PDA

View Full Version : மடிக் கணினி (laptop) வாங்க உதவி தேவை



alaguraj
29-10-2007, 08:30 AM
நண்பர்களே.. சொந்த பயன்பாட்டுக்காக ஒரு மடிக்கணிணி (laptop) வாங்க விரும்புகிறேன்.

எங்கு வாங்கினால் தரமானதாக விலை மலிவாக இருக்கும்?. முக்கிய பயன்பாடு ப்ரொகிரமிங் ஜாவா,பி.எச்பி மற்றும், அடோப் ப்ளாஸ்.

எந்த நிறுவனத்தின் கணிணி சிறப்பாக உள்ளது?

தகவல் கொடுத்து உதவுங்கள் நண்பர்களே..

leomohan
29-10-2007, 08:35 AM
IBM அல்லது ஏசர் நான் பரிந்துரை செய்வேன்.

குறைந்தது 2 GB நினைவகம், 240 ஜிபி வன்தட்டு மற்றும் DVD-RW-Double Layer மிகவும் அவசியம்.

பிராஸஸர் தினமும் மாறிக் கொண்டிருக்கும். அதனால் எது சமீபத்தியது என்று பார்த்து வாங்குங்கள்.

மனோஜ்
29-10-2007, 08:44 AM
compaq hp நன்றாக இருக்கம் இது என் கருத்து நல்ல சப்பொட் தருகிறார்கள்

praveen
29-10-2007, 08:51 AM
IBM அல்லது ஏசர் நான் பரிந்துரை செய்வேன்.

குறைந்தது 2 GB நினைவகம்,

விற்பனைக்கு பின் சேவையில், ஏசர் சரியானதில்லை என்பது எனது அனுபவம், அதற்கு பதில் காம்பேக்/எச்.பி நல்லது.

நடுநிலை லேப்டாப் கணினியில் அதிகபட்ச நினைவகமே 2 GB தான். ஒரளவிற்கு மேல் நினைவகம் இருந்தால் பூட் ஆக / ஷட்டவுன் ஆக நேரம் அதிகம் எடுக்கும். (எவ்வளவு நினைவகம் உள்ளதோ அதை போல்ல 1.5 மடங்கு விர்சுவல் மெமரி பைல் உங்கள் வண்தட்டில் உருவாக்கப்படும்)

1 GB நினைவகம் தாராளமானது, உங்கள் வேலைக்கு (விண்டோஸ் எக்ஸ்பியாக இருந்தால்) 512 MB(அதில் 64 sharable memoryக்கு சென்று விடும்) போதுமானது.

lolluvathiyar
29-10-2007, 08:58 AM
கனினியின் கான்பிகரேசனை நீங்கள் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி முடிவு செய்து விடுங்கள்.
பிராண்ட் விலை பொருத்தவரை என்னுடைய ஆலோசனை, உங்களுக்கு பழக்கமான டீலரிடம் வாங்கினால் நல்லது. குறிப்பாக உங்கள் நகரத்திலேயே வாங்குவது நல்லது. ஒரு 1000 2000 வித்தியாசம் இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது பிரச்சனை என்றால் அலைய வேண்டியதில்லை

alaguraj
29-10-2007, 09:14 AM
நன்றி மோகன், மனேஜ், விலை விபரம் கிடைக்குமா?

துபாயில் என்ன விலை இருக்கும்?. யு.எஸ்ஸில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்குமா? எப்படி வரவழைப்பது என்ற மேலதிகமான தகவல் தர இயலுமா?

