PDA

View Full Version : விமான பயிற்சி அகாடமி : ஜெட் ஏர்வேஸ் அமைக்க



சூரியன்
29-10-2007, 04:32 PM
http://www.dinamalarbiz.com/admin/news/9825861.jpg

தனியார் விமான கம்பெனியான ஜெட் ஏர்வேஸ், சென்னையில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையத்தை விரைவில் அமைக்கிறது. அதில் விமானங்களை பராமரிக்க, பழுது பார்க்க, சர்வீஸ் செய்ய இருக்கிறார்கள். மேலும் 200 பைலட்களுக்கும், இஞ்சினியர்கள், விமான நிலைய ஊழியர்கள், கேபின் பணியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கவும் இருக்கிறார்கள். நாங்கள் இங்கு ஆரம்பிக்க இருக்கும் அகாடமி, எங்களது சொந்த உபயோகத்திற்கு மட்டும் அல்லாமல் மொத்த விமான துறைக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்படுகிறது என்று ஜெட் ஏர்வேஸ் இன் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்தார். சென்னையில் இருந்து பிரஸ்ஸல்ஸ் வழியாக டோரன்டோ வுக்கு நேரடி விமான சேவையை நேற்று சென்னையில் ஜெட் ஏர்வேஸ் ஆரம்பித்து வைத்தது. இதன் துவக்க விழாவில் கலந்து கொண்ட கோயல் இதை தெரிவித்தார். இந்த அகாடமியை ஆரம்பிக்க ஹைதராபாத் மற்றும் பெங்களூருவும் பொருத்தமான இடங்களாக இருந்தாலும் நாங்கள் சென்னைக்கு தான் முதலிடம் தருகிறோம் என்றார் அவர். இந்த அகாடமி அமைக்க அவர்கள் லூப்தான்சா, சபீனா போன்ற பிரபல விமான கம்பெனிகளின் ஒத்துழைப்பையும் பெற இருக்கிறார்கள். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கணிமொழி, முன்னாள் இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஹிந்து மேலாண்மை இயக்குனர் முரளி ஆகியோரும் கலந்து கொண்டனர். அக்டோபர் 28 முதல் இயக்கப்படும் சென்னை - டோரன்டோ விமானம், வாரத்தில் 4 முறை இயக்கப்படுகிறது. தென் இந்தியாவை வட அமெரிக்காவை இணைக்கும் முதல் தனியார் விமான சர்வீஸ் இதுதான். விரைவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னையில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ ஆகிய நகரங்களுக்கு செல்ல இருக்கிறது. ஜனுவரி முதல் இங்கிருந்து பஹ்ரெய்ன், குவைத், ஓமன் மற்றும் கத்தாருக்கு எங்களது விமானங்களை இயக்க இருக்கிறோம் என்றும் கோயல் தெரிவித்தார்.