அணுக்களின் தோலின் மேல் சிலருக்கு இருக்கும். சிலருக்கு இருக்காது. இதைக் குறிப்பிட A+ மற்றும் A என்று பயன்படுத்துகிறார்கள்.

யார் யார் இரத்த தானம் செய்யலாம்?

л நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

л 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

л குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

л இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.

எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடம்.

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?

20 நிமிடம்.

இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?

350 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. எடுக்கப்படுகிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.

இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?

10 லிருந்து 21 நாட்களில்.

இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயிரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே?

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.

சின்னச்சின்ன உடல்நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்_டை பயன்படுத்துங்கள்.

л சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

л ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

л ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

л குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

л அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

л குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

л பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

л சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

л பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

л பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

л இதய நோய்கள் _ வேண்டாம்.

л இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

л வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம். மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

л தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

л நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

л மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

л மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.

л காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.

மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

л சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

л ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

л நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.

л இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

л ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

л இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

л நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.

л ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.

3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

л இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.

mgandhi
07-11-2007, 06:01 PM
தகவலுக்கு நன்றி

ропро╡ройро┐роХро╛
09-11-2007, 10:26 AM
உபயோகமான தகவல்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி,

роЪрпВро░ро┐ропройрпН
09-11-2007, 10:32 AM
மிகவும் உபயோகமான தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.

роирпЗроЪроорпН
09-11-2007, 01:31 PM
சில விஷயங்கல் அறியாதவையாக உள்ளன.பகிர்ந்த மோகன அவர்களுக்கு நன்றி