நன்றி வாத்தியாரே..தற்போது நான் இருப்பது குவைத்தில். இன்னும் 4 மாதம் மட்டுமே இங்கு இருப்பதாக உத்தேசம். தற்போது வாரமிருதி 2 நாட்கள் வீணாகவே போகிறது..பயனுள்ள புதிய பல கற்றுக்கொள்ளலாம், மன்றத்திற்கு அடிக்கடி வரலாம் என்பதால் இந்த மாத இருதியில் வங்கலாம் என எண்ணியுள்ளேன். இங்கு உள்ள் எலக்ட்ரானிக் ஷோரூமில் மோகன் குறிப்பிட்ட கான்பிரேசன் 360 KWD ஆகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 51,000. சென்னை விலை நிலவரம் தொரியவில்லை. நண்பர் ஒருவர் சொன்ன தகவல்படி http://www.deals2buy.com விலை மலிவாக உள்ளது ஆனால் எப்படிப்பெருவது அதன் நம்பகத்தன்மை தொரியவில்லை.

alaguraj
29-10-2007, 09:20 AM
நன்றி பிரவீண்...

1ஜிபி போதுமானதுதான் ஆனால் இப்போது அதிக மெமரி தேவைப்படும் விஸ்டா ஓஎஸ் வந்துவிட்டது அதுமட்டுமல்ல இப்போது அல்லது இனி வரும் புதிய பல சாப்ட்வேர்கள் அதிக மெமரி எடுக்கலாம் என்பதால் 2 ஜிபியை மோகன் பரிந்துரைத்துள்ளார் என்று நினைக்கிறேன்..

அன்புரசிகன்
29-10-2007, 09:30 AM
துபாயைப் பொறுத்த வரையில் 3500 - 7000 AED வரை நீங்கள் வாங்கலாம்...

அமரன்
29-10-2007, 09:36 AM
அட...அட... கேட்டதும் கிடைக்கும் சிறப்பியல்பு மன்றத்திற்கு மணி ஆரமாக அமைந்து ஜொலித்து ஜொலிக்க வைக்கிறது.. உச்ச மகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றேன்.

Mano.G.
29-10-2007, 09:55 AM
ஐயா அழகுராஜ்,
மடிக்கணணி ஓரளவு மலேசியாவில்
மலிவாக இருப்பதாக எனது வெளிநாட்டு நண்பர்கள்
மூலம் கேள்வியுற்றேன்.

முதலில் உங்கள் தேவை என்ன என்பதை
உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.

உதாரணம்
ராம் (Ram) 1 GB
நினைவகம் (HDD) 60 / 80 / 120/ 160GB
வி ஜி எ(VGA build in or sperate slot)
PROCESSOR 2 CORE DUAL (INTEL) அல்லது மற்ற தயாரிப்புக்கள் AMD
வையர்லெஸ், புளூதூத் வசதிகள்

அதன் பிறகே விலையை விசாரியுங்கள்

நான் 2 வாரத்திற்கு ஒரு முறை கணனி விற்பனை
நிலையத்திற்கு சென்று அதி நவீன கணனிகளையும்
புதிய கண்டுபிடிப்புக்களையும் பார்க்க செல்வதுண்டு

இங்கு மடிக்கணனி ரிங் 1500.00 இருந்து ரிங் 6000.00
வரையிலும் விற்பனைக்கு உள்ளது.

Acer, Compaq, MSI, HP, Dell, இன்னும் பல
பிராண்டுகள் உள்ளன.


மனோ.ஜி

ஓவியன்
29-10-2007, 10:29 AM
துபாயில் மடிக்கணினியின் விலைகளை அறிய வேண்டுமெனின் இந்த (http://www.jackys.com/j_subGroup.asp?sc=50302) சுட்டியை சொடுக்கிப் பாருங்கள். இந்நிறுவனம் அங்கு நம்பகமானது...

இதயம்
29-10-2007, 02:40 PM
சவுதியை பொறுத்தவரை விற்பனையில் அதிகம் Toshiba அதிகம் விற்பனையாவது போல் தோன்றுகிறது. காரணம், அதன் மலிவு மற்றும் தரம் என்கிறார்கள் என் நண்பர்கள். நான் வைத்திருப்பது hp வகையை சேர்ந்தது. 2 வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லை.

ஓவியன்
29-10-2007, 02:47 PM
உண்மைதான் இதயம் உலகளாவிய ரீதியில் Toshiba தான் விற்பனையில் முன்னணியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு என்னவோ எப்பவுமே Dell தான் பிடித்தமானது. :) நானும் தொடர்ந்து அதனையே பாவித்து வருகிறேன்....

