PDA

View Full Version : ஹலோ! நீங்க எங்க இருக்கீங்க இப்ப...? மொபைலில் இ



mgandhi
29-10-2007, 05:48 PM
ஹலோ! நீங்க எங்க இருக்கீங்க இப்ப...? மொபைலில் இனி கேட்கவே வேணாம்!
நியூயார்க் : "ஹலோ! நீங்க எங்கேயிருந்து பேசறீங்க, இப்ப எங்கே இருக்கீங்க...?' என்று, மொபைல் போனில் கேட்காதவர்கள் இருக்க முடியாது.

ஆனால், எதிர்காலத்தில், இப்படி கேட்பதற்கு தேவையே இருக்காது என்று தோன்றுகிறது. ஆம்! அதற்கான தொழில்நுட்ப வசதியும் மொபைல் போனில் தரப்பட்டு விடும்.அமெரிக்காவில், சில மொபைல் சேவை நிறுவனங்கள், இந்த வசதியை இப்போது அளித்துள்ளன. சந்தா தொகை கட்டி, அந்த நிறுவனங்களின் சேவையை, மொபைல் போன் வைத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.உங்கள் உறவினர், நண்பர்கள், நீங்கள் இருக்கும் இடத்தை அறிய, தங்கள் மொபைல் போனில், இந்த சேவையை பயன்படுத்திக் கொண்டாலே போதும், நீங்கள் இருக்குமிடம் தெரிந்துவிடும். உங்கள் போன் எண்ணை "டைப்' செய்தவுடன், நீங்கள் இருக்குமிடம் தெரிந்துவிடும். அனாவசியமாக போனில் கேட்க தேவையில்லை.அதுபோல, உங்கள் உறவினர், நண்பர்கள் இருக்குமிடம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இதில் சில பிரச்னைகளும் உள்ளன. பாதுகாப்பு அபாயங்களும் உள்ளன. அதனால், மிகுந்த கண்காணிப்புடன் தான் இந்த சேவையை அளிக்கின்றன இந்நிறுவனங்கள்.இளம் வயதினர், இந்த சேவையை விரும்பவில்லை. தாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை மற்றவர் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை என்பது தான் அதற்கு காரணம். அதிலும், குறிப்பாக, பெற்றோர், தங்கள் நடமாட்டம் பற்றி அறியக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.இந்த தொழில்நுட்ப வசதி, எதிர்காலத்தில் இந்தியாவிலும் வந்துவிடும் என்பது நிச்சயம்.
நன்றி தினமலர்

அன்புரசிகன்
29-10-2007, 05:50 PM
அடக்கடவுளே.... சூப்பரா இருக்கே.....

பகிர்ந்து கொண்ட காந்திக்கு நன்றிகள்...

மனோஜ்
29-10-2007, 06:50 PM
ஹஹஹ வண்டவால எல்ல தன்டவாலம் ஏறிடும் சூப்பர்
தகவலுக்கு நன்றி அண்ணா

அமரன்
29-10-2007, 07:34 PM
அண்மையில் ஈழத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் பேசும்போது டயலொக் அலைபேசி வழங்கி இதை அறிமுகப்படுத்தும் சாத்தியம் உள்ளதாகத் தெரிவித்தார். எப்படிப்பா இது என்று தொலைபேசியில் மூக்கை தேய்த்தேன். அமெரிக்கக்கர்கள் செயல்வடிவம் கொடுத்துவிட்டார்கள். பகிர்வுக்கு நன்றி காந்தியண்ணா.

ஜெயாஸ்தா
30-10-2007, 05:20 AM
இந்தியாவிலும் இதை விரைவில் கொடுக்கப்பபோகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் மற்றவர்கள் இருக்கும் இடத்தை அவர்கள் அனுமதித்தால்தான் தெரிந்துகொள்ளமுடியும் என்ற நிபந்தையின் பேரில் அறிமுகப்படுத்தப் போகிறார்களாம்.

lolluvathiyar
30-10-2007, 07:52 AM
அப்ப இனி பொய் பேச முடியாதா? மொபைலின் முக்கிய பயனே கூசாம பொய் பேசரது தான். எங்கிருங்கீனனு கேட்டவுடனே நாம கூசாம வெளியில இருக்கோம் சொல்லி தானே தப்பிக்கரோம்