அருமையான பாவனையை உணர்கின்றேன்...!!! :)

நண்பர்களிடம் Toshiba, HP உள்ளது, ஆனால் எனக்கென்னவோ அவை அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

அறிஞர்
29-10-2007, 02:51 PM
அமெரிக்காவில் கணினி விலை மலிவு....

500 டாலர் முதல் தோஷிபா கணினிகள் கிடைக்கிறது...... 1000 டாலருக்கு நல்ல கான்பிகிரேஷன் கிடைக்கிறது.....

தாங்கள் எதற்காக உபயோகிக்க போகிறீர்கள்.... என்பதை பொறுத்து.. கான்பிகிரேஷனை தாங்களே தேர்ந்தெடுத்து பாருங்கள்..

இதயம்
29-10-2007, 02:54 PM
அமெரிக்காவில் கணினி விலை மலிவு....

500 டாலர் முதல் தோஷிபா கணினிகள் கிடைக்கிறது...... 1000 டாலருக்கு நல்ல கான்பிகிரேஷன் கிடைக்கிறது.....

தாங்கள் எதற்காக உபயோகிக்க போகிறீர்கள்.... என்பதை பொறுத்து.. கான்பிகிரேஷனை தாங்களே தேர்ந்தெடுத்து பாருங்கள்..

அவர் மடிக்கணியை பற்றி கேட்கிறார். நீங்கள் சொன்ன 500 டாலர்களில் மடிக்கணினிகள் கிடைக்கின்றனவா..?

அறிஞர்
29-10-2007, 02:57 PM
அவர் மடிக்கணியை பற்றி கேட்கிறார். நீங்கள் சொன்ன 500 டாலர்களில் மடிக்கணினிகள் கிடைக்கின்றனவா..?

ஆமாம் அமெரிக்காவில் மடிக்கணினிகள் 450 டாலர் (ஏசெர்) முதல் கிடைக்கும்.

தோஷிபா, எச்பி 550 டாலர் முதல் கிடைக்கும்
http://www.compusa.com/products/product_info.asp?pfp=BROWSE&N=200334&Ns=display%5Fprice%7C0&product_code=348055

இன்னும் பல தளங்கள் உள்ளன...

ஓவியன்
29-10-2007, 03:03 PM
500 - 1000 டாலர்கள் என்றால் துபாய் மட்திப்புப் படி கிட்டத்தட்ட 2000 திர்ஹாம் தொடக்கம் 4000 திர்ஹாம் வரை....

2000 திர்ஹாமுக்கு நல்ல கணினி கிடைப்பது துபாயில் கொஞ்சம் கடினம் தான், ஆனால் 4000 திர்ஹாமென்றால் அசத்தலான ஒரு கணினி வாங்க முடியும். :)

அன்புரசிகன்
29-10-2007, 03:11 PM
4000 திர்ஹாமென்றால் அசத்தலான ஒரு கணினி வாங்க முடியும். :)

உங்க கணிணியை சொல்லுறீங்களா.... அதை தள்ளிவிட பார்க்கிறீர்கள் போல.... :lachen001: :lachen001: :lachen001:

ஓவியன்
29-10-2007, 03:23 PM
உங்க கணிணியை சொல்லுறீங்களா.... அதை தள்ளிவிட பார்க்கிறீர்கள் போல.... :lachen001: :lachen001: :lachen001:

ஹீ,ஹீ!!!

இப்போதெல்லாம் உமக்கு சும்மா பக்கென்று விளக்கு எரிகிறதே, எப்படியப்பா அன்பு இப்படி...??? :icon_rollout:

அன்புரசிகன்
29-10-2007, 03:26 PM
ஹீ,ஹீ!!!

இப்போதெல்லாம் உமக்கு சும்மா பக்கென்று விளக்கு எரிகிறதே, எப்படியப்பா அன்பு இப்படி...??? :icon_rollout:

எல்லாம் இப்படித்தான்... :icon_hmm:....

ipsudhan
29-10-2007, 04:51 PM
என் அனுபவத்தில்,
விலையை பற்றி கவலை இல்லையெனில் Sony vaio
விலை குறைவாகவும்+நல்ல performance எனில் DELL.

மாதவர்
30-10-2007, 03:16 AM
பயனுள்ள தகவல்கள்

alaguraj
30-10-2007, 06:01 AM
நன்றி அன்பு இதயம் மானோ..

அறிஞர், ஓவியன் கொடுத்த தளங்கள் உபயோகமயுள்ளது.

மன்றத்தில் கேட்டதும் உடனே கிடைக்கிறது என்ற அமரனின் வாயில் சர்க்கரைய போடுங்கப்பா......

அப்படியே மன்றத்து வாசலிலெ ஒரு திருஷ்டிபூசணிக்காயும் மறக்காம ஒடச்சுடுங்க...

நண்பர்களே 1000 டாலருக்குள் இருந்தால் நன்று என நினைக்கிறேன்..

ஆனால் அமெரிக்காவிலிருந்து எப்படி சென்னைக்கு வரவழைப்பது என்று விளக்கினால் கோடி புண்ணியம்.

விகடன்
30-10-2007, 08:06 AM
டுபாயில் இலகுகாவு கணினி மலிவாக இருக்கிறதோ இல்லையோ!!!
அங்கு இருக்கும் கணினியின் விசைப்பலகையில் ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். அரபு தெரியாதவர்களிற்கு அது ஓர் தேவையற்றதும் பார்ப்பதற்கு இடைஞ்சலாகவும் இருக்கும். ஆகையால் தேவை, பொருளாதார நிலமை என்பவற்றையும் வியாபாரத்தின் பின்பு சேவையையும் கருத்திற்கொண்டு வாங்குமிடம், தரம் போன்றவற்றை முடிவெடுக்கவேண்டும்.

எனது கருத்துப்படி எச்.பி இல் மலிவானவிலையில் வலுவான பொருட்கள் பெறலாம். தரத்தைப் பற்றி உறுதிபடச் சொல்லும் அளவிற்கு அடிபட்ட நபரில்லை நான்.

இதயம்
30-10-2007, 08:28 AM
ஆனால் அமெரிக்காவிலிருந்து எப்படி சென்னைக்கு வரவழைப்பது என்று விளக்கினால் கோடி புண்ணியம்.

சொல்லிட்டீங்கள்ல.. கொஞ்சம் காத்திருங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பார்சல் சர்வீஸ் காரங்க வந்து பதிவு போடுவாங்க..!

தமிழ் மன்றத்தில் வாடிக்கையாளர் சேவை என்று தனிப்பகுதியே ஆரம்பிக்கலாம்..!!

alaguraj
30-10-2007, 12:06 PM
தமிழ் மன்றத்தில் வாடிக்கையாளர் சேவை என்று தனிப்பகுதியே ஆரம்பிக்கலாம்..!!

பலே சரியான யோசனை...ஆனா வர்த்தக விளம்பரமா பயன்படுத்தாம இருக்க வேண்டும்..நிர்வாக குழு கவனிக்கவேண்டிய கோரிக்கை...


அது என்ன விராடன் இலகுகாவு கணினி ?

ஒருவேளை இலகுவாக நம்நேரத்தையெல்லாம் காவு வாங்குவதால் இப்படி சொன்னீங்களோ?...

ramanan4u
03-11-2007, 04:31 AM
தோழரே உங்கள் தேடலுக்கு சரியான தளம் www.ebay.com இங்கு உலகிலுள்ள தரமான பொருட்கள் மிகவும் மலிவாக கிடைக்கும் வியாபாரியின் நம்பகத்தன்மையை இத்தளத்திலேயே தெரிந்து கொள்ளலாம். இத்தளம் உங்களுக்கு புதிது என்றால் பொருளை வாங்குவதற்கு முன்னர் என்னையோ அல்லது இத்தளதின் பயனை பெற்றவரிடமோ ஒரு முறை ஆலோசனை செயவும்